Manipur Election Result: மணிப்பூரில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி! | Live Updates

மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நிலவரம் லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
மணிப்பூரில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி!
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
Manipur Election Result 2022: தொடங்கியது விறுவிறு வாக்கு எண்ணிக்கை!
மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கான வாக்கு எண்ணிக்கையானது தற்போது தொடங்கியிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் சுற்றுகள் வாரியாக முன்னணி நிலவரம் தெரியவரும்...
5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்... முன்னணி நிலவரம்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மணிப்பூர் தேர்தல்:
மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்களிலும், பா.ஜ.க 21 இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி 4 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. இங்கு பா.ஜ.க தலைமையில் ஆட்சி அமைந்தது. மணிப்பூர் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மார்ச் 19-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பிப்ரவரி 28-ம் தேதி முதற்கட்டமாகவும், மார்ச் 5-ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் நடைபெற்று முடிந்தது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க 60 இடங்களில் தனித்துப் போட்டியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியமைத்து தேர்தலைச் சந்தித்துள்ளது. மேலும், நாகா மக்கள் முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சியும் தேர்தலில் போட்டியிட்டுள்ளன. இவர்கள் மட்டுமின்றி தேசியவாத காங்கிரஸ், சிவசேனா போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டுள்ளன. பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
தேர்தல் முடிவுகள்:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதற்கட்டமாகவும், மார்ச் 5-ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் வாக்குப் பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. இந்த முடிவு விவரங்கள் இன்றே அறிவிக்கப்படும். தேர்தலில் முன்னணியில் இருக்கும் கட்சிகளின் விவரங்களைப் பின்வருமாறு காணலாம்...