Published:Updated:

தி.மு.க. விரும்பினால் அவர்களுக்கு பிரசாரம் செய்வேன்- நக்மா

தி.மு.க. விரும்பினால் அவர்களுக்கு பிரசாரம் செய்வேன்- நக்மா
தி.மு.க. விரும்பினால் அவர்களுக்கு பிரசாரம் செய்வேன்- நக்மா

தி.மு.க. விரும்பினால் அவர்களுக்கு பிரசாரம் செய்வேன்- நக்மா

சென்னை: தி.மு.க. விரும்பினால் அவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என்று மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா தெரிவித்துள்ளார்.

சென்னை முகப்பேரில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அதன் பின்னர் நக்மா செய்தியாளர்களிடம் கூறும்போது, காங்கிரஸ்-தி.மு.க. ஏற்கனவே வெற்றி கூட்டணி, அதை மீண்டும் வரும் சட்டமன்றத் தேர்தலில் நிருபிப்போம். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி குறித்து விமர்சித்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை, வியாபம் ஊழல் மற்றும் லலித் மோடி விவகாரங்களை மறந்துவிட்டு பேசுகிறார். பா.ஜ.க. ஆட்சியில் விலை வாசி உயர்வு போன்ற பல பிரச்னைகள் உள்ளன.

மேலும், தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைமை அனுமதித்தால், தமிழகத்தில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நான் போட்டியிடுவேன். அதே நேரம், தி.மு.க. விரும்பினால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு