Published:Updated:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியது திமுக!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியது திமுக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியது திமுக!

சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியது திமுக!

ஒதுக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார்.

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறது. இக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

கருணாநிதி முன்னிலையில் ஸ்டாலின், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி ஆகியோர் கொண்ட தொகுதி பங்கீட்டுக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொய்தீன், "திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
 

அடுத்த கட்டுரைக்கு