Published:Updated:

சென்னை ஆர்.கே.நகர் : முதல்வர் தொகுதியில் விரட்டப்பட்ட 3 மந்திரிகள்

சென்னை ஆர்.கே.நகர் : முதல்வர் தொகுதியில் விரட்டப்பட்ட 3 மந்திரிகள்
சென்னை ஆர்.கே.நகர் : முதல்வர் தொகுதியில் விரட்டப்பட்ட 3 மந்திரிகள்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி வெள்ளத்தால் சூழப்பட்டிருந்தாலும், நிவாரணப் பணிகளில் நேரடியாக அரசு அதிகாரிகளோ மந்திரிகளோ ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு தொகுதி மக்களிடம் அதிகமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று (4-12-2015) பகல்,  வடசென்னையில் உள்ள முதல்வர் தொகுதியான ஆர்.கே.நகருக்கு நேரில் வந்து நிவாரணப் பணிகளை முடுக்கி விட மந்திரிகள் செல்லூர் ராஜூ,  நத்தம் விஸ்வநாதன் மற்றும் கோகுல இந்திரா வந்திருந்தனர்.

சென்னை ஆர்.கே.நகர் : முதல்வர் தொகுதியில் விரட்டப்பட்ட 3 மந்திரிகள்

மந்திரிகள் தொகுதிக்கு வந்திருப்பதை அறிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்,  அவர்கள் வருகையை கோபத்துடன் எதிர்நோக்கி, முக்கிய பாய்ண்டான நேதாஜிநகர் ஆறாவது தெருவுக்கு வந்து கும்பலாக நின்று விட்டனர். பொதுமக்களின் வேகத்தை அறிந்த மூன்று மந்திரிகளும், கார்களை விட்டு கீழிறங்காமல் காரில் உட்கார்ந்தபடியே வெள்ளத்தின் தீவிர பாதிப்பை நோட் - பேடில் குறித்துக் கொண்டனர்.

சென்னை ஆர்.கே.நகர் : முதல்வர் தொகுதியில் விரட்டப்பட்ட 3 மந்திரிகள்

ஆர்.கே.நகர். தொகுதி தண்டையார் பேட்டையின் இன்றைய மாலைப் பொழுதுக் காட்சி இது. இந்தப் படகுகளை பொதுமக்களே சொந்த செலவில் வாடகைக்கு பிடித்தும்,  தயாரித்தும் வாழ்ந்து வருவதே கோபத்தின் உச்சத்துக்கு காரணம்

ஆனால் பொதுமக்களோ, மந்திரிகளை காரில் இருந்து கீழே இறக்கி அந்த வெள்ளத்தை பார்வையிட்டு, பின் தங்களின் குறைகளை கேட்டு விட்டுப் போகும்படி, கார்களின் மீது கைகளால் தட்டி குரல் கொடுத்தனர். நிலைமை விபரீதமாகுவதை உணர்ந்து கொண்ட மந்திரிகள் "சிக்னல்" கொடுக்க,  கார் அங்கிருந்து மெல்ல மெல்ல வேகம் பிடித்து வைத்தியநாதன் மேம்பாலம் வழியாக விர்ரென்று பறந்தே விட்டது.

சென்னை ஆர்.கே.நகர் : முதல்வர் தொகுதியில் விரட்டப்பட்ட 3 மந்திரிகள்

இந்த "கோப" சேசிங்கில் லோக்கல் அ.தி.மு.க. நிர்வாகிகள்,  மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்களை சமாதானம் செய்ய முயற்சித்து அது தோல்வியில் முடிந்தது. அவர்கள் தப்பிப்பதே பெரும்பாடாகிப் போனது. இதே இடத்தில்தான் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னால் சென்னை மேயர் துரைசாமி மற்றும் சிலரோடு மந்திரிகள் வளர்மதி,  கோகுலஇந்திரா உள்ளிட்டோர் பொதுமக்களாலும் லோக்கல் பாலிடிக்சாலும் விரட்டியடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

-ந.பா.சேதுராமன்