Published:Updated:

வாக்காளர்களுக்கு அகல் விளக்கு கொடுத்து, வாக்கு சேகரித்த அதிமுகவினர் கைது!

வாக்காளர்களுக்கு அகல் விளக்கு கொடுத்து, வாக்கு சேகரித்த அதிமுகவினர் கைது!
வாக்காளர்களுக்கு அகல் விளக்கு கொடுத்து, வாக்கு சேகரித்த அதிமுகவினர் கைது!

வாக்காளர்களுக்கு அகல் விளக்கு கொடுத்து, வாக்கு சேகரித்த அதிமுகவினர் கைது!

வாக்காளர்களுக்கு அகல் விளக்கு கொடுத்து, வாக்கு சேகரித்த அதிமுகவினர் கைது!

தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழகம் முழுவதும் பறக்கும்படை அதிரடியாக செயல்பட்டு வருகின்றது. பல இடங்களில் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் கரன்சிகள் வேட்டையாடப்பட்டன. அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியில் தேர்தல் அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு பொதுமக்களுக்கு வெண்கல அகல் விளக்கு கொடுத்து வாக்கு சேகரித்த் அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதிக்குட்பட்ட விராலிமலை தாலுகாவில் உள்ள சித்திரம்பட்டி பகுதியில்  அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு அகல்விளக்கு கொடுத்து வாக்கு சேகரித்துக்கொண்டிருப்பதாக தேர்தல் கமிஷனின் இலவச புகார் எண்ணுக்கு புகார் சென்றது.

அதன்பேரில், இலுப்பூர் ஆர்.டி.ஒ வடிவேல் பிரபு, தாசில்தார் அடங்கிய குழு சித்திரம்பட்டி பகுதிக்குட்பட்ட, நீலவெளி, அகலப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று அங்கு பொதுமக்களுக்கு அகல்விளக்குகளை இலவசமாக வழங்கி, இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த அப்பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் மாமுண்டி, சண்முகம் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், அவர்கள் பொதுமக்களுக்கு கொடுக்க வைத்திருந்த 98 அகல்விளக்குகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட விளக்குகள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களை விராலிமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.  இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் அறிவிப்பு வந்தபிறகு இன்னும் கூட்டணி அறிவிப்புகளும், வேட்பாளர் அறிவிப்புகளே வெளியாகாத நிலையில், அ.தி.மு.க.வினர் விராலிமலை தொகுதியில் விளக்குகள் வழங்கி வாக்கு சேகரித்து தேர்தல் அதிகாரிகளிடம் சிக்கியிருப்பது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விராலிமலை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதி என்பதும், அவர் மீண்டும் விராலிமலை தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க தலைமையில் விருப்பமனு கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சி.ஆனந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு