Published:Updated:

பறக்கும் படை சோதனை; சிக்கிய ரூ. 2 கோடியே 80 லட்சம் வங்கிப்பணமா

Vikatan Correspondent
பறக்கும் படை சோதனை; சிக்கிய ரூ. 2 கோடியே 80 லட்சம் வங்கிப்பணமா
பறக்கும் படை சோதனை; சிக்கிய ரூ. 2 கோடியே 80 லட்சம் வங்கிப்பணமா

திருச்சி; திருச்சி அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் சந்தேகத்திற்கிடமான வகையில் பிடிபட்ட பணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

பறக்கும் படை சோதனை; சிக்கிய ரூ. 2 கோடியே 80 லட்சம் வங்கிப்பணமா

ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கும்பகோணத்தான் சாலையில் வேகமாக சென்ற காரை வழிமறித்து சோதனையிட்டனர், சோதனையில், அந்த காரில் 2 இரும்புபெட்டியில் கட்டு கட்டாக  2 கோடியே 80 லட்சத்து 50 ஆயிரம்  ரொக்கப்பணம் சிக்கியது. காரில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தபோது பணத்திற்கான உரிய ஆதாரங்கள் இல்லை என தெரியவந்தது .

பறக்கும் படை சோதனை; சிக்கிய ரூ. 2 கோடியே 80 லட்சம் வங்கிப்பணமா

இதையடுத்து. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் பணத்தையும் உடன்வந்தவர்களையும் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தாசில்தார் பவானி நடத்திய முதல் கட்ட விசாரணையில் அந்தப்பணத்தை தனியார் வங்கி ஏடிஎம்களில் நிரப்ப கொண்டுவந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் உரிய ஆதாரங்கள இல்லாததால் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

- தே. தீட்ஷித்