'ஒரே பாயின்ட்டு... ஓஹோன்னு ஓட்டு!

அ.தி.மு.க-வுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் பிரபலங்கள், நடிகர்கள், கழகப் பேச்சாளர்கள் அனைவரையும் சென்னைக்கு வரவழைத்து ஸ்பெஷல் பயிற்சி வழங்கியதாம் தலைமைக் கழகம். அந்தப் பயிற்சியில், ''மற்ற கட்சிகளைத் தாக்கிப் பேசியே பிரசாரத்தை முடிச்சிடாதீங்க. அம்மாவோட சாதனைகள் என்ற பாயின்ட் எடுத்துகிட்டு, எல்லா சாதனைகளையும் 360 டிகிரியிலேயும் கவர் பண்ணி பேசிடணும். அடிக்கடி வேட்பாளர் பெயர், கட்சி சின்னத்தைச் சொல்லி, மக்கள் மனசுல பதியும்படி பேசினால், ஓஹோன்னு ஓட்டு வாங்கிடலாம்’ என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி அனுப்பினார்களாம். ''யாரும் மறந்துகூட மோடியைத் தாக்கிப் பேசக் கூடாது'' என்பதும் முக்கியமான உத்தரவு.

- காளிராஜ்

ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கோவையில் நடைபெற்ற கூட்டம்தான், கட்சிக்குத் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தக் கூட்டத்தை கவர் செய்ய ஒரு கிரேனைக் கொண்டுவந்து நிறுத்தி அதன் மூலம் கூட்டத்தை ஜெயா டி.வி. கேமராவில் கவர் செய்தனர். அது ஜெயலலிதாவுக்கு ரொம்ப பிடித்துவிடவே, அதன் பிறகு நடக்கும் ஒவ்வொரு கூட்டங்களிலும் கட்டாயம் கிரேன் பயன்படுத்தப்படுகிறது. # இது தேர்தல் கணக்கில் சேருமா?

- சு.குமரேசன்

மாமியார் சொல் தவறாத மருமகள்!

ஈரோடு தி.மு.க. வேட்பாளரான பவித்திரவள்ளி, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்தான் கட்சியில் உறுப்பினராக சேர்க்கப்பட்டவர். இதனால், கட்சியின் பெருந்தலைகளே மௌனமாக ஒதுங்கி நிற்கின்றனர். அரசியலில் அரிச்சுவடிக்கூட தெரியாத பவித்திரவள்ளியும், திருவிழாவில் காணாமல் போன குழந்தைபோல திருதிருவென விழித்துக்கொண்டுதான் இருக்கிறார். அவரிடம் ஏதேனும் கருத்து கேட்க நிருபர்கள் போன் அடித்தால்கூட, தன் மாமியாரிடம் போனைக் கொடுத்துவிடுகிறார். கடுப்பான நிருபர் ஒருவர், ''உங்க பிரசார வியூகங்கள், வாக்குறுதிகள் பற்றி கேட்கத்தான் உங்களுக்கு போன் செய்கிறோம். மாமியாரிடம் கொடுத்து பேசச் சொன்னால் எப்படி? குறைந்தபட்சம் ஒரு பிரஸ் மீட் நடத்தி எல்லா நிருபர்களையும் ஒருமுறை சந்தித்தால் நல்லது'' என்று கூறியிருக்கிறார். அதற்கு, ''பிரஸ் மீட் அப்படிங்கிறதெல்லாம் எனக்குத் தெரியாது சார். இப்பகூட கட்சிக்காரங்க ஒரு கூட்டத்துக்குக் கூப்பிட்டு இருக்காங்க. அங்கதான் போயிட்டு இருக்கேன். பத்திரிகைக்காரங்களும் அங்கே வந்தா பேசிடலாம் சார்’ என்று வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டு பவ்யத்துடன் பேசியிருக்கிறார். அவர் குறிப்பிட்ட கூட்டம் என்ன என்று விசாரித்ததில், அது செயல்வீரர்கள் கூட்டம் என்று தெரியவந்திருக்கிறது. செயல்வீரர்கள் கூட்டம் என்றால் என்னவென்றுகூட தெரியாமல், இவர் என்னத்த சாதிக்கப்போகிறார் என்று பத்திரிகையாளர்கள் பேசிக்கொண்டார்கள்!

