காந்தி சிக்கலில் ராகுல்!

திடீர் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் ராகுல் காந்தி. 'குஜராத் கலவரத்தில் மோடியின் தொடர்பு குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்’ என்று ஒருபக்கம் மோடி மீதும், 'மகாத்மா காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ். சம்பந்தப்பட்டிருக்கிறது’ என இன்னொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். மீதும் புகார் சொல்லியிருக்கிறார். கொந்தளித்துப்போன பி.ஜே.பி., 'எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு ராகுல் இப்படி பேசுகிறார்? அவர் மக்களை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார். இது எந்த பலனையும் அளிக்காது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்பது ராகுல் காந்தியின் பகல் கனவு. காங்கிரஸ் நிச்சயம் படுதோல்வி அடையும்’ என்று பதிலடி கொடுத்திருப்பதோடு, தேர்தல் ஆணையத்திலும் ராகுல் மீது புகார் செய்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்போ, ராகுல் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறது. 'மகாத்மா காந்தி கொலை தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட அனைத்து ஆணையங்களுமே, இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளது. இந்தச் சூழலில் வேண்டும் என்றே இப்படி ஒரு அவதூறைக் கிளப்பி, ஆர்.எஸ்.எஸ். மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்களைப் புண்படுத்துகின்றனர்'' என்று அந்த அமைப்பு நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.''நானும் என் அண்ணன் நாதுராமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில்தான் இருந்தோம்'' என்று கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே சொன்னதை, காங்கிரஸ் தூசிதட்டி எடுத்துள்ளது. ராகுல் கிளப்பியுள்ள காந்தி கொலை சர்ச்சை, இந்தத் தேர்தலில் கடுமையாக எதிரொலிக்கிறது.

தன்னை மட்டுமே நம்பி!

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கணக்காகக் கடும் அதிருப்தியில் இருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. காரணம், மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்த அண்ணா ஹசாரே, திடீரென தனது ஆதரவை விலக்கிக்கொண்டதுதான். மம்தாவுடன் சேர்ந்து பேசத் திட்டமிட்டிருந்த கூட்டத்தை திடீரென புறக்கணித்தார். 'எனது ஆதரவு மம்தா பானர்ஜிக்கு மட்டும்தான்; அவரது கட்சிக்கு அல்ல!’ என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் அண்ணா ஹசாரே. 'மம்தா பானர்ஜி நாடு முழுவதும் அறியப்பட்ட தலைவர். அவருக்கு நாடு முழுவதும் மக்கள் செல்வாக்கு உள்ளது. அவரை யாரும் பிரபலப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவரும் யாரிடமும் தன்னைப் பிரபலப்படுத்த வேண்டும் என்றும் கோரவில்லை' என அண்ணா ஹசாரேவை நோக்கி மறைமுகத் தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்துள்ளது மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ். இந்தச் சூழ்நிலையில் அகமதாபாத்தில் நடக்க இருந்த பேரணியை ரத்துசெய்த மம்தா, இப்போது மேற்கு வங்க மாநிலத்தில் முதல்கட்டத் தேர்தல் நடக்கும் தொகுதியில் தனது பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

ஊருக்காக 6!

நட்சத்திரத்தின் ஆறுமுனைகளைக் குறிக்கும்விதமாக தனது புதிய கட்சியான ஜன சேனாவுக்கு, ஆறு கோட்பாடுகளை வகுத்திருக்கிறார், அதன் தலைவரான தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்.

அதிக நேரம்... புதிய வீடு!

ஒரு நாளைக்கு 11 மணி நேரம் வேலை பார்க்கிறாராம் பிரதமர் மன்மோகன் சிங். தேர்தலுக்கான காலம் நெருங்கிவிட்டதால், அவருடைய வேலைப் பளு கூடிவிட்டதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காலை 9.30 மணிக்குத் தன்னுடைய பணிகளைத் தொடங்கி இரவு 7.30 மணிக்கு நிறைவு செய்கிறார். தன்னுடைய பதவி காலத்துக்குப் பிறகு டெல்லி மோதிலால் நேரு மார்க்கில் உள்ள லுட்டியன்ஸ் சொகுசு வீடுகள் பகுதியில் தங்க உள்ளாராம். ஏற்கெனவே, டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் அங்குதான் தங்கியிருந்தார். இப்போதே நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை அதிகாரிகள் கணித்துவிட்டனரோ, என்னவோ தெரியவில்லை. பிரதமர் தங்கவிருக்கும் சொகுசு வீட்டை இப்போதே தயார் செய்யவும் ஆரம்பித்துள்ளனர்.

பதேபூர் சிக்ரியில் போட்டியிடும் ராஷ்ட்ரிய லோக்தள் வேட்பாளர் அமர்சிங், அசம்கர்க் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங்குக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார். காங்கிரஸின் ஒரே நம்பிக்கை!

