Published:Updated:

ஜெ.மீது தொடரப்பட்ட தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு: அடுத்த மாதம் இறுதி விசாரணை!

Vikatan Correspondent

புதுடெல்லி: தேர்தல் விதிகளை மீறி 4 தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஜெயலலிதா  வேட்பு மனுத் தாக்கல் செய்தார். தேர்தல் விதிமுறைகளின் படி ஒருவர் இரு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது. அதனால்  4 தொகுதிகளில் ஒரே நேரத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா மீது  நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்.பி குப்புசாமி வழக்குத்  தொடர்ந்திருந்தார்.

வழக்கின் இடையே குப்புசாமி திடீரென மரணமடைந்ததால், ஏ.கே.எஸ்.விஜயன் மனுதாரராக இருந்து வழக்கை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை, வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.

4 தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட்ட வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என விஜயன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார். நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக 2 முறை முதல்வர்பதவி மற்றும் எம்.எல்.ஏ. பதவிகளை  இழந்தவர் ஜெயலலிதா என்று குறிப்பிட்டுள்ள அவர், முந்தைய வழக்குகளைக்  கருத்தில் கொண்டு தீர்ப்பளிக்க கோரியுள்ளார்.