Published:Updated:

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 2 லட்சம் புகார்கள் பதிவு: தேர்தல் ஆணையம்

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 2 லட்சம் புகார்கள் பதிவு: தேர்தல் ஆணையம்
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 2 லட்சம் புகார்கள் பதிவு: தேர்தல் ஆணையம்

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 2 லட்சம் புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 2 லட்சம் புகார்கள் பதிவு: தேர்தல் ஆணையம்

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''தேர்தலையொட்டி பறக்கும் படையினர் கடந்த 21-ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, தர்மபுரி மாவட்டத்தில் ரூ.5.12 லட்சம், ஈரோட்டில் ரூ.1.50 லட்சம், நாமக்கல்லில் ரூ.3.23 லட்சம், நாகையில் ரூ.2.4 லட்சம், சிவகங்கையில் ரூ.1.03 லட்சம் மற்றும் துபாய் நாட்டு பணம் 480 திர்ஹாம், தேனியில் ரூ.1 லட்சம், திருப்பூரில் ரூ.1.34 லட்சம், நெல்லையில் ரூ.11.20 லட்சம், தூத்துக்குடியில் ரூ.1 லட்சம், விருதுநகரில் ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.30 லட்சத்து 37 ஆயிரத்து 460 ரொக்கம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல், உரிய அனுமதியில்லாமல் கொண்டு சென்றதாக 95 கேஸ் ஸ்டவ், 43 குக்கர்கள் போன்றவையும் கைப்பற்றப்பட்டன. இதுவரை ரூ.5.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நிலையான கண்காணிப்புக்குழு நடத்திய சோதனையில், கிருஷ்ணகிரியில் ரூ.2.44 லட்சம், மதுரை, கம்பம் பகுதியில் ரூ.1.45 லட்சம் என மொத்தம் ரூ.3.89 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 21-ம் தேதி வரை இக்குழுவினரால் ரூ.6 கோடியே 47 லட்சத்து 12 ஆயிரத்து 653 ரொக்கம் கைப்பற்றி, சார்-கருவூலங்களில் சேர்க்கப்பட்டு உள்ளது.

மேலும் சுவர் விளம்பரம் செய்தது, கட்சி கொடிகம்பங்களை அகற்றாதது, அனுமதி இல்லாமல் கட்சி கொடிக்கம்பங்களை வைத்தது போன்ற காரணங்களுக்காக பல்வேறு அரசியல் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக நேற்று (புதன்கிழமை) வரை 2 லட்சத்து ஆயிரத்து 549 புகார்கள் பெறப்பட்டு, 1 லட்சத்து 7 ஆயிரத்து 732 புகார்களில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டதால் புகார்கள் விலக்கி கொள்ளப்பட்டன.

இதுவரை 1,482 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டன. வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியது, அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியது, ஒலிபெருக்கி விதியினை மீறியது போன்ற காரணங்களுக்காக இதுவரை 1,493 வழக்குகள் பதியப்பட்டு உள்ளன" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு