Published:Updated:

தேர்தலில் அரசியல் கட்சிகளை புறக்கணிக்க குமரி மீனவர்கள் முடிவு!

தேர்தலில் அரசியல் கட்சிகளை புறக்கணிக்க குமரி மீனவர்கள் முடிவு!
தேர்தலில் அரசியல் கட்சிகளை புறக்கணிக்க குமரி மீனவர்கள் முடிவு!

தேர்தலில் அரசியல் கட்சிகளை புறக்கணிக்க குமரி மீனவர்கள் முடிவு!

தேர்தலில் அரசியல் கட்சிகளை புறக்கணிக்க குமரி மீனவர்கள் முடிவு!

கன்னியாகுமரி: மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்க அரசியல் கட்சிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகளை புறக்கணிக்க குமரிமாவட்ட மீனவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

கடந்த நாடளுமன்ற தேர்தலில்,  மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த பாரதிய ஜனதா, வெற்றி  பெற்று ஆட்சியில் அமர்ந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும்,  தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாததால் கடற்கரை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஆந்திரா, கோவா, குஜராத், ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய  மாநிலங்களிலிருந்தும் பாண்டிச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களிலிருந்தும் திரளான மீனவர்களும், மீனவ அமைப்பின் பிரதிநிதிகளும்  மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைத்து தர வேண்டும் என்பது  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக குமரி மாவட்ட மீனவர்களும், மீனவப் பிரதிநிதிகளும் தங்கள் கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்க மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.

அதில், மாநிலங்களில் உள்ளது போல் மத்தியிலும் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும், மீனவர்களை பழங்குடியினர் இனத்தில் சேர்க்க வேண்டும், கடலோர  காவல் குழுமம், கடலோர பாதுகாப்பு படை, கப்பல் படை ஆகிய துறைகளில் மீனவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல் வேண்டும், இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் வளைகுடா நாடுகளான ஈரான், துபாய், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைனில்  இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக கைது செய்யப்பட்டால், அவர்களை சிறையில் அடைக்காமல், இந்திய தூதரகத்தின் உதவியுடன் அவர்களை விசாரித்து படகுடன் விடுதலை செய்ய, அந்நாட்டுடன் மத்திய அரசு நல்லுறவு உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டும், மத்திய, மாநில அரசுகள் வரி இன்றி டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றை மீனவர்களுக்கு மானியத்தில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு வைத்துள்ளனர்.

தேர்தலில் அரசியல் கட்சிகளை புறக்கணிக்க குமரி மீனவர்கள் முடிவு!

இது குறித்து தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு செயலர் சர்ச்சில் செய்தியாளர்களிடம் கூறுகையில், " மத்தியில் ஆளும் தேசிய கட்சிகளும் சரி, மாநிலத்தில் ஆளும் திராவிட கட்சிகளும் சரி,  தேர்தல் நேரத்தில் மட்டும் மீனவர்களுக்கு வாக்குறுதிகளை கொடுத்து, அவர்களின் ஓட்டுக்களை பெற்று விட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்களை புறக்கணிக்கின்றனர். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிய மத்திய அரசை கண்டித்து இன்று டெல்லியில் நாடாளுமன்ற முற்றுகையை நடத்துகின்றோம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கடல் தாமரை மாநாட்டில் சுஷ்மா சுவராஜ் அவர்கள் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். அதோடு அதை பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் தெரிவித்து இருந்தனர். ஆனால் இதுவரை எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

தேர்தலில் அரசியல் கட்சிகளை புறக்கணிக்க குமரி மீனவர்கள் முடிவு!

ஆகையால் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத அனைத்து மத்திய, மாநில அரசியல் கட்சிகளையும் குமரி மீனவர்கள் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க தயாராகி வருகின்றோம்" என்று தெரிவித்துள்ளார்.

- ரா.ராம்குமார்

அடுத்த கட்டுரைக்கு