முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் ஆரணி தொகுதியில், காங்கிரஸ் சார்பாக முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான எம்.கிருஷ்ணசாமியும், அ.தி.மு.க. சார்பாக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் முக்கூர் சுப்பிரமணியனும், தே.மு.தி.க. சார்பாக மோகனும் முண்டா தட்டுகிறார்கள்!

செய்யாறு சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாகத் தன் மகன் விஷ்ணுபிரசாத் இருப்பதாலும், புதிதாக உருவான மயிலம் சட்டமன்றத் தொகுதி நீங்கலாக, மற்ற அனைத்துத் தொகுதிகளும் தி.மு.க. கூட்டணி

வசமிருப்பதாலும் கிருஷ்ணசாமி தெம்பாகவே தெரிகிறார். ஆனால், அந்தத் தெம்பைக் குறைக்கும் வகையில் இலங்கைத் தமிழர் விவகாரம் இங்கே எம்பிக் குதிக்கிறது.

ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் பெரும்பான்மை யான வாக்கு வங்கி பா.ம.க. வசமிருப்பதால், 'பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் சம்பந்தியான கிருஷ்ணசாமிக்குத்தான் அந்த ஓட்டுகள் எல்லாம் மறைமுகமாகக் கிடைக்கப்போகிறது!' என்று பேச்சு கிளம்பியது. அதை, 'உறவு வேறு, அரசியல் வேறு' என்று பேசி முடக்கிப்போட்டார் ராமதாஸ். 'அன்புச் சகோதரி'யும் பலமாகவே கண்காணிப்பு போட்டுவிட்டார்.

ஆரணி, வந்தவாசி, செய்யாறு என்று தொகுதி முழுக்க வியாபித்திருக்கும் நெசவாளர்களை வாட்டியெடுக்கும் நூல் விலை யேற்றம், மின்வெட்டுப் பிரச்னைகள் ஆளுங்கட்சிக்கு எதிராகத் தகிக்க.... சமாளிக்க வழி தேடி கையைப் பிசைகிறார் கிருஷ்ணசாமி.

அ.தி.மு.க வேட்பாளரான முக்கூர் சுப்பிரமணியன் பள்ளிப் படிப்பையே தாண்டாதவர் என்பதால், 'எங்க வேட்பாளர் படித்தவர்; கட்சித் தலைவராக இருந்தவர்; நிர்வாகத் திறமை வாய்ந்தவர்' என்றெல்லாம் காங்கிரஸ்காரர்கள் பெருமை பேசுகிறார்கள். எதிர்முகாமோ... 'காமராஜர் என்ன காலேஜ் போயா படிச்சாரு? எங்க தலைவர் எம்.ஜி.ஆர். யுனிவர்சிட்டிக்கா போனாரு? ஏழைகளோட பசியைப் போக்கறதுக்கு நல்ல மனசு இருந்தா போதும். மெத்தப் படிச்ச காங்கிரஸ் வேட்பாளர், இதுக்கு முன்னாடி எம்.பி-யா இருந்தப்ப இந்தத் தொகுதிக்கு என்ன செஞ்சாரு?'' என்று ஆரணிக்குள் ஹாரன் அடிக்கிறார்கள். செய்யாறு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கான நிலம் கையகப்

படுத்துதல் விவகாரம், ஏற்கெனவே சிப்காட்டுக்காக நிலம் கொடுத்தவர்களுக்கே இன்னும் வேலை கிடைக்காதது போன்றவற்றால் எம்.எல்.ஏ-வான விஷ்ணுபிரசாத் மீது மக்களுக்கு இருக்கும் கோபம் அவரின் அப்பாவின் வாக்குகளுக்கு பிரேக் போடுகிறது.

போளூர் தொகுதி காங்கிரஸ் வசமிருக்கிறது. இது மலைவாழ் மக்களை அதிகம் கொண்ட தொகுதி. இங்கே கலர் டி.வி. உள்ளிட்ட இலவசத் திட்டங்கள் சரியாக வந்து சேராததால் தி.மு.க. மீதான கடுப்பை காங்கிரஸ் பக்கம் திருப்பக் காத்திருக்கிறார்கள்.

சில பகுதிகளில் டி.வி. கிடைத் தாலும், அதைப் பார்ப்பதற்கு மின்சார வசதி இல்லாதது தனிக் கதை. 'ம.தி.மு.க-வில் இருந்து தாய்க்கழகம் திரும்பியிருக்கும் செஞ்சி ராமச்சந்திரன், கடந்த ஐந்தாண்டுகளில் தொகுதியைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க வில்லை. தேர்தலில் ஜெயித்து எம்.பி-யான பின் தன் பிரச்னைகளுக்காக எங்கெங்கோ ஓடியவர், தொகுதிப் பிரச்னைகளில் ஒன்றைக் கூட சரி செய்யவில்லை!' என்கிற கோபம் மக்களுக்கு இருக்கிறது. இதுவும் காங்கிரஸ் வேட் பாளரைத்தான் கடித்து வைக்கும்!

நெசவாளர்களின் கஞ்சித்தொட்டி பிரச்னையில் ஆரம்பித்து... இலங்கைத் தமிழர் பிரச்னை வரை இந்தத் தொகுதியில் காங்கிரஸின் 'கை'யைக் கட்டிப் போட்டிருப்பதே முக்கூர் சுப்பிரமணியனுக்கு சர்க் கரையாக இனிக்கிறது.