Published:Updated:

தேர்தல் ஆணையம் நடத்திய இளம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் சார்பில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பல்வேறு விளம்பரங்களை செய்து வருகின்றது.

தேர்தல் ஆணையம் நடத்திய இளம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

இந்த வகையில் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிக அளவில் இருப்பதால், 18 வயது நிரம்பி கல்லூரி பயின்று வரும் இளம் புதிய வாக்களர்களுக்கு தேர்தல் குறித்தும், தேர்தலில் வாக்குரிமை எவ்வளவு அவசியம் என்பதையும் வலியுறுத்தியும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் ஆணையம் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

தேர்தல் ஆணையம் நடத்திய இளம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

நாகர்கோவிலில் தேர்தல் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவிகளுக்கு 'வாக்காளர் கையெழுத்து இயக்கம்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (9-ம் தேதி) நடைபெற்றது. இதில்,  'மே 16 அன்று நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் எனது வாக்கினை எந்தவித பயமும், தயக்கமும் இல்லாமல் பதிவு செய்வேன் என உறுதியளிக்கிறேன்' என்ற வாசகத்துடன் கூடிய ப்ளெக்ஸ் பேனர் அமைக்கப்பட்டிருந்தது. இதில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜன் சிங் ஆர் சவான் முதலில் தன் கையெழுத்தை இட்டு, கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து மாணவிகள் அனைவரும் தங்கள் கையெழுத்தை ஆர்வமுடன் இட்டனர்.

தேர்தல் ஆணையம் நடத்திய இளம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

மேலும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடன் மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்று தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முதன் முதலில் இந்த தேர்தலில் வாக்களிக்க போகும் இளம் வாக்களர்கள் எந்த வித பயமும், தயக்கமுமின்றி  தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்தி, படங்கள்: ரா.ராம்குமார்

அடுத்த கட்டுரைக்கு