- கோபால்

எம்.ஜி.ஆரின் கனவு என்ன தெரியுமா?

தூத்துக்குடி அ.தி.மு.க. வேட்பாளர் நட்டர்ஜியை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்தார். ''நட்டர்ஜிக்கு நீங்கள் வாக்களிப்பது பெற்ற தாய்க்கு சோறூட்டுவதுபோல; பசியால் அழும் குழந்தைக்கு பாலூட்டுவதுபோல; படிக்கும் ஏழைக் குழந்தைக்கு கல்வி கொடுப்பதுபோல; வயதான தந்தைக்கு ஊன்றுகோல் கொடுப்பதுபோல. ஆனால், மற்ற கட்சிக்கு வாக்களித்தால், அது கடலில் விழும் மழை நீர்போல.. யாருக்கும் கிடைக்காமல் போயிடும்'' என்று அடுக்குமொழியில் புருவம் உயர்த்தி பேசிக்கொண்டிருந்தவர்... திடீரென்று, ''எம்.ஜி.ஆரின் கனவு என்ன தெரியுமா? இந்தியாவை அ.தி.மு.க. ஆளும் என்று அன்றே எம்.ஜி.ஆர். கணித்துவிட்டார். அதனால்தான் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று அன்றே பெயர் வைத்து விட்டார்'' என்று ஒரே போடாக போட்டார். # தத்துவம் நம்பர் 10,002.

- இ.கார்த்திகேயன்

இருளில் பிரசாரம்!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் உதயகுமாரை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்தார் நடிகை சி.ஆர்.சரஸ்வதி. காமராஜர் சாலை அருகே பேசிவிட்டு அடுத்த இடத்துக்குச் செல்வதற்குள் மின்தடை ஏற்பட்டு, அந்தப் பகுதி இருளில் மூழ்கியது. திறந்த வேனில் அரைகுறை வெளிச்சத்தில் பிரசாரம் செய்த சி.ஆர்.சரஸ்வதியைப் பார்த்து, ''உங்க ஆட்சியோட லட்சணத்தை நீங்களே பாருங்க... மொதல்ல உருப்படியா கரன்ட் கொடுக்கப் பாருங்க... அப்புறமா ஓட்டுக் கேட்டு வரலாம்'' என அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்புக் குரல் கொடுக்கவும், வேனை விட்டு இறங்கிய சி.ஆர்.சரஸ்வதி, வேறொரு காரில் ஏறி தப்பித்தோம் பிழைத்தோம் என இடத்தை காலிசெய்தார்.

- ஆர்.குமரேசன்

கிடைக்கிற ஓட்டும் கிடைக்காது!

வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினியுடன் வாக்கு சேகரிக்கச் செல்ல அ.தி.மு.க. வேட்பாளர் செங்குட்டுவன் மறுத்துவிட்டாராம். ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் மேயர் கார்த்தியாயினி. இந்நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கியப் பகுதிகளுக்கு வேட்பாளர் செங்குட்டுவன், கார்த்தியாயினியுடன் சென்றுள்ளார். பிரசாரத்துக்குச் சென்ற அனைத்து இடங்களிலும் மக்கள் காலி குடங்களோடு மேயரை முற்றுகையிட்டு களேபரம் செய்துவிட்டனர். இதனால் கடுப்பான செங்குட்டுவன், ''இந்தம்மாவைக் கூட்டிட்டுப் போனா கிடைக்குற ஓட்டும் விழாதுபோல'' என்று தன் நெருக்கமானவர்களிடம் புலம்பியிருக்கிறார். அதோடு, பிரசாரத்தில் இருந்தும் மேயரை கழற்றிவிட்டுள்ளார்.

