பிரபலங்களை வளைப்பதுதான் ஆம் ஆத்மியின் மறைமுக திட்டமாக இருக்கும்போல!

டெல்லியில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி, அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும் குதித்துள்ளது. அந்தந்த மாநிலங்களில் இருக்கும் சில முக்கியமாக நபர்களையும், மீடியாக்களால் அதிகம் பேசப்படுபவர்களையும் தங்களுடன் சேர்த்துக்கொண்டு இந்தத் தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். சண்டிகரில், மிஸ் இந்தியா அழகிப் பட்டம் வென்ற குல் பனாக்; மும்பையில் சமூகப் போராளி மேதா பட்கர்; குஜராத்தில், காந்தியின் பேரனான ராஜ் மோகன்... இப்படி இந்தியா முழுவதும் நபர்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அவர்களைப் பற்றிய சின்ன அறிமுகம் இங்கே...

சண்டிகர், மிஸ் இந்தியா குல் பனாக்:

இந்திப் படங்களைத் தேடித் தேடிப் பார்ப்பவர்கள், ஆம் ஆத்மி கட்சியின் சண்டிகர் வேட்பாளர் குல் பனாக்கை நிச்சயம் அறிந்திருப்பார்கள். இவர் பாலிவுட் நட்சத்திரம். 1999-ம் ஆண்டு 'மிஸ் இந்தியா’ பட்டம் வென்றவர். மாடல் என்பதும் நடிகை என்பதும் மட்டுமல்ல குல் பனாக்கின் அடையாளங்கள். அவர் இளங்கலை கணிதப் பட்டதாரி. அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். விளையாட்டு வீராங்கனை, தனியார் நிறுவனங்களின் விளம்பரத் தூதர் என பன்முகம் கொண்டவர். இப்போது ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து அரசியல்வாதி முகத்தை சேர்த்துக்கொண்டார்.

கல்லூரிக் காலங்களில் தேசிய அளவில் நடைபெற்ற கருத்தரங்கங்களில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றவர். அந்த ஆர்வம், அவருக்குள் நடிகை, மாடல் என்பதைத் தாண்டி,

அரசியலையும் விதைத்திருந்தது. ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டபோது, அதில் தன்னை இணைத்துக்கொண்டவர். அதன் பிறகு, அவராகவே கெஜ்ரிவாலுடன் பேசி, இந்த ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துகொண்டார். இப்போது சண்டிகார் தொகுதி வேட்பாளரான இவர், பிரசாரத்துக்காக வந்தாலே கூட்டம் பின்னி எடுக்கிறது.

வடகிழக்கு மும்பை, மேதா பட்கர்:

1988-ல் நர்மதா அணையின் கட்டுமானம் நடந்தபோது, லட்சக்கணக்கான மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தனர். இதனால், அணையின் கட்டுமானத்தை நிறுத்த, நர்மதை பள்ளத்தாக்குக்குள் பயணித்து மக்களை அணிதிரட்டினார் மேதா பட்கர். நர்மதா பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கினார். 1989-ல் 50 ஆயிரம் பேர் ஹர்ஸதில் திரண்டனர். தொடர்ந்து 1990-ல் பாட்வானியில் பெரிய அளவில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வெற்றியும் பெற்றார் மேதா பட்கர்.

அன்று முதல் இன்று வரை மக்களுக்காகப் போராடிவரும் சமூகப் போராளி. இதுவரை இவர் எந்தக் கட்சியிலேயும் இணையவில்லை. அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது, அவருக்கு ஆதரவாக அதில் இணைந்தவர். கெஜ்ரிவால் அழைப்பின் பேரிலேயே, சில நிபந்தனைகளுடன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருக்கிறார். ஊடக வெளிச்சத்தில் எப்போதும் இருப்பவர். வடகிழக்கு மும்பையில் போட்டியிடப்போகிறார். இவரும் கடந்த மாதம்தான் கட்சியில் இணைந்தார்.

கிழக்கு டெல்லி, ராஜ் மோகன் காந்தி:

காந்தியின் பேரன் ராஜ் மோகன் காந்தி... அமெரிக்காவில் ஆய்வுத் துறை பேராசிரியராகவும், 1990 - 92-ல் ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்தவர். சில காலம் பத்திரிகைத் துறையிலும் ஈடுபட்டு இருக்கிறார். தொண்டு நிறுவனங்கள் மூலம் சேவை செய்துவந்தவர். அரசியலில் ஈடுபட விரும்பினார். முன்பு ஒரு கட்சியில் இணைந்து இருந்தாலும், 'என் தாத்தா காந்தி பெற்றுத்தந்த சுதந்திரத்தை இங்குள்ள கட்சிகள் ஊழல் மிகுந்ததாக ஆக்கிவிட்டது. இவர்களால் மக்களுக்கு எந்த நன்மையுமே இல்லை’ என்று சொல்லி கட்சியைவிட்டு வெளியேறினார்.

'இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளிலுமே ஊழல், எந்தக் கட்சியும் மக்களுக்கு நன்மை செய்யப்போவதாகத் தெரியவில்லை’ என்றவரை, கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சிக்கு அழைத்துவந்தார். கடந்த மாதம்தான் கட்சியில் இணைந்து இருந்தாலும், புதுடெல்லியில் முக்கியமான தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் மகன் சந்தீப் தீட்ஷித் போட்டியிடும் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடப்போகிறார். 'ஆம் ஆத்மிதான் என் தாத்தா வாங்கிக்கொடுத்த சுதந்திரத்தை கட்டிக்காக்கும்’ என இப்போது தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக சொல்லி வருகிறார்.

கட்சியில் சேர்ந்து பிரபலம் ஆவது ஒருவகை. பிரபலங்களைக் கட்சியில் சேர்ப்பது இன்னொரு வகை!

- நா.சிபிச்சக்கரவர்த்தி