Published:Updated:

'உள்ளாட்சித் தேர்தல் எப்ப சார் நடத்துவீங்க?' : தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் கேள்வி...!

'உள்ளாட்சித் தேர்தல் எப்ப சார் நடத்துவீங்க?' : தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் கேள்வி...!
'உள்ளாட்சித் தேர்தல் எப்ப சார் நடத்துவீங்க?' : தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் கேள்வி...!

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட ஒரு லட்சத்து முப்பதாயிரம் பதவியிடங்கள் இருக்கின்றன. இந்தப் பதவிகளுக்காக கடந்தாண்டு அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்களில் சரியான முறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் அவசரகோலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. 


இதைத்தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மாநில தேர்தல் ஆணையராக இருந்த சீதாராமன் ஓய்வு பெற்று, புதிய ஆணையரும் பதவி ஏற்றுவிட்டார். ஆனால், தற்போதுவரை உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும், உள்ளாட்சி அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கக் கூடாது என்று கூறி பாடம் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும்?  உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?" என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக , வருகின்ற 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.