Published:Updated:

குஷ்பு விளம்பரப் படத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார்!

Vikatan Correspondent
குஷ்பு விளம்பரப் படத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார்!
குஷ்பு விளம்பரப் படத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார்!
குஷ்பு விளம்பரப் படத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார்!

ரசியல் கட்சிகளின் சார்பில் நடத்தப்படும் தொலைக்காட்சிகள், தங்கள் கட்சியின் சின்னங்களை தொலைக்காட்சிகளில் நிரந்தரமாகக் காட்டுவதை தடுக்கக் கோரி தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல்  நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு மீது 'தனியார் விளம்பரங்களில்' தோன்றி நடிப்பதைத் தடுக்கும்படியும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புகார் மனுவைக் கொடுத்திருக்கும் 'மக்கள் மாநாடு கட்சி'யின் தலைவர் சக்திவேல், துணைத் தலைவர் ஆடிட்டர் கோபிநாராயணன் ஆகியோரிடம் கேட்டபோது,

"அரசியல் கட்சிகள் தொலைக்காட்சி நிறுவனங்களை சொந்தமாக நடத்துகின்றன. தங்களுடைய கட்சி சார்ந்த செய்திகளை மட்டும் ஒளிபரப்பு செய்கின்ற தொலைக்காட்சிகளின் செயலை, தேர்தல் முடியும் வரை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனுவில் சொல்லியிருக்கிறோம். அதேபோல் அரசியல் கட்சிகள் தங்களின் சின்னங்களை நிரந்தர 'லோகோ'வாக தொலைக்காட்சிப் பெட்டிகளில் வைத்துள்ளது. அதையும் தேர்தல் முடியும் வரையில் தடுத்து நிறுத்த வேண்டும்.

காங்கிரஸ் கட்சியில் செய்தித் தொடர்பாளராக பொறுப்பில் இருக்கிறவர் நடிகை குஷ்பு. இவர் சில தனியார் நிறுவன விளம்பரங்களில் நடித்துள்ளார். அது பிரதானமான பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது, இது அப்பட்டமான தேர்தல் விதி மீறல் குற்றமாகும். இதற்காக நடிகை குஷ்பு மீதும், விளம்பரத்தை வைத்துள்ள அந்த தனியார் நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

-ந.பா.சேதுராமன்