செங்கல்பட்டு நாடாளுமன்றத் தொகுதிதான், சீரமைப்புக்குப் பிறகு காஞ்சிபுரம்(தனி) தொகுதி யாக மாறியிருக்கிறது. ஏற்கெனவே இத்தொகுதியில் இருந்த செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், திருப்போரூர், அச்சிரப்பாக்கம், காஞ்சிபுரம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் அச்சிரபாக்கம் நீக்கப்பட்டு, செய்யூர்(தனி) சேர்க்கப்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க. வேட்பாளரான டாக்டர் ராமகிருஷ்ணனுக்கு எதிராக தி.மு.க. கூட்டணி சார்பில், காங்கிரஸின் விஸ்வ நாதன் களமிறங்கியிருக்கிறார். இவர் தொகுதியைச் சாராத வாரக இருப்பதும், காங்கிரசுக்குப் பெரிய அளவில் ஓட்டு வங்கி இங்கே இல்லாததும் அ.தி.மு.க-வினருக்கு ஆறுதல்!

ராமகிருஷ்ணன், 80-களில் தி.மு.க-வில் இருந்தபோது அச்சிரப்பாக்கம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர். ஆதிதிராவிட நலத் துறை அமைச்சராக இருந்த வர். பிறகு, அ.தி.மு.க-வில் இணைந்தபோதும் 1991-ம் ஆண்டு அச்சிரப்பாக்கத்தில் மீண்டும் வெற்றி பெற்றவர். தொகுதி மக்களுக்கு நல்ல பரிச்சயம். பா.ம.க-காரரான ஏ.கே.மூர்த்தியின் ஆதரவாளர்கள் பலமாகவே நிறைந்திருக்கும் இந்தத் தொகுதியில், அவர்களும் ராமகிருஷ்ணனுக்கு ஆதரவு சேர்ப்பது அ.தி.மு.க-வுக்கு பெரிய சாதகம். தோழர்கள் ஆதரவும், ஈழப் பிரச்னையின் தாக்கமும் சேர்ந்தால் ராமகிருஷ்ணனை எளிதாக டெல்லிக்கு போக வைக்கும் என்று ஆரம்பத்தில் திட மான நம்பிக்கையில் இருந்த அ.தி.மு.க. தலைவர்கள் பலருக்கு, 'கை' ஏந்தி வரும் விஸ்வநாதன் நடத்தும் புயல் வேகப் பிரசாரம் அயரவைத்து விட்டது. விஸ்வநாதன் மக்களை வளைக்கச் செய்யும் தந்திரங்களும் கிலியடையச் செய்துவிட்டது. 'எதிரில் இருப்பது காங்கிரஸ் வேட்பாளர்தானே என்று துச்சமாக நினைத்த ராமகிருஷ்ணன், ஆரம்பத்தில் எங்களை கொஞ் சம் வெறுப்பேற்றினார். பிற்பாடு, விஸ்வநாதனின் வேகம் கண்டு ஓடோடி வந்தார்...' என்று குற்றம்சாட்டும் லோக்கல் அ.தி.மு.க-வினர், தேர்தலில் என்ன செய்வார்கள் என்பது மூடுமந்திரமாகவே இருக்கிறது.

முன்னாள் திருப்போரூர் எம்.எல்.ஏ. கனிகா சம்பத்தின் கணவரும் காட்டாங்குளத்தூர் ஒன்றியச் செயலாளருமான சம்பத்துக்கு சொந்தமான தென்னந்தோப்பில் வைத்து அ.தி.மு.க. கட்சிப் பிரமுகர்கள் கூட்டம் தேர்தலை ஒட்டி நடத்தப்பட்டது. அப்போது, அங்கு வந்த வேட்பாளர் ராமகிருஷ்ணனை நோக்கி வரிசையாக பல குறைகளை அடுக்கிக் காய்ச்சி எடுத்திருக்கிறார்கள் அ.தி.மு.க. கட்சித் தலைவர்கள். ஒருகட்டத்தில் ராமகிருஷ்ணன் பதில் சொல்ல முடியாமல் அழுதேவிட்டாராம். இதே போல், சுலோசனா சம்பத் பங்கேற்ற திருப்போரூர் மீட்டிங்கிலும், 'சால்வைகூடப் போடவில்லை' என்று வேட்பாளரை அர்ச்சித்தார்களாம். இப்படி பண விஷயத்தில் கடைசி வரையில் கறார் காட்டிக் கொண்டிருந்ததால், ஆரம்பத்தில் ராமகிருஷ்ணனோடு வலம் வந்த பா.ம.க-வின் ஏ.கே.மூர்த்தியின் ஆட்களும் கழன்று கொள்ள, பிரசாரத்தில் திக்கித் திணறினாராம்.

விஸ்வநாதனை தாமதமாக வேட்பாளர் என காங்கிரஸ் தரப்பு அறிவித்தாலும், விருட்டென்று தொகுதிக்குள் புகுந்த விஸ்வநாதன், அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களையும் கைப்பற்றினார். மொடமொட தாள்களை வாரி வழங்க, மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்தவர்கள்... பிரசாரத்திலும் பக்காவாக கூட நின்று உதவினார்கள். உள்ளூர் ஆட்களை மட்டுமே நம்பினால், உள்ளடி வேலைகளை தடுக்க முடியாது என்று கணக்குப் போட்ட விஸ்வநாதன், நாசூக்காக அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு, வெளியூர் ஆட்களை கொண்டு வந்து இறக்கி காரியங்களை கச்சிதமாக முடித்துத் தெம்போடு திரிகிறார்.

தே.மு.தி.க. வேட்பாளரான தமிழ் வேந்தன், செங்கல்பட்டில் நன்கு அறிமுக மானவர் என்றாலும், பணம் இல்லாத குறையால், சுணக்கமாகவே இருந்துவிட்டார். தொகுப்பு வீடுகளைக் குறிவைத்து பி.எஸ்.பி. வேட்பாளரான உத்திராபதியும் தன்னால் முடிந்த அளவுக்கு கரன்ஸி சேவை செய்து 'யானை' சின்னத்துக்கு ஓட்டுக் கேட் பது இங்கே ஆச்சர்யமான காட்சி! தொகுதியில் தீர்க்க வேண்டிய பிரதான பிரச்னைகள் பற்றி யாருமே அக்கறைப்படாத நிலையில், அ.தி.மு.க-வின் வாக்குகளும் கூட்டணி கட்சிகளின் வாக்குகளும் எதிர்பார்த்தபடியே விழுந்தாலும்கூட, வெளியிலிருந்து விஸ்வநாதனுக்கு வரும் பலவித பலங்கள் கடைசி நேரத்தில் 'கை'யை ஒரு ஸ்டெப் தூக்கிவிடும் வாய்ப்பு தெரிகிறது.