Published:Updated:

ஜனாதிபதி தேர்தல்: சங்மாவை சந்திக்க சோனியா மறுப்பு!

ஜனாதிபதி தேர்தல்: சங்மாவை சந்திக்க சோனியா மறுப்பு!
ஜனாதிபதி தேர்தல்: சங்மாவை சந்திக்க சோனியா மறுப்பு!
ஜனாதிபதி தேர்தல்: சங்மாவை சந்திக்க சோனியா மறுப்பு!

புதுடெல்லி:ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள முன்னாள்  சபாநாயகர் பி.ஏ. சங்மாவை சந்திக்க,காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி  மறுத்துவிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில்‌ போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள தேசிய வாத காங்கிரஸ்  கட்சியை சேர்ந்த பி.ஏ.சங்மாவுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா,பிஜு  ஜனதா தளக் கட்சித் தலைவரும்,ஒடிசா மாநில முதல்வருமான நவீன்பட்நாயக் ஆகியோர்  ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சங்மா மேலும் பல கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி  வருகிறார்.

கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மற்று்ம் பா.ஐனதா கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு  திரட்டிய அவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து ஆதரவு கோர  முடிவு செய்தார்.

இதற்காக அவர் இன்று சோனியா காந்தியை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு  கோரியிருந்தார்.ஆனால் சங்மாவை சந்திக்க சோனியா மறுத்துவிட்டார்.

முன்னதாக சோனியா காந்தியை வெளிநாட்டை சேர்ந்தவர் என்று கடுமையாக  விமர்சித்தவர்களில் சங்மாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பழங்குடியின மக்களின் அழைப்புக்கு மதிப்பு கொடுங்கள் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சங்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.