Published:Updated:

நாடாளுமன்றத்திற்கு திடீர் தேர்தலா? தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு

Vikatan Correspondent
நாடாளுமன்றத்திற்கு திடீர் தேர்தலா? தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு
நாடாளுமன்றத்திற்கு திடீர் தேர்தலா? தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு
நாடாளுமன்றத்திற்கு திடீர் தேர்தலா? தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று தமது கட்சித் தொண்டர்களுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி  அழைப்பு விடுத்துள்ளதால், நாடாளுமன்ற்த்திற்கு திடீர் தேர்தல் வரக்கூடுமோ என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே  எழுந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்த்தற்கான காரணம் குறித்து   ராகுல் காந்தி தமது கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உத்தரபிரதேச எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள்  கலந்து  கொண்டனர்.

.அப்போது  நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு த்யாராகுங்கள் என்று தொண்டர்களுக்கு ராகுல்காந்தி வேண்டுகோள்  விடுத்தார்.

இதனிடையே கேரள மாநிலம், கோழிக்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு நடந்து வருகிறது. இதன்  இடையே கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் வருமா என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த காரத், "உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள சமாஜ்வாடி  கட்சித்தலைவர் முலாயம்சிங் உள்பட எந்தவொரு தலைவருமே நாடாளுமன்றத்துக்கு திடீர் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து  தீவிரமாக சிந்திப்பதாக நான் கருதவில்லை.நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் வருவதில் யாருக்கும் விருப்பமும் இல்லை"  என்றார்.