Published:Updated:

'மன்னார்குடியிலேயே தங்கியிருக்கிறார் அமைச்சர்...!' -திகில் கிளப்பும் திருப்பூர் அ.தி.மு.க

 'மன்னார்குடியிலேயே தங்கியிருக்கிறார் அமைச்சர்...!' -திகில் கிளப்பும் திருப்பூர் அ.தி.மு.க
'மன்னார்குடியிலேயே தங்கியிருக்கிறார் அமைச்சர்...!' -திகில் கிளப்பும் திருப்பூர் அ.தி.மு.க

'மன்னார்குடியிலேயே தங்கியிருக்கிறார் அமைச்சர்...!' -திகில் கிளப்பும் திருப்பூர் அ.தி.மு.க

ட்டமன்றத் தேர்தலில் வனத்துறை அமைச்சர் ஆனந்தனுக்கு சீட் கொடுக்க மறுத்துவிட்டார் ஜெயலலிதா. ஆனாலும் 'மீண்டும் சீட் வாங்கியே தீருவேன்' என ஆனந்தன் செய்யும் உள்ளடி வேலைகளால் கலங்கிப் போயிருக்கிறார்கள் திருப்பூர் அ.தி.மு.க வேட்பாளர்கள்.

 'மன்னார்குடியிலேயே தங்கியிருக்கிறார் அமைச்சர்...!' -திகில் கிளப்பும் திருப்பூர் அ.தி.மு.க

திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் வடக்கு, தெற்கு, அவினாசி, பல்லடம் என நான்கு சட்டமன்றத் தொகுதிகள் வருகிறது. இதில், வடக்குத் தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரானார் எம்.எஸ்.எம். ஆனந்தன். இந்தமுறை அமைச்சரின் 'அதீத' செயல்பாட்டால் அ.தி.மு.க தலைமை சீட் ஒதுக்கவில்லை. அவருக்குப் பதிலாக, ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமாருக்கு சீட் ஒதுக்கியிருக்கிறார் ஜெயலலிதா. கட்சியில் நீண்டகாலம் பணியாற்றும் விஜயகுமாருக்கு சீட் ஒதுக்கப்பட்டதில்,  மாவட்ட அ.தி.மு.கவினர் உற்சாகம் அடைந்தனர். இதேபோல், தெற்கு தொகுதியில் கவுன்சிலர் குணசேகரனும், பல்லடத்தில் கரைப்புதூர் நடராஜனும், அவினாசி தனித் தொகுதியில் சபாநாயகர் தனபாலும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் அவினாசி தொகுதியைத் தவிர்த்து மற்ற மூன்று தொகுதிகளிலும் வனத்துறை அமைச்சர் ஆனந்தன் செய்யும் உள்ளடிகளால் கலங்கிப் போயிருக்கிறார்கள் அ.தி.மு.க வேட்பாளர்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், " தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக எந்த செல்வாக்கையும் நம்பாமல், அம்மாவை நம்பித்தான் நேர்காணலுக்கு விண்ணப்பித்தோம். நாங்களே எதிர்பார்க்காமல் சீட்டும் கொடுத்தார். இதில், வடக்குத் தொகுதி என்பது அமைச்சர் ஆனந்தன் போட்டியிட்ட தொகுதி. இந்தத் தொகுதியில் விஜயகுமார் போட்டியிடுவதை அவர் விரும்பவில்லை. 'எப்படியாவது வேட்பாளரை மாற்றுவேன்' என்று சொல்லி அடிக்கடி மன்னார்குடிக்குச் சென்று வருகிறார். கடந்த தேர்தலில் ஆனந்தன் வெற்றி பெற்று அமைச்சர் ஆவதற்குக் காரணமே, கொங்கு மண்டலத்தில் கோலோச்சிய ராவணன்தான். இந்தமுறை சின்னம்மாவின் ஆதரவைப் பெற்று மீண்டும் சீட் வாங்க வேண்டும் என்பதற்காக, மன்னார்குடியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரோடு வலம் வருகிறார். பல நாட்கள் மன்னார்குடியிலேயே தங்கியிருக்கிறார். அந்த நபரை கார்டன் ஓரம்கட்டி நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. அமைச்சராக இருந்தும் சீட் கொடுக்காததால், தொகுதிக்குள் கெட்ட பெயர் வரும் என்று கருதி, நியமிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவற்கு கூட ஆனந்தன் வருவதில்லை. இதுவரையில், ஒரு ரூபாய்கூட தேர்தல் செலவுக்காக அவர் கொடுக்கவில்லை. 'உங்களை எல்லாம் எப்படி மாத்தணும்னு எனக்குத் தெரியும். என்னை மீறி மாவட்டத்திற்குள்ள யாரும் தலையெடுக்க முடியாது' என நேரடியாகவே மிரட்டல் விடுக்கிறார்.

இதே வடக்குத் தொகுதியில் தி.மு.க சார்பில் சாமிநாதன் போட்டியிடுகிறார். ' சாமிநாதனுக்கு விஜயகுமார் சரியான போட்டி இல்லை' என கார்டனுக்கு மொட்டை பெட்டிஷன்களைத் தட்டி விட்டுக் கொண்டிருக்கிறார். 'வடக்குத் தொகுதி கிடைக்காவிட்டால், தெற்கு தொகுதி அல்லது பல்லடம் என ஏதாவது ஒன்று வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார். அமைச்சராக இருந்த காலத்தில் வனத்துறையில் வேலை கேட்டு வந்த கட்சிக்காரர்களிடம் கூட ஐந்து லட்சம் வரையில் வசூல் செய்துவிட்டுத்தான் கொடுத்தார். கட்சிக்காரர்கள் மத்தியில் அமைச்சருக்கு நல்ல பெயர் இல்லை.

பொங்கலூரில் பிரமாண்டமான அரண்மனை ஒன்றைக் கட்டி வருகிறார் ஆனந்தன். அவர் பதவியில் இருந்தபோது, ஜெயமணி என்பவர் கொடுத்த பாலியல் புகாரால்தான் கொஞ்சநாள் ஓரம்கட்டப்பட்டிருந்தார். இப்போது மீண்டும் பணபலத்தைக் காட்டி சீட் வாங்க முயற்சிக்கிறார். அம்மாவின் கவனத்திற்கு இதுபற்றிப் புகார் அனுப்பிவிட்டோம். அதற்குள் அமைச்சரின் செல்வாக்கால், அம்மாவால் ஏற்கனவே நியமிக்கப்பட்ட வேட்பாளர்கள் மாற்றப்படாமல் இருக்க வேண்டும். ஆனந்தனுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டால் கட்சிக்காரர்கள் தேர்தல் வேலையே பார்க்க மாட்டார்கள். எங்களுக்கு மன்னார்குடியும் தெரியாது. திவாகரனையும் தெரியாது. அம்மாவை மட்டும்தான் நம்பியிருக்கிறோம்" என்றார் வேதனையோடு.

'வேட்பாளர் பட்டியல் மாற்றம்' என செய்தி வரும்போதெல்லாம், திருப்பூர் மாவட்ட அ.தி.மு.கவினர் திகிலில் உறைந்து போய்விடுகிறார்கள். அந்தளவுக்கு ஆனந்தனை நினைத்து அச்சப்படுகிறார்கள் அவர்கள்.

-ஆ.விஜயானந்த்

அடுத்த கட்டுரைக்கு