Published:Updated:

தேரோட்டத்துக்கு வராததற்கு சென்டிமெண்ட் காரணமா?... அமைச்சர்களை சுற்றும் பரபரப்பு

தேரோட்டத்துக்கு வராததற்கு சென்டிமெண்ட் காரணமா?... அமைச்சர்களை சுற்றும் பரபரப்பு
தேரோட்டத்துக்கு வராததற்கு சென்டிமெண்ட் காரணமா?... அமைச்சர்களை சுற்றும் பரபரப்பு
தேரோட்டத்துக்கு வராததற்கு சென்டிமெண்ட் காரணமா?... அமைச்சர்களை சுற்றும் பரபரப்பு

ஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் வைத்திலிங்கம் ஆர்.காமராஜ் கலந்து கொள்ளவில்லை. வழக்கமாக தங்கள் மாவட்டத்தில் எந்த கோவில் விசேஷங்க ளானாலும் தலைகாட்டும் அமைச்சர்கள் தஞ்சை பெரிய கோவிலின் முக்கிய விசேஷத்திற்கு வராததற்கு காரணம் கோவிலின் சென்டிமெண்ட் என காதை கடித்தனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

தஞ்சை கோவில் விசேஷத்தில் கலந்து கொண்டால் தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற சென்டிமெண்ட் பயத்தால் வரவில்லை என புகார் எழுந்துள்ளது.

தஞ்சாவூர் பெரியகோவில் பெருவுடையார் சித்திரை தேரோட்டம் 100 வருடங்களுக்கு பிறகு கடந்த வருடம் நடைபெற்றது. அரசு அதை சிறப்பாக கொண்டாடியது. அதிமுகவினரும் பெருமை பொங்க பிளக்ஸ் வைத்து தெறிக்கவிட்டனர். அமைச்சர்கள் வைத்திலிங்கம், ஆர்.காமராஜ், எம்.எல்.ஏ ரெங்சாமி மற்றும் அதிமுக பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். ஆனால் இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கபட்டதால் சென்டிமெண்ட் பயத்தால் வரவில்லை என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

இதற்கு காரணமும் உண்டு கடந்த காலத்தில் எம்.ஜி.ஆர் இந்த கோவிலுக்கு வந்துசென்றபின் உடல்நலம் குன்றினார் என்றும் கருணாநிதி ராஜராஜசோழனின் 1000வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டார். பின் அடுத்துவந்த தேர்தலில் ஆட்சியை இழந்தார் என்பார்கள். இந்திராகாந்திக்கு இப்படி ரு சம்பவத்தை குறிப்பிட்டு பேசுவதுண்டு. அதாவது அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் இந்த கோவிலுக்கும் ஆகாது என்பது அவர்களின் தவறான வாதம்.

இதுதான் அமைச்சர்களின் ஆப்சென்ட்டுக்கு காரணம்  என்றனர் கட்சியினர். இது குறித்து ஆன்மீக வட்டாரத்தில் விசாரித்தோம்.

தேரோட்டத்துக்கு வராததற்கு சென்டிமெண்ட் காரணமா?... அமைச்சர்களை சுற்றும் பரபரப்பு

“தஞ்சாவூர் பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றது. உலக பராம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும் யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி சிறப்பு வாய்ந்த பெரியகோவிலில் வருடம் தோறும் சித்திரை மாதம் பெரிய அளவில் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தேரோட்டம் கடந்த வருடம்தான் அதிமுக ஆட்சியில் 100 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பாக தேரோட்டம் பெற்றது. அமைச்சர் வைத்திலிங்கம், ஆர்.காமராஜ் மற்றும் அதிமுக பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். விழாவும் மிக சிறப்பாக நடைபெற்றது.

தேரோட்டத்துக்கு வராததற்கு சென்டிமெண்ட் காரணமா?... அமைச்சர்களை சுற்றும் பரபரப்பு

ஆனால் இந்த வருடம் விழாவுக்கான ஏற்பாட்டையும் சரியாக செய்யவில்லை. அதிமுக அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை. இது வேதைனையான விஷயம். கலெக்டர் சுப்பையன், தஞ்சாவூர் எம் எல் ஏவும் தற்போதைய வேட்பாளருமான ரெங்கசாமி, மேயர் சாவித்திரி கோபால் இன்னும் சிலர் மட்டும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அமைச்சர் வைத்திலிங்கமும் ஆர்.காமராஜும்  தேர்தல் வர இருப்பதால் தேரோட்டத்தில் கலந்து கொண்டால் தோல்வி அடைந்து விடுவோம் என்ற சென்டிமெண்ட் பயத்தில் இதில் கலந்து கொள்ளவில்லை என்றும் சொல்கின்றனர்.

மேலும் சிலர் தப்பு செய்கிற அரசியல்வாதிகள்தான் பெரிய கோவிலுக்கு வர பயப்படுகிறார்கள். இன்றைக்கு வடநாட்டில்  இருந்து ஏராளமான அரசியல் தலைவர்கள் பெரியகோவிலுக்கு வந்து தரிசனம் செய்கிறார்கள். நாம் தமிழர் கட்சி சீமான் இங்கு வந்து தரிசனம் செய்த பிறகே பிரச்சாரத்தை தொடங்கினார். இங்கு வந்தால் தோல்வி அடைந்து விடுவார்கள் என சொல்வது எல்லாம் சுத்த பொய்” என்கிறார்கள்.

தேரோட்டத்துக்கு வராததற்கு சென்டிமெண்ட் காரணமா?... அமைச்சர்களை சுற்றும் பரபரப்பு

“100 ஆண்டுகளுக்கு பிறகு நாங்கள்தான் தேரோட்டத்தை நடத்தினோம். அமைச்சர் வைத்திலிங்கம் சென்னையில் தேர்தல் பணியில் பிஸியாக உள்ளார். கடைசிநேரம் வரை வர அவர் தயாராக இருந்தார். தேர்தல் பணியால் அவரால் வரமுடியாமல் போய்விட்டது. அதனால்தான் தேரோட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. மற்றபடி தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என அச்சத்தில் அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை என சொல்வதில் உண்மையில்லை” என்கின்றனர் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்.

எது நிஜமோ....அந்த இருவருக்கும்தான் அது தெரியும்!

- கே.குணசீலன்