Published:Updated:

“அ.தி.மு.க-வுக்கு எப்போதும் நன்மைதான் செய்வார் வைகோ!”

“அ.தி.மு.க-வுக்கு எப்போதும்  நன்மைதான் செய்வார் வைகோ!”
“அ.தி.மு.க-வுக்கு எப்போதும் நன்மைதான் செய்வார் வைகோ!”

“அ.தி.மு.க-வுக்கு எப்போதும் நன்மைதான் செய்வார் வைகோ!”

ஆளும் கட்சி அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்...
 

“அ.தி.மு.க-வுக்கு எப்போதும்  நன்மைதான் செய்வார் வைகோ!”

ன்னீர்செல்வத்துக்கு எதிராகக் களம் இறக்கப்பட்டு இருப்பவர், ஆண்டிபட்டி எம்.எம்.ஏ-வான தங்க தமிழ்ச்செல்வன். இவருக்கு, ஜெ. பேரவை மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டு உள்ளது. அதனால், மீண்டும் தனது செல்வாக்கைக் காட்டுவதற்காக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டத்தை மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தேனியில் நடத்தினார் தங்க தமிழ்ச்செல்வன். அழைப்பிதழில் அமைச்சர் பன்னீர்செல்வத்தின் பெயர் இருந்தும் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், ஜெயலலிதாவின் புகழ்பாடினார். தேனி தொகுதி எம்.பி-யான பார்த்திபன், மாவட்டச் செயலாளர் சிவக்குமார் ஆகியோர் ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டு அமர்ந்துகொண்டனர்.

அடுத்துப் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், “கடந்த ஐந்து ஆண்டுகளில் அம்மா செய்த சாதனைகள் இதுவரை யாரும் செய்யாதவை. முதன்முறையாகக் கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறோம். அந்த வெற்றி வரும் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும். ஏழரைக் கோடி மக்கள் இருக்கும் தமிழகத்தில், ஐந்து கோடி மக்களுக்கு மட்டும்தான் வாக்குகள் இருக்கின்றன. மீதமுள்ள அனைவருக்கும் குடும்ப அட்டைகள் இருக்கின்றன. அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் இலவச அரிசி, இலவச மிக்ஸி, கிரைண்டர் என அனைத்து இலவசங்களையும் அம்மா கொடுத்தார்” என்று அம்மா புராணம் பாடினார்.

“அ.தி.மு.க-வுக்கு எப்போதும்  நன்மைதான் செய்வார் வைகோ!”

கூட்டத்துக்கு முன்னிலை வகித்துப் பேசினார், வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், “அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவ மனையில் இருந்தவாறு தேர்தலில் போட்டியிட்ட எம்.ஜி.ஆரை, பிரசாரத்துக்கு வராமலே ஜெயிக்க வைத்த மாவட்டம் இது. இங்குதான் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி, கடைக்கோடி தொண்டன் வரை இருக்கிறார்கள். இங்கு, மூலவரும் உற்சவரும் ஒருவர்தான். அவர் அம்மா மட்டுமே. குழப்பங்களை உருவாக்க வேண்டாம்.

நான் இந்தக் கூட்டத்துக்கு வரும்போதுகூட ஒரு தகவல் வந்தது. ஒருவர் என்னிடம், ‘அண்ணே விஜயகாந்த், வைகோவுடன் கூட்டணிக்குப் போய்விட்டார். அவர்தான் சி.எம் கேண்டிடேட். கூட்டணி உறுதி’ என்று சொன்னார். அதற்கு நான் அவரிடம், ‘வைகோ அ.தி.மு.க-வுக்கு நன்மைதான் செய்வார். அவர் எப்போதும் நமக்கு எதிராக எதுவும் செய்யமாட்டார். 234 தொகுதிகளிலும் நமக்குத்தான் வாய்ப்பு’ என்று சொன்னேன்.

‘வா... வா என்று விஜயகாந்த்தை அப்பா அழைக்கிறார். இங்கே வரக் கூடாது, போ... போ’ என்று மகன் விரட்டுகிறார். ‘இவர்கள் குடும்பத்தில் இவ்வளவு குளறுபடியா’ என்று விஜயகாந்த் தெறித்து ஓடிவிட்டார்.

“அ.தி.மு.க-வுக்கு எப்போதும்  நன்மைதான் செய்வார் வைகோ!”

ஆட்சியா... கட்சியா? என்றால் கட்சிதான் வேண்டும் என்று கட்சியைக் கைப்பற்ற கூட்டணிகளை ஒதுக்கிக்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின். இங்கு எல்லாமே நான்தான் என்கிறார் ஸ்டாலின். அதனால்தான், ஆட்சியில் பங்கு இல்லை என்று பேட்டி கொடுக்கிறார். கருணாநிதியை நம்பி யாரும் வரவேண்டாம் என்று ஸ்டாலின் சொல்கிறார். ‘சிங்கம் மாதிரி இருப்போம்’ என்கிறார் கறுப்புத் துண்டு போட்டிருக்கும் ஒருவர். முன்பெல்லாம் புலி... புலி என்று சொல்லிக்கொண்டிருந்தவர், இப்போது சிங்கத்துக்கு மாறியிருக்கிறார். சிங்கம், புலியாக மாறினாலும் இங்கு எதுவும் நடக்காது. கருணாநிதியின் வீட்டில் குடும்ப ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், யாரும் அவர்களை விரும்பவில்லை. காங்கிரஸ் இளங்கோவனும் இன்னும் சில நாட்களில் ஓடிவிடுவார். அனைத்துத் தொகுதிகளிலும் அம்மாதான் வெற்றி பெறுவார்” என்று பேசி முடித்தார்.

கூட்டம் தொடங்கும்போதும், முடியும் போதும் தே.மு.தி.க-வின் தேனி மாவட்டப் பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தியின் கார் கூட்டம் நடந்த சாலையைக் கடந்து சென்றது. இதனால், அ.தி.மு.க-வினர் ஆத்திரம் அடைந்தனர். அ.தி.மு.க-வினருக்கும், தே.மு.தி.க-வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். வழக்கம்போல சாலையை மறித்து, பேனர்கள் கட்டி, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு அ.தி.மு.க-வினர் இடையூறு செய்தனர். இது, தேர்தல் விதிமுறை மீறல். ஆனால், வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை.

- சண்.சரவணக்குமார்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி        
  

அடுத்த கட்டுரைக்கு