கடும் நெருக்கடியில் தவித்துவருகிறது பிரபுல்ல குமார் மகந்தாவின் அசாம் கண பரிஷத் கட்சி. அசாம் மாநிலத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருக்கும் இந்தக் கட்சி, இந்த முறை எப்படியாவது ஜெயித்து தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிக்கப் போராடி வருகின்றனர். கடந்த வாரம் அந்தக் கட்சியைச் சேர்ந்த இரு மூத்த தலைவர்கள் சந்திரமோகன் பட்டோரி மற்றும் ஹிட்டேந்திர நாத் கோஸ்வாமி ஆகியோர் கட்சித் தலைமை மீது அதிருப்தியை வெளிப்படுத்திவிட்டு, பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து இணைந்துள்ளனர். மத்தியில் இருக்கும் காங்கிரஸுக்கு இப்போதைய ஒரே ஆறுதல் அசாமில் ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ், வரும் தேர்தலிலும் பெருவாரியான வாக்குகளோடு அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று வெளியாகியிருக்கும் கருத்துக் கணிப்புகள்தான். அதனால் பி.ஜே.பி. கூட்டணியில் சேர்ந்துவிட எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது அசாம் கண பரிஷத். ஆனால், பி.ஜே.பி. தரப்பில் இருந்துதான் இதுவரை ரிப்ளை இல்லை!

வழக்கு எண் 23/48

மகாராஷ்டிராவில் 48 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. சிவசேனா, காங்கிரஸ், பி.ஜே.பி. என எப்போதும் மும்முனை போட்டியைச் சந்திக்கும் மாநிலம் இது. அதே சமயம், அதிக குற்ற வழக்குகளை உடைய எம்.பி-க்களைக் கொண்டிருப்பதும் இதே மாநிலம்தான். கடந்த முறை தேர்வான 48 எம்.பி-க்களில் 23 எம்.பி-க்கள் மீது பல குற்ற வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவாகி நிலுவையில் உள்ளன. அதிலும், சிவசேனாவைச் சேர்ந்த எம்.பி-க்கள் மீதுதான் அதிக குற்ற வழக்குகள் பதிவாகியிருக்கிறதாம்.

சாப்பிட வாங்க!

'ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்ட மீடியாக்களை சிறையில் அடைத்துவிடுவோம்’ என அந்தக் கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சொன்ன கருத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இந்த நிலையில் அடுத்த சர்ச்சை ஒன்றும் கிளம்பியிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் 28 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. இதையட்டி, கட்சிக்கு நிதி திரட்டும் வகையில் நட்சத்திர ஹோட்டலில் இரவு விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டதாம். இதில் பங்கேற்பவர்கள் குறைந்தபட்சம் தலா 20 ஆயிரம் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் சுமார் 200 பேர் பங்கேற்றனர். இந்த விருந்தில் 50 லட்சம் நன்கொடையாக வசூலானது என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதேபோல, நாக்பூரில் 20 லட்சம் வசூலாகியிருக்கிறது. இப்படி வசூல் செய்வதற்குப் பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. கர்நாடகாவில் கெஜ்ரிவாலை கிண்டல் செய்யும்விதமாக கன்னட சலுவாலி இயக்கத்தின் தலைவர் வாட்டாள் நாகராஜ், பெங்களூரில் தன்னுடன் மதிய விருந்து சாப்பிட தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார். தலா 5 ரூபாய் செலுத்தி இந்த விருந்தில் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

மோடியை எதிர்க்கப்போவது யாரு?

வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிடப்போவதாக பி.ஜே.பி. அறிவித்துள்ளது. '23-ம் தேதியன்று நடைபெறும் பேரணியை முடித்துவிட்டுத்தான், வாரணாசியில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்வேன்’ என்று கெஜ்ரிவால் ஒருபக்கம் சொல்லியிருக்கிறார். இன்னொரு பக்கம், சுனாமிகளுக்கிடையே சிக்கிய படகைப்போல தள்ளாடுகிறது அகிலேஷின் சமாஜ்வாடி பார்ட்டி. வாரணாசி தொகுதியில் மூன்று லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் இருப்பதால், கியோமி எக்தா தள் கட்சியைச் சேர்ந்த முக்தர் அன்சாரியும் போட்டியிடுகிறார். யாரை இங்கு வேட்பாளராக நிறுத்தலாம் என்று காங்கிரஸ் யோசித்துக்கொண்டே இருக்கிறது. அகிலேஷின் தந்தை முலாயம் சிங் இந்த முறை அசம்கர்க் தொகுதியில் போட்டியிட உள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பி.ஜே.பி. வலுவாகக் காலூன்ற வேண்டும் என்பதே மோடியின் திட்டம். அதற்காகவே அவரது நண்பர் அமித்ஷாவை இங்கு பொறுப்பாளராக நியமித்துள்ளார்.