- அறவாழி

'என்னப்பா... இவ்வளவு செலவாகுது?’

விருதுநகர் தி.மு.க. வேட்பாளர், தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ரத்தினவேல். அரசியல் மற்றும் தேர்தல் களத்துக்கு புதுமுகமான இவர், முதல்கட்டமாக தொகுதியில் இருக்கும் வி.ஐ.பி-க்களை மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்று சந்தித்து வருகிறார். இவரது தேர்தல் செலவு விவரங்களை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த ஐவர் குழு கண்காணித்து வருகிறதாம். தேர்தல் பிரசாரம் தொடங்குவதற்குள்ளாக சில லகரங்கள் காலியாகிப்போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டாராம் ரத்தினவேல். 'என்னப்பா... ஒருநாளைக்கு இவ்வளவு செலவாகுது?’ என்று கவலைப்பட்டாராம். இதை அறிந்த தி.மு.க-வினர் 'நம்ம வேட்பாளர் இன்னும் வர்த்தகராகவே இருக்கிறாரே... அரசியல்வாதி என்றால் தேர்தல் செலவைப் பற்றி கவலைப்படலாமா?’ என்று கமென்ட் அடிக்கின்றனர்.

- கார்த்தி

இது கோவை கலாட்டா!

தி.மு.க. வேட்பாளர் கணேஷ்குமாருக்கும், அ.தி.மு.க. வேட்பாளர் நாகராஜனுக்கும் அந்தந்த கட்சிக்காரர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. இந்த நிலையில் கோவையில் அறிவிக்கப்பட்ட பி.ஜே.பி. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை மாற்ற வேண்டும் என கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருப்பதாக சொல்லிக்கொண்டு அமர்ந்திருந்தனர். இந்தக் களேபரங்களால் 'கோவை நிச்சயம் எங்களுக்குத்தான்!’ என்று மார்தட்டுகின்றனர் காங்கிரஸார். # யப்பா... இந்த கம்யூனிஸ்ட் பக்கம் இருந்து சத்தத்தையே காணோம்!

- தி.விஜய்

இது புது அரசியல்!

தி.மு.க. வேட்பாளர் ஜெகனை ஆதரித்து தூத்துக்குடி மேடையில் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அங்கு எம்.பி-யான ஜெயதுரை வரவில்லை. இருந்தும் அதை யாரும் கண்டுகொள்ளவில்லையாம். பிரசாரம் சம்பந்தமாக செய்தி வெளியாகும் முன்பாக எம்.பி-யின் ஆதரவாளர்கள் பத்திரிகையாளர்களை தொடர்புகொண்டு, 'எம்.பி. கலந்து கொள்ளவில்லை... புறக்கணித்தார் என செய்தி வெளியிடுங்க’ என பேசினார்களாம். சிலரிடம் ஜெயதுரையே பேசினாராம். # எப்படியெல்லாம் விளம்பரம் தேவைப்படுது பாருங்க!

- சரவணப்பெருமாள்

விழுப்புரத்தில் வருங்கால பிரதமர்கள்!

