Published:Updated:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குபதிவு தொடங்கியது!

அஸ்வினி.சி
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குபதிவு தொடங்கியது!
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குபதிவு தொடங்கியது!

சென்னையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர்,பொருளாளர் என 27 பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. 

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குபதிவு தொடங்கியது!


 

இந்தத் தேர்தலில், விஷால்,ஆர்.ராதாகிருஷ்ணன்,கேயார் ஆகியோர் தலைமையில் மூன்று அணிகள் களமிறங்குகிறது. ’நம்ம அணி' என்ற பெயரில் போட்டியிடும் விஷால் அணியில், நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குநர்கள் பாண்டிராஜ், மிஷ்கின், ஞானவேல்ராஜ் ஆகியோர் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரம் மேற் கொண்டனர்.

மற்ற இரண்டு அணிகளை காட்டிலும் விஷால் அணி தீவிரமாக பரப்புரை செய்தனர்.  12 வாக்குறுதிகளோடு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டனர், தமிழகம் முழுவதும் உள்ள தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்து, வாக்குசேகரிப்பிலும் ஈடுபட்டனர்.