Published:Updated:

அம்மாடியோ தமிழகத்தில் இதுவரை இவ்வளவு பறிமுதலா? -தேர்தல் ஆணைய கணக்கு!

அம்மாடியோ தமிழகத்தில் இதுவரை இவ்வளவு பறிமுதலா? -தேர்தல் ஆணைய கணக்கு!
அம்மாடியோ தமிழகத்தில் இதுவரை இவ்வளவு பறிமுதலா? -தேர்தல் ஆணைய கணக்கு!

அம்மாடியோ தமிழகத்தில் இதுவரை இவ்வளவு பறிமுதலா? -தேர்தல் ஆணைய கணக்கு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் நடைமுறையையொட்டி இதுவரை ரூ.81.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழ்நாட்டில் தேர்தல் நடைமுறையையொட்டி, தேர்தல் விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. தேர்தல் பறக்கும் படையும், நிலையான கண்காணிப்புக்குழுவும் மாவட்டங்களில் சோதனை செய்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரொக்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இதன்படி கடந்த 2-ம் தேதி பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்ட போது, வேலூர் மாவட்டத்தில் ரூ.2.25 லட்சம் கைப்பற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.82.25 லட்சம், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.2.54 லட்சம், மதுரை மாவட்டத்தில் ரூ.32.60 லட்சம், அரியலூர் மாவட்டத்தில் ரூ.6.93 லட்சம், ஈரோடு மாவட்டத்தில் ரூ.1.11 லட்சம் உட்பட மொத்தம் ரூ.1 கோடியே 30 லட்சத்து 7 ஆயிரத்து 44 கைப்பற்றப்பட்டது.

நிலையான கண்காணிப்புக்குழு சோதனையில் கடந்த 2-ம் தேதி வேலூர் மாவட்டத்தில் ரூ.5.52 லட்சம் மதிப்பிலான காட்டன் லுங்கிகள் மற்றும் ரெடிமேட் ஆடைகள், நாமக்கல் மாவட்டத்தில் ரூ.3.60 லட்சம் ரொக்கம், ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.1.14 லட்சம், மதுரை மாவட்டத்தில் ரூ.2.26 லட்சம், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.1.40 லட்சம், அரியலூர் மாவட்டத்தில் ரூ.2.86 லட்சம் ரொக்கம், தேனி மாவட்டத்தில் ரூ.14.50 லட்சம், ஈரோடு மாவட்டத்தில் ரூ.2.90 லட்சம் உட்பட மொத்தம் ரூ.30 லட்சத்து 48 ஆயிரத்து 370 பறிமுதல் செய்யப்பட்டது.

இதுவரை பறக்கும் படையினரால் ரூ.29 கோடியும், நிலையான கண்காணிப்புக்குழுவினரால் ரூ.31 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருமானவரித் துறையினர் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொண்ட சோதனையில் சுமார் ரூ.21.85 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்த தொகையையும் சேர்த்து இதுவரை ரூ.81.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்து உள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு