Published:Updated:

ஜெயலலிதா என அழைத்தவருக்கு நேர்காணல் அழைப்பா?: கொதிக்கும் அ.தி.மு.க.வினர்!

ஜெயலலிதா என அழைத்தவருக்கு நேர்காணல் அழைப்பா?: கொதிக்கும் அ.தி.மு.க.வினர்!
ஜெயலலிதா என அழைத்தவருக்கு நேர்காணல் அழைப்பா?: கொதிக்கும் அ.தி.மு.க.வினர்!

ருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட யாருக்கு சீட் கிடைக்கும் என்ற குழப்பத்தில் குமரி அ.தி.மு.க.வினர் உள்ளனர். ஏற்கனவே சுமார் 11 பேர் குமரியை,  தவிர்த்து ஐந்து தொகுதிக்கு நேர்காணலுக்கு சென்று வந்துள்ளனர். இதில், ஜெயலலிதாவின் கேள்விகளுக்கு பலரும் பதில் சொல்ல முடியாமல் திணறிப்போய் திரும்பி உள்ளனர்.

ஜெயலலிதா என அழைத்தவருக்கு நேர்காணல் அழைப்பா?: கொதிக்கும் அ.தி.மு.க.வினர்!

அதன் பின், 3 பேர் கன்னியாகுமரி தொகுதிக்கு நேர்காணலுக்காக அழைக்கப்பட்டு, அவர்களின் பின்புலத்தை அறிந்து கார்டனுக்கு செல்லும் முன் சந்திப்பை ஜெயலலிதா ரத்து செய்திருக்கிறார். அத்தோடு, மேலும் இருவருக்கு நேர்காணலுக்கு வருமாறு கார்டனில் இருந்து அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. அதில் ஒருவர், தி.மு.க.வில் இருந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் அ.தி.மு.க.வில் ஐக்கியமான ராஜன். இவர், ஏற்கனவே தி.மு.க.வுக்கு தேர்தல் நிதி கொடுத்தார் என்றும், சீட்டுக்காக 2 கோடியை மாவட்ட பொறுப்பிலுள்ள முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கொடுத்தார் என்றும், அதனால் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது என்றும் அ.தி.மு.க.வினர் சொல்கிறார்கள். இவரும், யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா என அழைத்தவருக்கு நேர்காணல் அழைப்பா?: கொதிக்கும் அ.தி.மு.க.வினர்!

''நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில்,  போக்குவரத்துக்கு சிரமமாக ராஜனின் கடை நெடுஞ்சாலையில் உள்ளது. சாலைகளை அகலப்படுத்தும் போது கடைக்கு சேதம் வரமால் தனது பவரால் பார்த்துக் கொண்டார். கட்சியில் சேர்ந்த உடன் மாவட்ட துணைச் செயலாளர், மாவட்ட பொருளாளர் என பதவிகளை பெற்றார்.

தி.மு.க. ஆட்சியில் இவர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, சட்டசபையில் அம்மாவை ஜெயலலிதா என பெயர் சொல்லி அழைத்து அ.தி.மு.க.வினரின் எதிர்ப்பை பெற்றவர். காலம் காலமாக கட்சியை வளர்க்கும் தொண்டனுக்கு சீட் கொடுக்காமல், ஐந்தாண்டுக்கு முன் கட்சிக்கு வந்து சேர்ந்த ராஜனை அம்மா அழைத்துள்ளார்கள்.

தி.மு.க.வில் சீட் கொடுக்காததால் இங்கு வந்தார். இங்கும் சீட் கிடைத்தால் இருப்பார், இல்லை வேறு கட்சிக்கு போய்விடுவார்'' என்று ஆதங்கத்தோடு பேசுகிறார்கள் நாகர்கோவில் தொகுதி அ.தி.மு.க.வினர்.

நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட இன்னொருவர் சி.என்.ராஜதுரை. பச்சைமால் அமைச்சராக இருக்கும்போது, மாவட்ட மருத்துவ அணி செயலாளராக இருந்தார் என்.ராஜதுரை. பொறுப்பில் இருக்கும்போது திடீர் திடீரென தினசரிகளில் முழுபக்க விளம்பரங்களை கொடுத்து அமைச்சர், எம்.எல்.ஏ.க்களை கலங்க வைப்பார்.

ஜெயலலிதா என அழைத்தவருக்கு நேர்காணல் அழைப்பா?: கொதிக்கும் அ.தி.மு.க.வினர்!

அதேபோல் இவர், தனது சொந்த செலவில் பெரிய நிகழ்ச்சிகளை நடத்துவார். ஒருமுறை நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது பச்சைமாலுக்கும், இவருக்கும் ஏற்பட்ட கசப்பு, ராஜதுரையை மறுநாள் அந்த பதவியில் இருந்து காலி செய்தது.

பின்னர் அவர் பெரும்பாலும் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்ளமால்,  சென்னையில் உள்ள தனது மருத்துவமனையை கவனித்து வந்தார். அதன் பின் அவர் கொடுக்கும் அ.தி.மு.க. விளம்பரங்களும் காணாமல் போனது. எப்போதாவது மட்டுமே குமரி மாவட்டத்திற்கு வருவார்.

மேலும், பணபலம் பொருந்தியவர் என்பதால் இவரை சாதாரண அ.தி.மு.க. தொண்டன் நெருங்குவது சிரமம். முன்பு இவரது வீட்டில் துப்பாக்கிகளை காவல்துறையினர் கைப்பற்றினராம். ஆடிக்கு ஒரு நாள் ஆவணிக்கு ஒரு நாள் மாவட்டத்திற்கு வரும் இவரை நேர்காணலுக்கு அம்மா அழைத்துள்ளார்கள். ராஜதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அ.தி.மு.க.வினரே அவருக்கு வாக்களிப்பது சிரமம்தான்.

தப்பித் தவறி வெற்றி பெற்றால் இவரை பார்க்க மக்கள் சென்னைக்குதான் போக வேண்டும். இவரால் இந்த தொகுதிக்கு எந்த நன்மையும் ஏற்படாது. ஏற்கெனவே மக்கள் மத்தியில் பிரபலமில்லாத, மத சாயமுள்ளவர்களையும், குற்றப் பின்னணி உள்ளவர்களையும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோற்க காரணமானவர்களையும் அம்மா சட்டமன்ற தேர்தல் நேர்காணலுக்கு அழைத்துள்ளார். கட்சி போஸ்டர் ஒட்டுபவனையும் எம்.எல்.ஏ.வாக மாற்றும் அ.தி.மு.க.வில் தற்போது பெரும் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னனியில் அம்மாவின் கோபத்திற்கு ஆளானவர்கள்தான் இருக்கிறார்கள். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து அம்மா முதல்வர் ஆனதும், அவர்களுக்கு கிடைக்கப்போகும் தண்டனை என்னமோ பெரிதாக தான் இருக்கும். அதனால், இதில் இருந்து தப்பிக்க அவர்கள், அ.தி.மு.க.வை இந்த தேர்தலில் தோற்கடிக்க மிகப்பெரிய சதி செய்கிறார்கள். கழகத்தின் நலனுக்காக சரியான முடிவுகளை எப்போதும் எடுக்கும் அம்மா, ஏனோ குமரி மாவட்ட விஷயத்தில் மட்டும் தடுமாறுகிறார். சாட்டையை கையில் வைத்துக் கொண்டு சுழற்ற அம்மா தயங்குவது ஏனோ தெரியவில்லை" என்கிறார்கள் கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க.வினர்.

- த.ராம்

படங்கள்: ர.ராம்குமார்

அடுத்த கட்டுரைக்கு