Goa Election Result: கோவாவில் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பலுக்குப் பின்னடைவு! | Live Updates
அதிக எதிர்பார்ப்பு உள்ள கோவா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நிலவரம் உடனுக்குடன்....
பாஜக vs காங்கிரஸ்... கோவாவில் கடும் போட்டி... உதவுவாரா மம்தா?

கோவா சட்டப்பேரவை தேர்தலில் தற்போது மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்குமான முன்னணி நிலவரம் வெளிவந்திருக்கிறது. அதில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. ஆட்சி அமைக்க 21 இடங்களில் வெற்றி தேவை என்ற நிலையில் தற்போதையை மம்தா ஆதரவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். வாக்கு எண்ணிக்கையின் முடிவு வரை காத்திருப்போம்
மனோகர் பாரிக்கரின் மகன் உத்பலுக்குப் பின்னடைவு!
பனாஜி தொகுதியில் போட்டியிட்ட கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கருக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அந்த தொகுதியில் உத்பலை பின்னுக்குத் தள்ளி பா.ஜ.க வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கோவாவில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி!
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
Goa Election Result 2022: தொடங்கியது விறுவிறு வாக்கு எண்ணிக்கை!
கோவா மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கான வாக்கு எண்ணிக்கையானது தற்போது தொடங்கியிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் சுற்றுகள் வாரியாக முன்னணி நிலவரம் தெரியவரும்...
5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்... முன்னணி நிலவரம்!
கோவா தேர்தல்:
கோவா மாநிலத்தில் மொத்தம் 40 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பா.ஜ.க 13 இடங்களிலும், கோவா முன்னேற்றக் கட்சி 3 இடங்களிலும், மகாராஸ்டிரவாதி கோமந்த் கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. பா.ஜ.க மற்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மார்ச் 15-ம் தேதியோடு முடிவடைகிறது. இதனையடுத்து, கோவா மாநில பொதுத்தேர்தல் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.

இந்தத் தேர்தலில் பா.ஜ.க 40 இடங்களில் தனித்துப் போட்டியிட்டுள்ளது. இந்தக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பிரமோத் சாவந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ், கோவா முன்னேற்றக் கட்சியுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்துள்ளது. கோவாவில் இந்த முறை திரிணாமுல் காங்கிரஸ், மகாராஸ்டிரவாடி கோமந்த் கட்சியுடன் கோவாவில் களம் கண்டிருக்கிறது. மேலும், ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலில் போட்டியிட்டுள்ளது. புதிதாகப் பலரும் போட்டியிடுவதால், இங்குப் பலமுனைப் போட்டி நிலவுகிறது. இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தல் முடிவுகள்:
கோவா மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதற்கட்டமாகவும், மார்ச் 5-ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. இந்த முடிவு விவரங்கள் இன்றே அறிவிக்கப்படும். தேர்தலில் முன்னணியில் இருக்கும் கட்சிகளின் விவரங்களைப் பின்வருமாறு காணலாம்...