ராஜ்நாத் சிங் ஸ்டேட்டஸ்!

பி.ஜே.பி. மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் தும்மினால்கூட ஃபேஸ்புக்கில் அப்டேட் செய்துவிடுகிறாராம் அவரது உதவியாளர். தமிழ்நாட்டில் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்து அவர் டெல்லிக்குக் கிளம்பும்போது, 'தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., ஐ.ஜே.கே மற்றும் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகியவை இன்று கூட்டணியில் சேர்ந்தன. என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி இது’ என்று ஸ்டேட்டஸ் போடச் சொன்னாராம் ராஜ்நாத் சிங். இருக்காதா பின்னே!

நன்மை செய்ய நாங்க இருக்கோம்!

இந்திராவின் இளைய மகனான சஞ்சய் காந்தியின் மனைவியும் முன்னாள் மத்திய அமைச்சருமான

மேனகா காந்தி பி.ஜே.பி-யின் வேட்பாளராக பிலிப்பிட் தொகுதியில் களமிறங்குறார். ''இந்த முறை பி.ஜே.பி. ஆட்சியைப் பிடிக்கும் என்பதால், முன்பைவிடவும் இந்தத் தொகுதிக்கு நிறைய நன்மைகளை செய்ய முடியும். நான் எப்போதும் உங்களோடு இருப்பேன். அதனால், தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்'' என்று சொல்லி வாக்கு சேகரிக்கிறார் இந்திரா குடும்பத்து மருமகள்.

சரிதாவும் சர்ச்சைகளும்!

கேரளா தேர்தல் களத்தில் இப்போது ஹாட் டாபிக் சரிதா நாயர்தான். கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட சரிதா நாயர், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலருடன் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்ததும், காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான அப்துல்லா குட்டி தன்னை ஹோட்டலில் வைத்து பலாத்காரம் செய்ததாக புகார் கிளப்பினார். இது கேரளாவில் காங்கிரஸுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. தேர்தல் பிரசாரத்தில் சரிதா நாயரை மையப்படுத்தி காங்கிரஸ் கட்சியை கம்யூனிஸ்ட் கட்சிகள் கேள்விக்குள்ளாக்கி வருகின்றன. கூடுதலாக மத்திய அமைச்சர் வேணுகோபாலுடன் சரிதா நாயர் ஒன்றாக இருப்பது போன்ற போஸ்டர்கள் பரவலாக ஒட்டப்பட்டு, காங்கிரஸுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது கம்யூனிஸ்ட்.

இந்நிலையில், 'காங்கிரஸ் வேட்பாளர்களைத் தோற்கடிக்க தனது உதவியைக் கேட்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் அணுகினர். தங்களது லாபத்துக்காக என்னை அரசியல்வாதிகள் பகடைக் காய்களாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம்' என அதிரடியாக அறிவித்துள்ளார் சரிதா நாயர். மத்திய அமைச்சர் வேணுகோபாலுடன் சேர்ந்து இருப்பது போன்ற போஸ்டர்களுக்கு தடைவிதிக்கக் கோரி புகாரும் செய்திருக்கிறார்.

எதையும் மறைக்கவில்லை!

இந்தத் தேர்தலில் மிகப்பெரிய பணக்கார வேட்பாளர் இவராகத்தான் இருக்க முடியும். நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நந்தன் நீல்கேனி, தனக்கு ரூ.7,700 கோடி சொத்து இருப்பதாக சர்வ சாதாரணமாக சொத்து விவரத் தகவல்களை அளித்து ஆச்சர்யப்படுத்துகிறார். ஆதார் அடையாள அட்டை திட்டத்தின் முன்னாள் தலைவரான இவர், கடந்த 9-ம் தேதிதான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மறுநாளே பெங்களுரூ தெற்குத் தொகுதியின் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான இவர், '1978-ம் ஆண்டு என் பாக்கெட்டில் 200 ரூபாய்தான் இருந்தது. இப்போது எனக்கும் எனது மனைவி ரோகிணி நீல்கேனிக்கும் ரூ.7,700 கோடிக்கு சொத்து உள்ளது. என்னுடைய பணம் தவறான வழியில் சம்பாதித்தது அல்ல. அதேபோல நாட்டுக்கு வெளியே எதுவும் முதலீடு செய்து மறைக்கவில்லை. வேறு யாருடைய வங்கிக் கணக்கிலும் போட்டு மறைக்கவில்லை. முழுவதும் வெளிப்படையானது, வரி கட்டியது'' என்று மீடியாக்களுக்கு விளக்கமளிக்கிறார். இவருக்கு எதிராகப் போட்டியிடும் ஆனந்தகுமார், 5 முறை எம்.பி-யாக இருந்தவர். இவர் தனது சொத்து மதிப்பை 51.12 லட்சம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர். ஸ்டைலில் ஜெகன்!

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஓய்வில்லாமல் சுற்றிவருகிறார் ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி. கூட்டத்தில் இருக்கும் பெரியவர்களையும் பாட்டிகளையும் பார்த்தால் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் தடாலென கட்டிப்பிடித்து ஒரு சால்வையையும் போர்த்துகிறாராம்.

சிக்கலில் சிபல்!