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கான தி.மு.க. வேட்பாளர் டாக்டர் முத்தையனை அறிமுகப்படுத்தும் கூட்டம் வானூரில் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய பொன்முடியின் பேச்சில் காமெடி தெறித்தது. ''இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் வருங்கால பிரதமர் மைதிலி அவர்களே... வருங்கால பிரதமர் முத்தையன் அவர்களே... வருங்கால பிரதமர் புஷ்பராஜ் அவர்களே... என் எதிரே அமர்ந்திருக்கும் வருங்காலப் பிரதமர்களே...'' என அனைவருக்கும் 'வருங்காலப் பிரதமர்’ பட்டம் சூட்டி பேச ஆரம்பித்தார். 'என்ன இந்த திடீர் பட்டம்?’ என்று அனைவரும் விழித்துக்கொண்டிருக்கும்போது, அவரே தொடர்ந்தார். ''தமிழ்நாட்டில் ஆள் ஆளுக்கு வருங்காலப் பிரதமர் என்று கூறிக்கொள்கிறார்கள். அரசியல் விபத்துகளால் ஆட்சியில் அமர்ந்துவிட்ட ஜெயலலிதாவின் ஆசைக்கு அளவே இல்லை. யார் யாருக்கோ பிரதமராகும் ஆசை இருக்கும்போது உங்களுக்கு இருக்காதா? முனைவர் பட்டம் முடித்தவன் நான். எனக்கும் பிரதமராகும் ஆசை வராதா?'' என்று கூறி கூட்டத்தைக் கலகலப்பு ஆக்கினார்.

- நந்தகுமார்

பாட்டு வாத்தியார் பரிதி!

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, அ.தி.மு.க-வுக்காக அனைத்து தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்துவருகிறார். திறமையான மேடைப் பேச்சாளர் என்று அனைவராலும் அறியப்பட்ட பரிதி, நாகர்கோவிலில் பங்கேற்ற பிரசாரத்தில் பாடல்களையே பிரசார விருந்தாகப் படைத்தார். அதிலும் அருணகிரிநாதரின், 'முத்தைத் தரு பக்தி திருநகை’ என்ற பாடலையும், 'இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்க’ என்ற அ.தி.மு.க. பிரசாரப் பாடலையும் மூச்சிறைக்கப் பாடினார். அதைக் கேட்ட கட்சித் தொண்டர்கள் மத்தியில், 'இவர் பரிதி இளம்வழுதியா இல்லை, பாட்டு வாத்தியாரா?’ என்று சந்தேகமே வந்துவிட்டது. இத்தனைக் களேபரங்களுக்கு மத்தியில் குடிமகன் ஒருவர் கூட்டத்துக்கு இடையில் ஹாயாக தூங்கிக்கொண்டிருந்ததுதான் வேடிக்கை. 'சின்னத்தம்பி மாதிரி பாட்டுப் பாடி தூங்க வைக்கிறார் பரிதி'' என்று ஒருவர் அடித்தார் கமென்ட்!

- காளிராஜ்

மலை மேல் விருந்து!

குமரி அ.தி.மு.க. வேட்பாளர் ஜாண்தங்கம் பேச்சிப்பாறை மலைப்பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்றிருந்தார். அவருடன் சென்ற அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அங்குள்ள கட்சிப் பிரமுகர் இல்லத்தில் வைத்து கறிவிருந்து படைத்துள்ளனர். இந்தத் தகவல் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளுக்குப் போய்ச்சேர, சற்று நேரத்தில் விருந்து நடக்கும் இடத்துக்கு வந்தனர். கறி விருந்தை அவர்கள் வீடியோவில் பதிவுசெய்ய... 'விசேஷத்தில் வீடியோ எடுப்பதுபோல் இங்கும் எடுக்குறாங்க போலிருக்கு’ என்று கறியைக் கடிப்பதிலேயே கவனமாக இருந்தனர் தொண்டர்கள். வீடியோவைப் பார்த்ததும் சிலர் கடமுடா என்றும் கடித்துக் காட்டினர். ஆனால், இது அதிக சிக்கலை ஏற்படுத்திவிட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்துவிட்டது தேர்தல் கமிஷன். வேட்பாளர் ஜாண்தங்கமோ, 'மலைப்பகுதியில மதிய உணவுக்கு ஹோட்டல்கள் இல்லை. அதான் கட்சிக்காரங்களுக்கு மட்டும் இங்கே சாப்பாடு போட்டோம். வாக்காளர்களுக்கு லஞ்சம் தரலை’ என்று கவலையோடு சொல்கிறாராம். சாப்பிட்டவர்கள் ஏப்பம் விட்டபடி போய்விட்டார்கள்!

- காளிராஜ்

கண்டுகொள்ளப்படாத வேலூர்!

பி.ஜே.பி. கூட்டணியில் நீண்ட இழுபறிக்குக் காரணமே... ஒரே தொகுதியை கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளும் கேட்டு அடம் பிடித்ததுதான். ஆனால், ஒரு தொகுதியை மட்டும் கூட்டணியைச் சேர்ந்த எந்தக் கட்சியும் கேட்கவில்லையாம். அது, வேலூர் தொகுதிதான். # வேலூரைக் கண்டு வெறுப்பு ஏன்?

- முகின்

இருவர் மட்டும் போதும்!

ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரைக் கொண்ட நால்வர் அணி, ஜெயலலிதா பிரசாரம் செல்லும் இடங்களில் எல்லாம் தவறாமல் ஆஜராகிவிடுவதால், மற்ற இடங்களில் பிரசார பணிகளை முடுக்கிவிடுவது பாதிக்கப்படுகிறதாம். அதனால், 'இனி யாரேனும் இருவர் மட்டும் என் மீட்டிங்குக்கு வந்தால் போதும்; மற்ற இருவர் வேறு இடங்களுக்குச் சென்று தேர்தல் பணிகளை கவனியுங்கள்’ என்று ஜெயலலிதா உத்தரவிட்டுவிட்டாராம்.

- சு.குமரேசன்

சௌராஷ்டிரா மக்கள் வாக்குகளை வளைக்க...

மதுரையிலும் திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதியைச் சுற்றியும் குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சௌராஷ்டிர இன மக்கள்

இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக வசிக்கின்றனர். மதுரை, விருதுநகர் தொகுதிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் இந்த சௌராஷ்டிர இன மக்களின் பங்கு கணிசமானது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது இந்த மக்களுக்கு அதிக பாசம் உண்டு. விருதுநகர் லோக்சபா தொகுதிக்குள் திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டசபை தொகுதிகள் வருகிறது. எனவே விருதுநகர் வேட்பாளரான ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விருதுநகர் அல்லது திருமங்கலத்தில் மோடியை அழைத்துவந்து பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருக்கிறார். இதன் மூலம் சௌராஷ்டிரா மக்களின் வாக்குகளை அப்படியே வாங்கிவிடலாம் என்பது திட்டம்.

- கார்த்தி

பொய் சொன்னாரா திருப்பூர் வேட்பாளர்?

திருப்பூர் அ.தி.மு.க. வேட்பாளர் சத்யபாமா, பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடையாமலே, தான் எம்.ஏ. படித்து இருப்பதாக பொய் சொல்லி தலைமையிடம் சீட் வாங்கிவிட்டார் என்று பெட்டிஷன்களைத் தட்டிவிட்டபடி இருக்கிறார்கள் சிலர். இதுபற்றி சத்யபாமாவிடம் கேட்டால், ''இது மட்டும் இல்ல சார். இன்னும் என்னென்னமோ என்னைப்பத்தி இன்டர்நெட்ல எழுதி இருக்காங்க. உங்ககிட்டக்கூட நான் பொய் சொல்லலாம். அம்மாகிட்ட சொல்ல முடியுமா? நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்துல தபால் மூலமா டிகிரி படிச்சேன். சான்றிதழ்கூட இருக்கு. அதைக்கூட நான் போலியா வாங்கினதா சொல்றாங்க. இதையெல்லாம் விசாரிக்காம அம்மா இருப்பாங்களா சார். தேர்தல் முடிஞ்சதும் இதையெல்லாம் அம்மாகிட்ட சொல்வேன்'' என்று புலம்பித்தள்ளினார். # கூல் மேடம்!