Published:Updated:

அறிவாலயம் வந்தபோது நஞ்சு தெரியவில்லையா?

அறிவாலயம் வந்தபோது நஞ்சு தெரியவில்லையா?
அறிவாலயம் வந்தபோது நஞ்சு தெரியவில்லையா?

அறிவாலயம் வந்தபோது நஞ்சு தெரியவில்லையா?

அறிவாலயம் வந்தபோது நஞ்சு தெரியவில்லையா?

வைகோவுக்கு தி.மு.க. பதில்!
 

அறிவாலயம் வந்தபோது நஞ்சு தெரியவில்லையா?

பாலும் பழமும்தான் தமிழக அரசியலில் இப்போதைய டாபிக்!

‘விஜயகாந்த் உங்கள் கூட்டணிக்கு வருவாரா’ என்று கருணாநிதியிடம் கேட்டபோது, ‘பழம் கனிந்துகொண்டு இருக்கிறது. பாலில் விழும் என்று நினைக்கிறேன்’ என்று சொன்னார். இதற்கு வைகோ சொன்ன பதில் தி.மு.க-வினரைக் கொந்தளிக்க வைத்துள்ளது. ‘பழம் நழுவி பாலில் விழலாம். நஞ்சில் விழக் கூடாது’ என்று விமர்சித்தார் வைகோ.

தி.மு.க-வை, நஞ்சு என்று வைகோ சொல்லியதற்கு இணையதளங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இதுபற்றி தி.மு.க. செய்தித்தொடர்பு இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான தமிழன் பிரசன்னாவிடம் கேட்டோம்.

“அரை நூற்றாண்டு கண்ட இயக்கத்தை, தமிழ் மக்களின் இனம் மொழி விடியலுக்காகப் போராடிய இயக்கத்தை இப்படிச் சொல்வதற்கு முன்பு, வைகோ யோசித்திருக்க வேண்டும். இந்த இயக்கம்தான் அவரை மூன்று முறை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியது. சாதாரண கோபால்சாமி, வை.கோபால்சாமி என்று அடையாளப்படுத்தப்பட்டதும், இன்று வைகோ என்று வலம் வருவதும் எந்த இயக்கத்தால்? இன்று தமிழ்நாட்டில் வைகோவுக்கு ஓர் அடையாளம் இருக்கிறது என்றால், அது ம.தி.மு.க-வால் ஏற்பட்டது அல்ல... தி.மு.க தந்த அடையாளம் அது. இத்தனை ஆண்டு காலம் கலைஞரின் நிழலில் பயணித்துவிட்டு இன்று எங்களையே தூற்றுகிறார்.

அறிவாலயம் வந்தபோது நஞ்சு தெரியவில்லையா?

1993-ல் எங்களிடம் இருந்து பிரிந்துபோய் தனிக்கட்சி கண்ட கோபால்சாமியின் கோஷம் என்ன தெரியுமா? ‘அ.தி.மு.க ஊழல் ராணி ஜெயலலிதாவை விரட்டுவோம்’ என்பதுதான். ஆனால், இன்றோ அவரின் கைக்கூலியாக செயல்படுகிறார். இத்தனை ஆண்டு காலம் மாறி மாறிக் கூட்டணி கண்டவர், தற்போது ‘மக்கள் நலக் கூட்டணி’ கண்டு இருக்கிறார். அவர்களது கலந்துரையாடல் கூட்டத்தில், ‘நாம் தனித்து நிற்பதால் ஜெயித்துவிட மாட்டோம். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் ஸ்டாலினையும், கருணாநிதியையும் பதவியில் அமரவைத்துவிடக் கூடாது. அதை நமக்கு விழும் வாக்குகள் தடுக்கும்’ என்று பேசியிருக்கிறார். அதாவது, ஜெயலலிதாவின் நோக்கத்தை அவருடன் சேராமலேயே நிறைவேற்றிக் காட்ட நியமிக்கப்பட்ட ஏஜென்ட்தான் அவர். தி.மு.க ஊழல் நஞ்சு கலந்த பால் அல்ல...  ஜெயலலிதா என்னும் நஞ்சில் ஊறிய விஷக்கனிதான் கோபால்சாமி. ஊரறிய மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார். தி.மு.க நஞ்சு என்று இப்போதுதான் அவருக்குத் தெரிந்ததா? எட்டு மாதங்களுக்கு முன்னால் அறிவாலயத்தில் வந்து கர்ஜித்தபோது அவருக்கு எது இனித்தது? இப்போது ஏன் கசந்தது? இடையில் என்ன நடந்தது? திடீரென அவர் மாறியது ஏன்? அந்த மர்மம் என்ன? அவரது பேச்சும், இந்தக் கூட்டணியும் யாருடைய ரகசியத் திட்டம்?

