Published:Updated:

ஊழலுக்கு எதிராகப் பேச எங்களுக்கு மட்டுமே தகுதி உண்டு!

ஊழலுக்கு எதிராகப் பேச எங்களுக்கு மட்டுமே தகுதி உண்டு!
ஊழலுக்கு எதிராகப் பேச எங்களுக்கு மட்டுமே தகுதி உண்டு!

ஊழலுக்கு எதிராகப் பேச எங்களுக்கு மட்டுமே தகுதி உண்டு!

ஊழலுக்கு எதிராகப் பேச எங்களுக்கு மட்டுமே தகுதி உண்டு!

தீவிரப் பிரசாரத்தில் மக்கள் நலக் கூட்டணி
 

அ.தி.மு.க., தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகளில் கூட்டணி இன்னும் முடிவாகாத நிலையில், மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தங்களின் தேர்தல் பிரசாரப் பயணத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழலுக்கு எதிராகப் பேச எங்களுக்கு மட்டுமே தகுதி உண்டு!

 ‘ஊழல் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்’, ‘மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்’ என்ற முழக்கங்களுடன் தங்களுடைய 3-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை மக்கள் நலக் கூட்டணி சென்னை ஆவடியில் மார்ச் 1-ம் தேதி தொடங்கியது.

    “கொள்ளை அடிப்பதே நோக்கம்!”

முதலில் மைக் பிடித்தவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன். “எந்தவித ஒளிவுமறைவும், குழப்பமும் இல்லாத கூட்டணியாக மக்கள் நலக் கூட்டணி உள்ளது. எங்கள் கொள்கை என்ன, திட்டங்கள் என்ன என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டு செயல்படுகிறோம். தி.மு.க., அ.தி.மு.க போன்ற கட்சிகளுக்குத்தான் தெளிவு இல்லை. யார் வந்தாலும் சேர்த்துக்கொள்ள கதவைத் திறந்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். சிலர், மாட்டுச் சந்தையில் தரகு பேசுவதைப்போல ரகசியமாகப் பேரம் பேசுகிறார்கள். இவர்களுக்கு எந்தக் கொள்கையும் கிடையாது. அதிகாரத்தைக் கைப்பற்றி அரசியல் வியாபாரம் செய்ய வேண்டும், கோடிகோடியாகக் கொள்ளை அடிக்க வேண்டும் என்பதே இவர்களின் லட்சியம். ஒருபுறம், கருணாநிதியின் குடும்பம் ஊழலில் சிக்கித் தவிக்கிறது. இன்னொருபுறம், ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது. இந்த நிலையில், தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் ஊழல் பணத்தைக் கொட்டி விளம்பரங்கள் செய்கின்றன. முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஒருவரும் விளம்பரம் செய்து வருகிறார். அந்த நபர் போட்ட முதல் கையெழுத்துக்கே சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது. ஊழலுக்கு எதிராகப் பேச இவர்கள் யாருக்கும் தகுதியில்லை. எங்கள் அணிக்கு மட்டுமே அந்தத் தகுதி உண்டு” என்றார்.

ஊழலுக்கு எதிராகப் பேச எங்களுக்கு மட்டுமே தகுதி உண்டு!

“அவதூறுகளை அலட்சியம் செய்யுங்கள்!”

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “மக்கள் நலக் கூட்டணி 3-ம் கட்டப் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டது. ஆனால், மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைக்க முடியாமல் திணறி வருகின்றன. இதற்குக் காரணம் விஜயகாந்த் அல்ல, மக்கள் நலக் கூட்டணி. எந்தக் கட்சியையும் சாராதவர்களின் ஆதரவு மக்கள் நலக் கூட்டணிக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்போது, முதலமைச்சர் கனவில் மிதக்கும் ஒருவர் ஒபாமாவை காப்பியடிக்கிறார். ஊழல் செய்வதும், மது வியாபாரிக ளோடு கைகோப்பதும் மக்களுக்குச் செய்யும் துரோகம். ஊழல், மது இல்லாத ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். தேர்தல் நெருங்க நெருங்க நம்மீது சிலர் வதந்திகளைப் பரப்புவார்கள். கட்டுக்கதை களையும், அவதூறுகளையும் அள்ளி வீசுவார்கள். அவற்றை எல்லாம் அலட்சியம் செய்துவிட்டு வீடு வீடாகச் சென்று மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று வலுவாகப் பிரசாரம் செய்யவேண்டும்” என்றார்.

“ஊழல் பணத்தைப் பறிமுதல் செய்வோம்!”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், “தமிழகத்தில் கடந்த 47 ஆண்டுகளில் கருணாநிதி 5 முறையும், ஜெயலலிதா 3 முறையும் ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களை மட்டுமே வளர்த்துக்​கொண்டிருக்கிறார்கள். இந்த இரு கட்சிகளின் ஆட்சிகளில்தான் தமிழ்நாட்டின் கனிமவளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. கடந்த 20 ஆண்டுகளில் நடந்த கனிமவளக் கொள்ளை பற்றி கருணாநிதியும், ஜெயலலிதாவும் பேச மறுக்கிறார்கள். அன்புமணி ராமதாஸ் அமைச்சராக இருந்தபோது 2 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. அதில் முறைகேடு நடந்திருப்பதாக இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கைதுசெய்யப்பட்டு, அவரது வீட்டில் இருந்து 1,800 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதான் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க ஆகிய கட்சிகளின் யோக்கியதை. அரசியல் என்பது புனிதமானது. அதை, தங்களின் சுயநலத்துக்​காகவும் கொள்ளை அடிப்பதற்​காகவும் பயன்படுத்துகின்றனர். அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் ஊழல் கட்சிகள்.  மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்து, ஊழல் பணத்தை பறிமுதல் செய்வோம். மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்” என்றார்.

ஊழலுக்கு எதிராகப் பேச எங்களுக்கு மட்டுமே தகுதி உண்டு!

    “இருள் விலகும், வெளிச்சம் வரும்!”

கடைசியாக மைக் முன்பாக வந்தார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. வண்டலூரில் நடந்த பா.ம.க கூட்டத்தில் அன்புமணி நடந்துகொண்டே பேசியதைப்போல... அங்கும், இங்கும் நடந்து நடித்துக் காட்டினார் வைகோ. மின்சாரம் சற்றுநேரம் துண்டிக்கப்பட்டதால், மைக் இல்லாமல் வைகோ பேசினார்.  “தி.மு.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சியினருமே, நாட்டு மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்பதில் கைதேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும்தான் கூட்டணி அமைத்துள்ளனர். ஜெயலலிதாவும், கருணாநிதியின் குடும்பத்தினரும் குற்றவாளிக் கூண்டுகளில் நிற்கிறார்கள். அண்ணா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் தமிழகத்தை நாசப்படுத்திவிட்டனர். ‘மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’ என்று 1996-ல் சொல்லி மக்களை ஏமாற்றினார் கருணாநிதி. அதன்பிறகு 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, அந்த உறுதிமொழியை அவர் நிறைவேற்றவில்லை. 1967-க்குப் பிறகு 2016 தேர்தலில் ஓர் அதிசயம் நிகழப்போகிறது. தி.மு.க-வையும், அ.தி.மு.க-வையும் வீழ்த்தி மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைக்கப்போகிறது. தமிழகத்தில் இருள் விலகும், வெளிச்சம் வரும். மோடியை முன்னிலைப்படுத்தி ஆர்.எஸ்.எஸ் செயல்படுகிறது. அதன் விளைவுதான் வெமுலா மரணம், கண்ணையா குமார் சித்ரவதை. இந்த உண்மையைச் சொன்னதற்காக யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் மீது தேசத்துரோக வழக்கு. எது தேசபக்தி? நான் பகிரங்கமாகச் சொல்கிறேன். கண்ணையா குமார் பேசியதை ஒரு வரிகூட விடாமல் நான் பேசுகிறேன். என் மீது வழக்குப்போட மத்திய அரசு தயாரா?” என்றார்.திருவள்ளூர் கூட்டத்தில் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன் ஆகியோருக்கு நரிக்குறவ மக்கள் பாசி மாலை அணிவித்தனர். உற்சாகமாக உலா வந்து​கொண்டிருக்கிறார்கள் நான்கு தலைவர்களும்.

- எஸ்.மகேஷ்
படங்கள்: ப.சரவணகுமார்

அடுத்த கட்டுரைக்கு