Published:Updated:

தலைமைத் தேர்தல் ஆணையராக வி.எஸ்.சம்பத் பதவியேற்பு!

விகடன் விமர்சனக்குழு
தலைமைத் தேர்தல் ஆணையராக வி.எஸ்.சம்பத் பதவியேற்பு!
தலைமைத் தேர்தல் ஆணையராக வி.எஸ்.சம்பத் பதவியேற்பு!
தலைமைத் தேர்தல் ஆணையராக வி.எஸ்.சம்பத் பதவியேற்பு!

புதுடெல்லி: புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக வி.எஸ்.சம்பத் இன்று  பதவியேற்றுக் கொண்டார்.

தலைமைத் தேர்தல் ஆணையராக இதுவரை பதவி வகித்து வந்த எஸ்.ஒய்.குரேஷி,  நேற்றுடன் ஓய்வு பெற்றார்.

இதனையடுத்து புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஏற்கனவே கடந்த வாரம்  நியமிக்கப்பட்ட வி.எஸ்.சம்பத், இன்று அப்பதவிக்கான பொறுப்பை இன்று  ஏற்றுக்கொண்டார்.   

இவர் வரும் 2015ம் ஆண்டு வரை இந்தப் பதவியில் இருப்பார்.

தமிழரான வி.எஸ்.சம்பத் 1950-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி வேலூரில் பிறந்தார்.  1973-ம் ஆண்டின் ஆந்திர பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், கடந்த 2009-ம்  ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

அதற்கு முன் மத்திய மின்துறை செயலாளராக பணியாற்றினார்.ஆந்திர மாநிலத்திலும்,  டெல்லியிலும் மேலும் சில முக்கிய பதவிகளையும் வகித்து உள்ளார்.

விரைவில் ஜனாதிபதி தேர்தல்

இதனிடையே பதவியேற்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சம்பத்,”  நாட்டின் உயர் பதவிகளில் ஒன்றான தலைமை தேர்தல் கமிஷனர் பொறுப்பு வகிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்தலில் பண பலம், அதிகார பலத்தை தடுப்பது உள்பட பல்வேறு பிரச்னைகளை  தேர்தல் ஆணையம்  எதிர் நோக்கி உள்ளது. ஜனாதிபதி தேர்தல் தேதி மற்றும் தேர்தல் நடைமுறைகளுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

அடுத்து நடக்க இருக்கும் குஜராத், இமாச்சல் பிரதேசம், திரிபுரா, மேகாலயா ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்புகளை வெளியிட தயாராகி வருகிறேன்” என்றார்.