இஸ்லாமியர்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டை அதிகரித்துத் தரக் கோரி ஆளுங்கட்சிக்கு எதிராகக் கடந்த ஜனவரியில் சென்னையில் பெரிய அளவிலான போராட்டம் நடத்திய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு, நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவு நிலையை எடுத்துள்ளது. ஏன் இந்த திடீர் முரண்பாடு? அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் ஜெயினுல் ஆபிதீனிடம் பேசினோம்.

''இந்தியா விடுதலை அடைந்த பிறகு கல்வி, வேலைவாய்ப்புகளில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு இரண்டு சதவிகிதமாக மட்டுமே இருந்தது. எங்களின் மிக முக்கியமான கோரிக்கையும் இட ஒதுக்கீடு தொடர்பானதே. யார் இதனைச் செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் எப்போதும் எங்களின் ஆதரவு. தி.மு.க. எங்களது கோரிக்கைக்குச் செவிசாய்க்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என்று நினைத்தோம். ஆனாலும், எங்களது கோரிக்கை நிலுவையிலேயே இருந்தது. அதற்காக கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினோம். அப்போது எங்கள் மக்களிடம், 'இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தினால், அ.தி.மு.க-வை ஆதரிப்பீர்களா?’ என்று கேட்டோம். அவர்களும் சம்மதம் சொன்னார்கள். அதன் அடிப்படையிலேயே எங்களது பொதுக்குழுவில் முடிவுசெய்து அ.தி.மு.க. ஆதரவு நிலையை எடுத்துள்ளோம்.''

''வெற்றிபெற்ற பிறகு உங்கள் இட ஒதுக்கீடு கோரிக்கையை அ.தி.மு.க. நிறைவேற்றும் என்று நம்புகிறீர்களா?''

''நாங்கள் அ.தி.மு.க. ஆதரவு நிலை எடுத்தபிறகு முதலமைச்சரை சந்தித்தோம். இட ஒதுக்கீடு தொடர்பாகவும் பேசினோம். அப்போது அவர் எங்களிடம், 'நான் ஏமாற்றும் ஆள் கிடையாது. ஆணையம் சொன்னபடி செய்வேன்’ என்றார். இப்போது பிரசார மேடைகளிலும் அதைப் பேசிவருகிறார்கள். இஸ்லாமிய மக்களின் ஓட்டு வங்கியை அடுத்த தேர்தல்களிலும் தக்கவைக்க வேண்டும் என்ற அவர்களின் நன்மைக்காகவாவது அவர்கள் இதைச் செய்வார்கள்.''

''பி.ஜே.பி. அமைத்துள்ள கூட்டணி பற்றி உங்கள் கருத்து என்ன?''

''தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க-வைத் தாண்டி எந்தக் கட்சியும் செல்வாக்குப் பெற முடியாது. இதுதான் தமிழகத்தின் தலையெழுத்து. ஜெயிக்கிற கட்சிக்குதான் தமிழ்நாட்டு மக்கள் ஓட்டுப்போடுவார்கள். பி.ஜே.பி-க்கு ஓட்டுப்போடலாம் என்ற சிந்தனை உள்ளவர்கள்கூட, நாம் மட்டும் ஓட்டுப்போட்டு இவர்கள் ஜெயிக்கவா போகிறார்கள் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க-வுக்கே ஓட்டுப் போடுவார்கள். பிரதமர் என்ற இலக்குடன் அ.தி.மு.க. களம் இறங்கியிருக்கிறது. இதற்காக மம்தா பானர்ஜியுடன் பேசிவிட்டார்கள். சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய அணி அமைத்து பிரதமராக வேண்டும் என்று ஜெயலலிதா வேலைசெய்கிறார். நிச்சயம் ஜெயலலிதாவுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கான காலம் கனிந்து உள்ளது!''

- செஸா