மத்திய அமைச்சர் கபில் சிபல், டெல்லியின் சாந்தி சவுக் தொகுதியில் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதி மக்களுக்கு கை சின்னம் பொறிக்கப்பட்ட வாட்டர் பியூரிஃபயர் மிஷின்கள் வீடு வீடாக வழங்கப்பட்டன. இதை ஆம் ஆத்மி கட்சியினர் படம் எடுத்து தேர்தல் கமிஷனிடம் புகார் செய்துவிட, ஏக டென்ஷனில் இருக்கிறார் கபில் சிபல்.

கிரிக்கெட்டும் தேர்தலும்!

'நம் கட்சி வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் தேறுமா, இல்லையா என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்து கணித்துவிடலாம்’ என்று கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முதல்வர் உமர் அப்துல்லா. மேலும், ''நாடாளுமன்றத் தேர்தல் கிரிக்கெட் மேட்சின் முதல் இன்னிங்ஸ் போன்றது. இரண்டாவது இன்னிங்ஸில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பது முதல் இன்னிங்ஸில் நாம் எப்படி விளையாடுகின்றோம் என்பதைப் பொறுத்தது'' என்று போட்டுத் தாக்கியுள்ளார். உமர் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியும், காங்கிரஸும் கைகோத்து ஆறு தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். உமர் அப்துல்லாவுக்கு பெரிய தலைவலியே மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சிதான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று தொகுதிகளில் வெற்றிபெற்ற உமர் அப்துல்லா இந்த முறை எத்தனை கிடைக்குமோ என்ற பதற்றத்தில் உள்ளார்.

இங்கே நண்பன்... அங்கே வேலைக்காரன்!

மகாராஷ்டிர மாநிலத்தில் பி.ஜே.பி. கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லி ஆகிய மாநிலங்களில் தனித்து வேட்பாளரை நிறுத்தப்போவதாக அறிவிக்க... கூட்டணியில் குழப்பம் எழுந்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவின் தீவிர எதிரி ராஜ் தாக்கரே. இவர் உத்தவ் தாக்கரேவின் ஒன்றுவிட்ட சகோதரர். மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர். இந்த நிலையில் ராஜ் தாக்ரேவை பி.ஜே.பி. மூத்த தலைவர் நிதின் கட்காரி மும்பையில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, பி.ஜே.பி. மற்றும் சிவசேனா கட்சிகள் இடையே முரண்பாடு ஏற்பட்டன. இரு தலைவர்களும் சமரசப் பேச்சு நடத்தி மகாராஷ்டிராவில் கூட்டணியை ஒட்டவைத்தனர். ஆனால், மகாராஷ்டிராவை தவிர்த்து, மற்ற மாநிலங்களில் கூட்டணி ஏற்படுத்த முடியவில்லை. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வேலைக்காரர்போல நடத்துவதாக பி.ஜே.பி-க்கு எதிரான பிரசாரத்தை தொடங்கியுள்ளது சிவசேனா.

கவலையில் தேர்தல் ஆணையம்!

இந்தியாவின் வடகிழக்கில் அமைந்திருக்கும் மிகச்சிறிய மாநிலம் சிக்கிம். ஒரேயரு நாடாளுமன்றத் தொகுதியைக் கொண்ட இந்த மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலும் நடக்க இருக்கிறது. இந்த மாநிலத்தின் மூன்று பக்கத்திலும் சீனா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் இருப்பதால், பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது தேர்தல் பிரசாரம் களைகட்டிய நிலையில், மத்திய ராணுவப் படையினர் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி வருகிறார்கள். இந்த சூழலில், மாநிலக் கட்சிகளான சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சாவும், காங்கிரஸும் தேர்தல் களத்தில் நேருக்கு நேராக மோதுகின்றன. மூன்றரை லட்சம் வாக்காளர்களை மட்டுமே கொண்டிருக்கும் இந்த மாநிலத்தில், வெற்றியைத் தக்கவைக்க காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. தேர்தல் ஆணையமோ இந்த சிறிய மாநிலத்தில் பிரச்னை இல்லாமல் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமே என்கிற கவலையில், தினமும் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை நடத்தி வருகிறது.

மனைவியா... தலைவியா?

ஒருசில மாநிலங்களைத் தவிர்த்து பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸின் செல்வாக்கு சரிந்தே காணப்படுகிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் எங்கே தலைமை தங்களை முன்மொழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர். இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி, அம்ரிஸ்டர் தொகுதியில் களமிறங்கியுள்ளார். அருண் ஜெட்லிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கை வேட்பாளராக நிறுத்தியுள்ளார் சோனியா. அமரிந்தர் சிங்கை வேட்பாளர் ஆக்கியதற்கு அவருடைய மனைவி பிரனீத் கவுர் காங்கிரஸ் தலைமைக்கு கடுமையான எதிர்ப்புகளைக் காட்டியுள்ளாராம். காரணம், கடந்த மூன்று முறை பாட்டியலா தொகுதி எம்.பி-யாக பிரனீத் கவுர் பதவி வகித்துள்ளார். இந்த முறை தொகுதியில் தனக்கு பயங்கர எதிர்ப்புகள் இருப்பதால் எங்கே கப்பல் தரை தட்டிவிடுமோ என்று பயந்து தன் கணவர் அமரிந்தர் சிங்கை பிரசாரத்துக்கு அழைத்து வர திட்டமிட்டிருந்தார். ஆனால், சோனியா அமரிந்தர் சிங்கை களமிறக்கியுள்ளார். மனைவியா... தலைவியா என்ற குழப்பத்தில் தவிக்கிறார் அமரிந்தர் சிங்.