Published:Updated:

'சீட்' கேட்கும் அண்ணா காலத்து தளபதிகளின் வாரிசுகள்... கண்டுகொள்வாரா கருணாநிதி?

'சீட்'  கேட்கும் அண்ணா காலத்து தளபதிகளின் வாரிசுகள்... கண்டுகொள்வாரா கருணாநிதி?
'சீட்' கேட்கும் அண்ணா காலத்து தளபதிகளின் வாரிசுகள்... கண்டுகொள்வாரா கருணாநிதி?

'சீட்'  கேட்கும் அண்ணா காலத்து தளபதிகளின் வாரிசுகள்... கண்டுகொள்வாரா கருணாநிதி?

ந்தியாவில் பொதுத்தேர்தல் அறிமுகமாகி, இரண்டாவது தேர்தலான 1957-ம் ஆண்டு முதல் தேர்தல் களம் காண்கிறது தி.மு.க.

தற்போது 13-வது முறையாக 2016 தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமை, சங்கடமான சில சோதனைகளை சந்திக்க உள்ளது. அந்த சோதனைகள் திமுக அரசியல் ரீதியாக சந்தித்த சோதனைகளை ஒப்பிடும்போது மிக சாதாரணமானதுதான். ஒருவகையில் அந்த சோதனைகளுடன் தொடர்புடையதுதான்.

ஆம்...திமுகவின் ஆரம்பகாலங்களில் அண்ணாவுக்கும்,  கட்சியின் வளர்ச்சிக்கும் உழைத்த திமுக முன்னோடிகளின் 3 வது தலைமுறை,  இந்த தேர்தலில் தொகுதி கேட்டு நிற்பதுதான்.

திராவிடர் கழகம் இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி,  மக்களிடையே சுயமரியாதை,  பகுத்தறிவு முழுக்கங்களை பரவலாக்கிய நேரத்தில்,  பெரியாரின் சீடர்களாக தோளோடு தோள் நின்று களப்பணியாற்றியவர்கள் அண்ணா, கருணாநிதி, கே.ஏ மதியழகன், காஞ்சி சி.வி.எம் என்றழைக்கப்பட்ட சி.விஎம். அண்ணாமலை உள்ளிட்டவர்கள். பெரியாருடன் முரண்பட்டு அண்ணா தனிக்கட்சி கண்டபோது அத்யந்த சீடர்களான இவர்களும் அண்ணாவின் வழிநடந்தவர்கள்.

அண்ணாவின் மறைவை தொடர்ந்து, கருணாநிதி பொறுப்பிற்கு வந்த பின்னர்,  திமுக சந்தித்த சோதனைகள் பலப்பல. அண்ணாவுடன் திமுகவை கட்டிக்காத்தவர்களில் ஒருசிலர் மட்டுமே கருணாநிதியுடன் அந்த இக்கட்டான நேரத்தில் துணை நின்றவர்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அன்பில் தர்மலிங்கம், காஞ்சி சி.வி.எம்,  மண்ணை நாராணயசாமி மு.சாதிக்பாட்ஷா இன்னும் சிலர். மூவரும் தமிழக அமைச்சர்களாக இருந்தவர்கள்.

காஞ்சியில் அண்ணாவைக் காண வேண்டுமெனில்,  சி.வி.எம். அண்ணாமலையின் அனுமதியின்றி யாரும் அவரது வீட்டிற்கு சென்றுவிட முடியாது. கருணாநிதியாக இருந்தாலும் சி.வி.எம் நினைத்தால்தான் சந்திக்க முடியும் என்பார்கள். அண்ணாவுக்கு அவ்வளவு நெருக்கம் அவர். அன்பில்,  அண்ணாவின் முரட்டுத் தம்பி, கருணாநிதிக்கு உடன்பிறவா சகோதரன். அன்பிலுடன் அண்ணா, அவரது மகன் பொய்யாமொழியுடன் ஸ்டாலின், பேரன் மகேஸ் உடன் உதயநிதி என அரசியலை மீறிய நட்பு இவர்களுடையது. இவர்களில் மன்னை நாராயணசாமி “அரசியல் என்றால் நேர்மை நேர்மை என்றால் மன்னை” என அண்ணாவால் புகழப்பட்ட பெருமைக்குரியவர்.

'சீட்'  கேட்கும் அண்ணா காலத்து தளபதிகளின் வாரிசுகள்... கண்டுகொள்வாரா கருணாநிதி?

இவர்களில் சாதிக் பாட்ஷா தவிர,  மற்றவர்களின் இந்த தலைமுறை வாரிசுகள்தான் தேர்தலில் சீட் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள். அன்பில்  பேரன் அன்பில் மகேஷ், சி.வி.எம் பேரன் சி.வி.எம்.பி.எழிலரசன், மன்னை  பேரன் மன்னை சோழராஜன் இவர்கள்தான் அவர்கள். கட்சிக்கு உழைத்திட்ட சீனியர்கள் தொகுதிகளை கேட்டு கருணாநிதியை வட்டமடித்துக்கொண்டிருக்க,  இந்த சக்திகளையெல்லாம் மீறி இந்த மூவருக்கும் தாத்தா கோட்டாவில் சீட் கிடைக்குமா என வாத பிரதிவாதங்கள் நடக்கிறது தொகுதிகளில்.

