இரட்டை இலையும் சூரியனும் நேருக்கு நேர் மோதினாலும்... சூரியனின் வேட்பாளர் தி.மு.க. இல்லை இங்கே! அ.தி.மு.க சார்பில் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரான எல்.கே.எம்.பி. வாசு நிறுத்தப்பட்டிருக்க... அவருக்கு எதிராக தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த அப்துல் ரகுமான் போட்டியிடுகிறார். பெருவாரியான முஸ்லிம் இன ஓட்டுகளை மனதில் வைத்து தே.மு.தி.க-வும் சௌகத் ஷெரீப் என்பவரை நிறுத்தியிருக்கிறது.

தொகுதியில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் முதலியார் சமூகத்தினர். அவர்கள்

நிறைந்த புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம், இந்தமுறை முதலியார் சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. வேட் பாளர் எல்.கே.எம்.பி.வாசுவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.அதனால் வாசு பக்கம் சந்தோஷ வாசம்.

வேலூர் தொகுதியின் சிட்டிங் எம்.பி-யான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், தொகுதியின் பிரதான பிரச்னையான பாலாறு விவகாரத்தைக் கண்டு கொள்ளவில்லை என்று மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். அறிவாலயத்துப் பக்கம் போன அளவு கூட அவர் தொகுதிப் பக்கம் வந்ததில்லை என்ற கோபமும் சேர்ந்துவிட்டது. 'முஸ்லிம் சமூகப் பெண்கள் படிக்கும் வகையில் தொகுதியில் பெண்கள் அரபிக் கல்லூரி தொடங்குவேன்!' என்று கடந்த தேர்தலில் சொன்னதையும் அவர் செய்ய வில்லை. இதையெல்லாம் மனதில் வைத்தோ என்னவோ... 'வேலூர் தொகுதியை தவிர்த்து தமிழகத்தின் இதர பகுதிகளில் பிரசாரம் செய்தால் போதும்!' என்று காதர் மொகிதீனிடம் தி.மு.க. தலைமை சொல்லிவிட்டதாம்! இருந்தாலும் அவரை மக்கள் 'மறக்காதபடி' பார்த்துக்கொள்கிறது அ.தி.மு.க. கூட்டணி! 'திருச்சியில் இருந்து வந்த காதர்மொகிதீனே எதையும் செய்யாத நிலையில், தஞ்சாவூரில் பிறந்த அப்துல் ரகுமான் எப்படி பிரச்னைகளைத் தீர்ப்பார்? அட... அவர்களாலேயே முடியவில்லை. டெல்லிக்காரரான தே.மு.தி.க. வேட்பாளர் சௌகத்ஷெரீப் என்ன செய்துவிடப் போகிறார்? மண்ணின் மைந்தரான வாசுதான் எப்ப வும் உங்களோடு!' என்பது ரெட்டை இலையின் பிரசாரம்.

விவசாயிகள் அதிகமுள்ள அணைக்கட்டு ஏரியா வில் மின்வெட்டுப் பிரச்னையால் ஆளுங்கட்சி மீது கடும் அதிருப்தி. குடியாத்தம் பகுதியில் தீப்பெட்டி மற்றும் நெசவுத்தொழில் செய்யும் மக்களும் மின்வெட்டு காரணமாக தங்கள் பிழைப்பில் வெட்டு விழுந்த வெறுப்பில் இருக்கிறார்கள். சமீபத்தில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல், வரிகளை உயர்த்தியதும்... தி.மு.க. மீதான கோபத்தை விசிறிவிடுகிறது. இதெல்லாமே முஸ்லிம் லீக் வேட்பாளரான அப்துல் ரகுமா னுக்கு மண்டையிடி!

அதைப்பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாமல், 'என்றைக்குமே இஸ்லாமியர்களின் தோழனா கத்தான் தி.மு.க. இருந்து வருகிறது' என்பதை உரக்கச் சொல்லி களத்தில் நிற்கிறார் அவர்.

'இரண்டு பெரிய கட்சிகளும் செய்யத் தவறிய விஷயத்தை, நான் வெற்றி பெற்றால் செய்து கொடுக்கிறேன்!' என்று பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைகளை தீர்த்து வைப்பதாகச் சொல்லியதோடு நிற்காமல், தொகுதியின் பிரச்னைகளையெல்லாம் அடுக்கி, போகும் இடங்களிலெல்லாம் உறுதிமொழிப் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார் தே.மு.தி.க-வின் சௌகத்ஷெரீப். வெயில் சுட்டெரிக்கும் வேலூரில் இரட்டை இலை பக்கம் கூடுதல் காற்று வீசுவதற்கு, சூரியனுக்கு எதிராக இருக்கும் சூடுதான் காரணமாக அமையும்.