புதுவையில் கத்திரி வெயில் இப்போதே கண்கட்ட ஆரம்பித்துவிட்டது. காரணம்... அங்கே அறிவிக்கப்பட்ட மூன்று வேட்பாளர்கள். மத்திய அமைச்சர் நாராயணசாமி, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், பா.ம.க. வேட்பாளர் ஆனந்தராமன்... மூவருக்குமான இடியாப்பச் சிக்கல்தான் அங்கே அனல் பறப்பதற்குக் காரணம். ஆனாலும், முதல்வர் ரங்கசாமிக்கும் - மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையேதான் 'பாண்டி’ ஆட்டம்.

கட்சித் தொடங்கி என்.ஆர். காங்கிரஸ் சந்திக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் என்பதால், புதுச்சேரியை அவ்வளவு எளிதில் நாராயணசாமிக்கு விட்டுக்கொடுக்க மாட்டார் ரங்கசாமி. இதில், மத்திய அமைச்சரின் நிலைதான் கொஞ்சம் கவலைக்கிடமாக உள்ளது. அமைச்சரின் ஆதரவாளர்களிடம் பேசினோம். ''தமிழகத்துல மூத்த காங்கிரஸ் தலைவர்களே தேர்தல்ல போட்டியிடாம ஒதுங்கும்போது, புதுச்சேரியில நாராயணசாமி தெம்பா களமிறங்குறாருன்னா சும்மா கிடையாது. தமிழகத்துல எப்படியும் காங்கிரஸ் ஒரு தொகுதிகூட தேறாதுன்னு ராகுலுக்குத் தெரியும். ஆனா, புதுச்சேரியில நிச்சயமா நாராயணசாமி ஜெயிச்சிடுவார்னு உறுதியா இருக்கார். நாராயணசாமி மீண்டும் எம்.பி. ஆயிட்டா தன்னுடைய செல்வாக்கை நிரூபிச்ச மாதிரியும் இருக்கும்; அதே சமயம் தென் இந்தியாவிலே ராகுல், சோனியா குடும்பத்தினரிடையே அதிக நெருக்கம் காட்டும் தலைவராகத் தன்னை உயர்த்திக்கவும் முடியும்னு நம்புறார்'' என்றனர்.

தினமும் விடியற்காலையில் எழுந்து தேர்தல் பிரசாரத்துக்கானப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறாராம் நாராயணசாமி. கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் அவர். இந்த முறை சில ஆயிரம் வாக்கு வித்தியாசங்களே வேட்பாளரை வெற்றியடைய வைக்கும் என்பதைப் புரிந்துகொண்டு நூறு, இருநூறு வாக்குகளைக் கொண்டுள்ள அமைப்பு மற்றும் நிறுவனங்களிடம் மடி ஏந்திவருகிறார். தன்னைச் சந்திக்க வருபவர்களுக்கு உடனடியாகப் பொன்னாடை போர்த்தி அவர்களை அகமகிழவைக்கிறார்.

என்.ஆர். காங்கிரஸ் கூடாரத்தில் ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்தபோது, ஆரம்பத்தில் கட்சி தொண்டர்களிடம் ஏகப்பட்ட அதிருப்தி இருந்தது. அதனைச் சரிசெய்து பிரசாரத்தைத் தொடங்கிவைத்த ரங்கசாமி இன்னும் களத்தில் இறங்காமல் மௌனமாக உள்ளார். ''ராதாகிருஷ்ணனுக்கு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் என அனைத்துக் கட்சிகளிலும் நண்பர்கள் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆளும் என்.ஆர். காங்கிரஸுக்கு நாராயணசாமி எவ்வளவு நெருக்கடி கொடுத்தார் என்பது மக்களுக்குத் தெரியும். காங்கிரஸ் தொகுதியான ஏனாம் பகுதியில் எங்களுக்குப் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்கும். இன்னும் சில தினங்களில் ரங்கசாமியும் பிரசாரத்தில் களமிறங்குவார். அதில், நாராயணசாமி புதுச்சேரி மாநிலத்துக்கு என்னென்ன கொடுமைகளை இழைத்தார் எனப் பட்டியல் போட்டுப் பேசுவார்'' என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

பி.ஜே.பி. கூட்டணியில் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடும் என அறிவித்தும் பா.ம.க. வேட்பாளர் அனந்தராமன் விலகாமல் விடாப்பிடியாகப் பிரசாரம் மேற்கொண்டுவருகிறார். செல்லும் இடமெல்லாம் 'புதுவையில் நிச்சயமாக பா.ம.க போட்டியிடும்’ என்று ரங்கசாமிக்குத் தலைவலி கொடுத்துவருகிறார். இதுகுறித்து சிலர், 'அனந்தராமனால நிச்சயமா ஜெயிக்க முடியாது. அது அவருக்கே தெரியும். இருந்தாலும், ஏனோ ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுக்க நினைக்கிறார்'' என்கின்றனர்.

காமெடி நாடகங்களைப் பார்க்க புதுவை மக்கள் தயாராகி வருகின்றனர்.

- நா.இள.அறவாழி

படங்கள்: ஜெ.முருகன்