Published:Updated:

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்: டி.டி.வி.தினகரன் வாழ்த்து

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்: டி.டி.வி.தினகரன் வாழ்த்து
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்: டி.டி.வி.தினகரன் வாழ்த்து
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்: டி.டி.வி.தினகரன் வாழ்த்து

தமிழகத்தின் ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க-வின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ஐந்து மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகும் கட்சிகளுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடியே அமைந்திருக்கிறது!

பா.ஜ.க. ஆட்சி செய்த பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களை காங்கிரஸ் கட்சியும்; காங்கிரஸ் மற்றும் பிற மாநிலக் கட்சிகள் ஆட்சி செய்த மாநிலங்களான உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதன் மூலம், தேர்தல் நடந்த மாநிலங்களில் ஆட்சி செய்த கட்சிகளின் அரசு நிர்வாகத்தை மனதில் வைத்தே மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள் என்றாலும், மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியே மெல்லிய அறுதிப் பெரும்பான்மையோடு அதிகாரத்தை தக்க வைத்திருக்கிறது.

இந்த சட்டமன்றத் தேர்தல்களில் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் வெற்றிகளை ஈட்டியிருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும், ஏறத்தாழ 10 வருடங்களுக்குப் பிறகு பஞ்சாப்பில் அரியணை ஏறும் காங்கிரஸ் கட்சிக்கும், அது போலவே பா.ஜ.க-விடமிருந்து கோவா மாநிலத்தை கைப்பற்றியதோடு, மணிப்பூரில் தங்களது ஆட்சியை தக்க வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்.