Published:Updated:

விஜயகாந்த் vs சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம்! - இது குபீர் கலாட்டா

விகடன் விமர்சனக்குழு
விஜயகாந்த் vs சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம்! - இது குபீர் கலாட்டா
விஜயகாந்த் vs சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம்! - இது குபீர் கலாட்டா
விஜயகாந்த் vs சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம்! - இது குபீர் கலாட்டா

ரஜினிகாந்தை விமர்சித்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில்,  கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 15-ம் தேதி சென்னை வில்லிவாக்கத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், 'ரஜினி நடித்த திரைப்படம் ஒன்றில் சில காட்சிகளை வெட்டி எடுக்கசொல்லி மிரட்டல் விடுக்கப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த் பணிந்து பின் வாங்கினார். ஆனால், அதேபோன்று, பாமக தலைவர் ராமதாசால் எனக்கு மிரட்டல் வந்தபோது  நான் பின்வாங்கவில்லை. எந்த ஒரு விஷயத்திலும் நான் பின்வாங்கியதில்லை" என்று பேசினார்.

இந்த நிலையில், ரஜினிகாந்த்தை விமர்சித்ததற்கு விஜயகாந்துக்கு எதிராக சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

திருப்பூரில் சூப்பர் ஸ்டார் மக்கள் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அக்கழகத்தின் நிறுவனர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜயகாந்த், ரஜினியை விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவித்தும், விஜயகாந்த் திருப்பூருக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வரும் போது, அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.