அண்ணாவிற்குப்பின் திமுக அதிகாரத்திற்கு வந்தபோது,  அடுத்தடுத்த பல தலைவர்கள் உருவாகி அவர்களின் வாரிசுகள் அதிகாரம்,  பொறுப்பு என அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து ஓய்வுக்கே சென்றுவிட்ட நிலையில்,  அண்ணாவிற்கும் திமுகவிற்கும் துணைநின்ற இவர்களைப்போன்றவர்களின் வாரிசுகளை அடையாளங்காண்பது கருணாநிதி,  தனது தோழர்களுக்கு நன்றி செய்வதாக இருக்கும் என்கின்றனர் அந்த தொகுதிகளின் மூத்த நிர்வாகிகள்.

'சீட்'  கேட்கும் அண்ணா காலத்து தளபதிகளின் வாரிசுகள்... கண்டுகொள்வாரா கருணாநிதி?

இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக மூத்த உறுப்பினர் ஒருவர், “தி.மு.க அரசியல் வரலாற்றில் தற்போது 2016 தேர்தல் முக்கியமானது. தி.மு.க. வேட்பாளர் தேர்வில் கலைஞர் போன்ற மூத்தவர்கள், மத்திய வயதுடையவர்கள், இளைஞர்கள் என்ற கலவையுடன் இருந்திட தலைமை ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல். தொடர்ந்து பலமுறை அமைச்சர்களாக இருந்த மூத்தவர்களை ஒதுக்கிவிட முடியாத நிலை. அதே நேரத்தில் புதியவர்களுக்கு குறிப்பாக இளைஞர்களை தேர்தல் களத்தில் நிறுத்த வேண்டும் என்ற ஸ்டாலினின் எண்ணத்தை புறந்தள்ளிவிடமுடியாத நிலை. இவற்றுக்கிடையில்தான் கருணாநிதி இப்போது தத்தளித்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் அனுபவமும் கட்சிக்கு உழைத்த முன்னோடிகளின் வாரிசுகளை கருணாநிதி அடையாளம் கண்டால் அது தேர்தல் வெற்றிக்கு உதவும்.

எப்போதும் இளைய தலைமுறை, புதிய எண்ணம், சுறுசுறுப்பு இவை எந்த விஷயத்திலும் சோடைபோவதில்லை. இது தி.மு.க.விற்கு புதிதுமில்லை. திமுக போட்டியிட்ட முதல் தேர்தலில் பெரும்பாலோனோர் இளைஞர்களே. 1957-ல் அண்ணாவிற்கே வயது 48 தான். கலைஞருக்கு 33. 1967-லும் தி.மு.க. ஆட்சியில் முதலில் பொறுப்பேற்ற போது பெரும்பான்மையானவர்கள் 40 வயதை ஒட்டியவர்கள்தான். அதேபோன்று 1996-ம் ஆண்டு தேர்தலின் போதும் பாதிக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் புதியவர்கள். தற்போது ஆண்டுகள் கடந்தும் எழுச்சி குறையாமல் மக்கள் மனதில் முக்கிய கட்சியாக தி.மு.க. இயங்கிக் கொண்டிருப்பதன் ரகசியமும் இதுதான்.

ஒருவகையில். பெரியார், அண்ணா, காமராஜர், ராஜாஜி போன்ற தலைவர்களுடன் அரசியல் பணியாற்றிய கலைஞரின் அனுபவம், அரசியல் முதிர்ச்சி, அரசியல் சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கும் திறன் இவை, கட்சிக்கு பெரும்பயன் என்றாலும் தலைவரின் கண்ணசைவிற்கு ஏற்ப களப்பணியாற்ற இளைய தலைமுறையினர் அவசியம்.

திமு.க இளைஞர் அணி தொடங்கிய பிறகு 1984 பொதுத்தேர்தலில் முதன் முறையாக இளைஞர் அணி சார்பில் ஸ்டாலின், அன்பில் தர்மலிங்கம் மகன் அன்பில்பொய்யாமொழி, சி.வி.எம். அண்ணாமலை மகன் சி.வி.எம்.பொன்மொழி, பரிதி, வாலாஜா அசேன் ஆகிய ஐந்து வேட்பாளர்கள் களம் கண்டனர்.

'சீட்'  கேட்கும் அண்ணா காலத்து தளபதிகளின் வாரிசுகள்... கண்டுகொள்வாரா கருணாநிதி?

தற்போது முப்பது ஆண்டுகள் கழித்து,  தி.மு.க.வின் அடுத்த தலைமுறை இளைஞர்களாக அன்பிலின் பேரன் அன்பில் மகேஷ், சி.வி.எம் பேரன் சி.வி.எம்.பி. எழிலரசன், மன்னையின் பேரன் மன்னை சோழராஜன் என்ற மூன்றாம் தலைமுறை கருணாநிதியின் தலைமையில் களம்காண விரும்புகிறது.

வாய்ப்பு தொகுதி முன்னோடிகளின் வாரிசுகளுக்கா அல்லது தற்போதைய சீனியர்களின் வாரிசுகளுக்கா என்ற  கேள்விக்கான பதிலுக்கு இன்னும் கொஞ்சநாள் பொறுத்திருக்கவேண்டும்” என்றார்.

இவர்கள் மட்டுமின்றி, கட்சிக்கு உழைத்தவர்களின் வாரிசுகள் இன்னும் யாராவது இருந்தாலும் அவர்களையும் கருணாநிதி அடையாளம் காண முயற்சிப்பது,  கட்சிக்கு ஆரோக்கியமும் முன்னோடிகளுக்கு நன்றிக்கடன் செலுத்தியதுபோலவும இருக்கும்! 

-எஸ்.கிருபாகரன்
 

அடுத்த கட்டுரைக்கு