2006 சட்டமன்றத் தேர்தலில் தலைவர் கலைஞரைப் பார்த்துப் பேசிவிட்டுப்போய் அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்துக் கொண்டார். இப்போது அறிவாலயத்தில் வந்து பேசிவிட்டு தனிக்கூட்டணி வைத்துக் கொண்டார். அவ்வளவுதான் வித்தியாசம். நோக்கம் ஒன்றுதான். இதை உணர்ந்த
ம.தி.மு.க-வினர் எங்களை நோக்கி வந்துவிட்டார்கள். உணரத் தொடங்கி இருப்பவர்கள் வரக் காத்திருக்கிறார்கள்.

அறிவாலயம் வந்தபோது நஞ்சு தெரியவில்லையா?

எங்களைக் குற்றம்சாட்டி பிரிந்து சென்ற கோபால்சாமியை, 19 மாதங்கள் சிறையில் அடைத்தார் ஜெயலலிதா. அந்தச் சமயத்தில்கூட, தனது சுய விருப்பு வெறுப்புகளைக் கடந்து, ஒரு தலைவர் என்கிற முறையில் இரண்டு முறை சிறையில் சென்று சந்தித்தார் கலைஞர். அதன்பின் சிறை மீண்ட வைகோ, அப்போதைய பத்திரிகையாளர் சந்திப்பில், ‘கருணாநிதி எனது தலைவர். அவரை இனி எக்காரணத்தைக் கொண்டும் விமர்சிக்க மாட்டேன்’ என்றார். இப்படி நேரத்துக்கு நேரம் மாற்றி மாற்றிப் பேசி, தனக்கு ஆதரவாக வந்த தலைவர்களை இழந்தார். ஸ்டாலினைப் பற்றிப் பேசி, தனது மாவட்டச் செயலாளர்களை இழந்தார். தற்போது செய்து வரும் இந்த அரசியலால் இருக்கும் கொஞ்சநஞ்ச தொண்டர்களையும் இழக்கப் போகிறார். 3 முறை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அரசியலிலும், ஏகப்பட்ட பதவிகளை கட்சியிலும் அனுபவித்தபோது எல்லாம் தெரியவில்லையா? ‘நமது இயக்கத்தின் போர்வாள் தம்பி வைகோ’ என்று கலைஞர் கருணாநிதி அறிவித்தபோது தெரியவில்லையா?

வைகோவின் தாயார் மறைந்தபோது, நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதைக்கூட, அரசியல் ஆகப் பார்த்தவர்தான் வைகோ! அப்படிப்பட்ட ஒருவர் இந்த இயக்கத்தைப் பற்றி கருத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் ரீதியாக எந்த விமர்சனத்தையும் வையுங்கள். அண்ணாவின் இயக்கத்தைத் தலைவரும் தளபதியும் காக்கும் இயக்கத்தைக் கொச்சைப்படுத்துபவர்கள் காணாமல் போவார்கள். காணாமல் போயிருக்கிறார்கள்” என்றார்.

- மா.அ.மோகன் பிரபாகரன்

அடுத்த கட்டுரைக்கு