Published:Updated:

“போலி வேட்பாளர்கள் கூட்டத்தில் நல்ல தலைவனாக நளன்!”

“போலி வேட்பாளர்கள் கூட்டத்தில் நல்ல தலைவனாக நளன்!”
“போலி வேட்பாளர்கள் கூட்டத்தில் நல்ல தலைவனாக நளன்!”

“போலி வேட்பாளர்கள் கூட்டத்தில் நல்ல தலைவனாக நளன்!”

“போலி வேட்பாளர்கள் கூட்டத்தில் நல்ல தலைவனாக நளன்!”

‘நம் விரல்... நம் குரல்!’ கருத்தரங்கம்
 

“போலி வேட்பாளர்கள் கூட்டத்தில் நல்ல தலைவனாக நளன்!”

ந்திய தேர்தல் ஆணையம், ஜூனியர் விகடன், தி சென்னை ஸ்கூல் ஆஃப் பேங்கிங் இணைந்து நடத்தும் ‘நம் விரல்... நம் குரல்’ என்ற தமிழக சட்டமன்றத் தேர்தல்-2016 கருத்தரங்கு சென்னை பட்டாபிராம் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தேர்தல் விழிப்பு உணர்வு குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கல்பனா பாய், கல்லூரி இயக்குநர் ராஜேந்திர நாயுடு உள்ளிட்டோரும் பேசினர். 

“போலி வேட்பாளர்கள் கூட்டத்தில் நல்ல தலைவனாக நளன்!”

ராஜேஷ் லக்கானி பேசுகையில், “வேலை நேரத்துக்காகப் பெண்கள் ஒரு காலத்தில் போராடினர். இன்று, நீங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு வந்துள்ளீர்கள். உங்கள்  வாக்குகளை முறையாகப் பயன்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சேர்க்க, ஆன்ட்ராய்டு போனில், பிளே ஸ்டோரில் இருந்து TNelections என்ற அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், புதிய வாக்காளர் என்ற இணைப்பில் உங்கள் பெயர், வயது, விலாசம் போன்ற விவரங்களைப் பதிவுசெய்யலாம். அதிகாரிகள் உங்கள் வீட்டுக்கு வந்து அந்தத் தகவலை உறுதி செய்துகொண்டு உங்களுக்கு வாக்காளர் அடையாளஅட்டை வழங்குவார்கள்” என்றவர், குட்டிக்கதை ஒன்றைக் கூறினார். “வட்டிக் கடைக்காரரிடம் பணம் வாங்கிய ஒருவர், பணத்தைத் திருப்பித் தர முடியாமல் போகவே அந்த வட்டிக்கடைக்காரர், கடன் வாங்கியவரை ஏமாற்ற முடிவுசெய்தார். ‘ஊரார் மத்தியில் ஒரு பையில் கறுப்புக் கல்லையும், வெள்ளைக் கல்லையும் போடுவேன். பையில் இருந்து ஒரு கல்லை உன் மகள் எடுக்க வேண்டும். கறுப்புக் கல்லை எடுத்தால் உன் மகளை நான் திருமணம் செய்துகொள்வேன். வெள்ளைக் கல்லை எடுத்தால் நீ பணத்தையும் தரவேண்டாம். பெண்ணையும் கட்டிக் கொடுக்க வேண்டாம்’ என்று கூறியிருக்கிறார். இதை நம்பிய அந்தக் கடன்காரர், ‘சரி... அப்படியே செய்யுங்கள்’ என்றார். ஒரு குறிப்பிட்ட நாளில், ஊருக்கு மத்தியில் எல்லோரும் நின்றனர். பையில் யாரும் அறியா வண்ணம் இரண்டு கறுப்புக் கற்களை அந்த வட்டிக்கடைக்காரர் போட்டார். அதை, அந்தக் கடன்காரனின் மகள் பார்த்துவிட்டார். பையில் இருந்து ஒரு கல்லை எடுத்தவுடன், யாரும் பார்க்கும் முன்பு மின்னல் வேகத்தில் அதைத் தூரமாகத் தூக்கி எறிந்துவிட்டார். சுற்றி நின்ற ஊராரிடம், ‘நான் பதற்றத்தில் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டேன். பையில் உள்ள கல்லைப் பாருங்கள்’ எனச் சொன்னதும், பையில் கறுப்புக் கல் இருக்கவே, ‘அப்ப, நான் எடுத்த கல் வெள்ளைக் கல்’ என்று  கூறி தனது குடும்பத்தை அந்தப் பெண் காப்பாற்றினார். வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும் இதுபோன்ற சமயோசிதப் புத்தி இன்றையப் பெண்களுக்குத் தேவை. பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பதற்கு எதிராக நீங்கள் இருக்க வேண்டும்” என்றார். 

“போலி வேட்பாளர்கள் கூட்டத்தில் நல்ல தலைவனாக நளன்!”
“போலி வேட்பாளர்கள் கூட்டத்தில் நல்ல தலைவனாக நளன்!”

வாக்களிப்பின் அவசியம் குறித்து பாரதி கிருஷ்ணகுமார் பேசினார். “நளவெண்பாவில், நளன் என்பவன் தமயந்தி என்ற பெண்ணை விரும்புகிறான். தமயந்தியும் அவனை விரும்புகிறாள்.  தமயந்தியின் அழகு, தேவர்களையும் மயங்கச் செய்தது. தேவர்கள், நளனைத் தோற்கடித்து தமயந்தியை அடைய வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். அதில் எல்லா அரசர்களும், இளவரசர்களும், நளன்போலவே நிற்பார்கள். நளன் வேடமிட்ட போலியான தேவர்களை ஒதுக்கிவிட்டு, தமயந்தி, நளன் கழுத்தில் மாலை போடுவதோடு அந்தக் கதை முடியும். எனவே, இந்தத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் ஆழ்ந்து சிந்தித்து, நல்ல வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

- எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர், மா.அ.மோகன் பிரபாகரன்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ப.சரவணகுமார்

“போலி வேட்பாளர்கள் கூட்டத்தில் நல்ல தலைவனாக நளன்!”

வாக்குப்பதிவின் அவசியம் குறித்த ஜூ.வி-யின் விழிப்பு உணர்வு பிரசாரத்தின் தொடக்கமாக இளம் வாக்காளர்களுடன் ஜூனியர் விகடன்  அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. லக்கானியிடம் இளம் வாக்காளர்கள் கேள்விகள் கேட்டனர். அனைத்துக் கேள்விகளுக்கும் விளக்கமான பதில்களை லக்கானி அளித்தார். அவருடைய பதில்கள் தேர்தல் பிரசார வீடியோவாக ஜூனியர் விகடனால் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு