'பட்ட காலிலேயே படும்!’ என்ற பழமொழி இப்போதைய தேதியில் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ... துரைமுருகனுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. மகன் கதிர் ஆனந்துக்கு சீட்

மறுக்கப்பட்டது முதல் அவரது ஆதரவாளர்கள் 11 பேர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது வரை... தொடர் சறுக்கல்களைச் சந்தித்துவருகிறார் துரைமுருகன்!

தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டு, அங்கு அப்துல் ரஹ்மான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில்தான் அனைத்துப் பிரச்னைகளும் ஆரம்பித்தன. துரைமுருகனின் கோட்டையாகக் கருதப்படும் வேலூர் மாவட்டத்தை தனக்குப் பிறகு தனது மகன் கதிர் ஆனந்துக்கு தாரைவார்க்கும் முயற்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கதிர் ஆனந்தை நிறுத்தி தன்

செல்வாக்கைச் சரியாமல் காத்துக்கொள்ள நினைத்தார் துரைமுருகன். ஆனால், நடந்ததோ வேறு!

'வேலூர் தொகுதி கதிர் ஆனந்துக்குக் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே தலைமைக் கழகத்தில் உள்ள சிலர் தலைவருக்கு நெருக்கடி கொடுத்து வலுக்கட்டாயமாக இந்தத் தொகுதியை முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கினர்’ என்று தொகுதி ஒதுக்கீட்டின்போது லேசாக கிசுகிசுக்கப்பட்டது. வேலூர் கையைவிட்டுச் சென்றாலும், மனம் தளராத துரைமுருகன் அரக்கோணம் தொகுதி தன் மகனுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று உறுதியாக நம்பினார். இறுதியில் அதுவும் கிடைக்காமல் போனது. இது, துரைமுருகனைவிட அவருடைய ஆதரவாளர்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதனை அவர்கள் வெளிப்படையாகவே காட்டினர். வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் காந்தி மற்றும் நிர்வாகிகளோடு சென்ற வேட்பாளர் அப்துல் ரஹ்மானின் கார் மீது கல்வீசி தாக்கப்பட்டது. மேலும், குடியாத்தம் கூட்டத்திலும் பிரச்னை வெடித்தது. தொடர் சம்பவங்களால் முஸ்லிம் லீக் கடும் அதிருப்திக்கு ஆளானது. இந்த விவகாரம் புகார் கடிதங்களாக தி.மு.க. தலைமையின் கதவுகளைத் தட்ட, துரைமுருகனின் தீவிர ஆதரவாளர்களாகக் கருதப்படும் தயாளமூர்த்தி உட்பட 11 பேரை உடனடியாக இடைநீக்கம் செய்து, அதிருப்தியில் இருந்த முஸ்லிம் லீக்கை சமாதானம் செய்தது தி.மு.க.

இதுகுறித்து வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்தியிடம் பேசினோம். ''வேலூர் தி.மு.க-வுல எந்த கோஷ்டிப்பூசலும் கிடையாது. எல்லாரும் ஒண்ணாதான் இருக்கோம். பிரசாரத்துக்குச் சென்ற அப்துல் ரஹ்மான் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மைதான். ஏதோ ஆதங்கத்துல நடத்தப்பட்டதே தவிர, கோபத்துல கிடையாது. அவங்க எல்லாரும் தற்காலிக இடைநீக்கம்தான் செய்யப்பட்டிருக்காங்க. முழுமையா நீக்கப்படலை. துரைமுருகனோட பையன் கதிர் ஆனந்துக்கு சீட் கிடைக்கலைன்னு சிலருக்கு வருத்தம் இருந்தாலும், கட்சித் தலைமை முடிவுக்குக் கட்டுப்பட்டு நடக்குறதுதான் நாகரிகமா இருக்கும். நாங்க கண்டிப்பா தலைமைக்குக் கட்டுப்படுவோம். ஆரம்பத்துல கட்சிக்குள்ள சில சலசலப்புகள் இருந்தாலும், இப்ப அதையெல்லாம் மறந்துட்டு தாயா புள்ளையா வேலை செய்யுறோம்'' என்று மையமாகச் சொன்னார்.

வேட்பாளர் அப்துல் ரஹ்மானிடம் கேட்டோம். ''எனக்கு துரைமுருகனைப் பத்தி நல்லாவே தெரியும். அவருக்கு ஒரு விஷயம் பிடிக்கலைன்னா, முகத்துக்கு நேரா சொல்லிடுவார். கைதேர்ந்த மூத்த அரசியல் தலைவரான அவர், இப்படி கீழ்த்தரமான செயல்கள்ல ஈடுபட மாட்டார். அவர் எனக்கு எதிரா உள்ளடி வேலைகள்ல ஈடுபடுவார் என்பதெல்லாம் விஷமிகள் சொல்றதுதான். துரைமுருகன் எனக்கு நல்ல நண்பர். ஒரு கூட்டத்துல என்னை அவருடைய தம்பின்னு குறிப்பிட்டிருக்கார். வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்குப் போனப்ப கார் உடைக்கப்பட்டது உண்மைதான். நான் அதைப் பெரிதுப்படுத்த விரும்பலை. உண்மையைச் சொல்லணும்னா நாங்க வேலூர் தொகுதியைக் கேட்கவே இல்ல. தி.மு.க-கிட்ட கேட்ட தொகுதிகள் வேற. கிடைச்சது வேற'' என்று, தங்களுக்கு வலுக்கட்டயமாக வேலூர் ஒதுக்கப்பட்டது என்பதுபோலச் சொன்னார்.

துரைமுருகனைத் தொடர்புகொண்டு பேசினோம். ''எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. நாங்கள் நண்பர்கள்தான்'' என்று சுருக்கமாகப் பேசி லைனைத் துண்டித்தார். இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு கதிர் ஆனந்த் கட்சியின் முக்கிய கூட்டங்களில் சில நேரங்களில் தலையைக் காட்டிவிட்டு, மற்ற நேரங்களில் கல்லூரி நிர்வாகத்தைக் கவனித்துவருகிறாராம்.

''கட்சியில எப்போ ஸ்டாலினோட கை ஓங்குச்சோ, அப்பவே அண்ணனோட செல்வாக்கு சரிய ஆரம்பிச்சுடுச்சு. முஸ்லிம் லீக் வேலூரைத் தவிர்த்து திருநெல்வேலி மற்றும் இன்னும் ஐந்து தொகுதிகளில ஏதேனும் ஒரு தொகுதியைக் கேட்டாங்க. அங்கெல்லாம் ஸ்டாலின் ஆதரவாளர்கள் போட்டியிடுறதால, பக்காவா திட்டம் போட்டு கதிர் ஆனந்த் தொகுதியை முஸ்லிம் லீக்குக்குக் கொடுத்து அண்ணனைப் பழிவாங்கிட்டாங்க. இது அப்பட்டமான துரோகம். ஒண்ணும் இல்லாத சின்ன பிரச்னைக்கு 11 பேரை இடைநீக்கம் செஞ்சதும் ஸ்டாலினோட வேலைதான். கண்டிப்பா காலம் மாறும்'' என்று ஆவேசப்பட்டனர் துரைமுருகனின் ஆதரவாளர்கள்.

''துரைமுருகன் - அழகிரி சந்திப்பு விரைவில் நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை'' என்று வேலூர்காரர் ஒருவர் வெப்பத்தைக் கூட்டுகிறார்!

- நா.இள.அறவாழி

படங்கள்: ச.வெங்கடேசன்