விஜயகாந்த் அறிவித்துள்ள 14 வேட்பாளர்களில் பலர் அவருடைய ரசிகர் மன்றக் காலங்களில் இருந்து

அவருடன் வலம் வந்தவர்கள். அதனால் வேகமும் விசுவாசமும் அதிகம். இது பலம். அதே நேரத்தில் பலருக்கு வழங்கப்பட்டுள்ள தொகுதிகள் அவர்களுக்கு அறிமுகம் இல்லாதவை. பா.ம.க. கடைசிவரை மல்லுகட்டிய தொகுதிகளில் இரண்டு தே.மு.தி.க-வினரின் வசம். இது பலவீனம்.

நெல்லை: சிவனணைந்த பெருமாள்

தொகுதி மக்களுக்கு மட்டும் அல்லாமல் கட்சியினருக்கும் அறிமுகம் இல்லாதவர். சொந்த ஊர் இந்தத் தொகுதிக்குள் இருந்தபோதிலும், மும்பை தாராவி பகுதியில் செட்டில் ஆனவர். மராட்டிய மாநில தே.மு.தி.க. செயலாளர். விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் இருந்து கட்சிக்கு வந்தவர். மும்பையில் பிரின்டிங் மற்றும் கட்டுமான தொழில் செய்துவருகிறார். தாராளமாகப் பணம் செலவுசெய்யும் தகுதி இருப்பதால் மட்டுமே வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றவர். அதனால் கட்சி நிர்வாகிகள் இவரை சந்திக்கவோ, வாழ்த்து சொல்லவோ மறுத்துவிட்டனர். கட்சிக்குள் நிலவும் இந்த எதிர்ப்பு அலையைச் சமாளிக்கக் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

திண்டுக்கல்: ஏ.கிருஷ்ணமூர்த்தி

கிருஷ்ணமூர்த்தியின் சொந்த ஊர், விருதுநகர் மாவட்டம் வெல்லூர் அருகேயுள்ள முத்துகுமாரபுரம். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். தே.மு.தி.க. தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து கட்சியில் இருக்கும் ஒரே காரணம் மட்டுமே இவரை வேட்பாளராக்கி இருக்கிறது. இவரது சகோதரர் சுப்புராஜுக்கு 2006 சட்டமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த விஜயகாந்த், இந்த முறை இவரை வேட்பாளராக அறிவித்திருக்கிறார். கட்சிக்குள் நிலவும் எதிர்ப்பு, வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது இவருக்கான மைனஸ்.

கரூர்: என்.எஸ்.கிருஷ்ணன்

தே.மு.தி.க-வின் மாவட்டச் செயலாளரான இவர், கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க-வில் இருந்தவர். விஜயகாந்த் கட்சி தொடங்கிய சமயத்தில் அ.தி.மு.க-வில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் தே.மு.தி.க-வில் ஐக்கியமானார். அதே வேகத்தில் அவருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. கட்சியின் நிர்வாகிகளைத் தாண்டி தொகுதி மக்களிடம் அவ்வளவாக அறிமுகம் இல்லாமல் இருப்பது பெரிய மைனஸ்.

மதுரை: சிவமுத்துக்குமார்

தே.மு.தி.க-வின் மாநகரச் செயலாளராக இருக்கும் சிவமுத்துக்குமாருக்கு பூர்வீகம் உசிலம்பட்டி பக்கம் என்றாலும், இப்போது மதுரைவாசி ஆகி விட்டார். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். தொகுதியில் கணிசமாக இருக்கும் தன்னுடைய பிரமலைக்கள்ளர் வாக்குகளும் மோடியை விரும்பும் சௌராஷ்டிர இன மக்களின் வாக்குகளும் தனக்குக் கிடைக்கும் என்பது இவரது நம்பிக்கை. பி.ஜே.பி. எதிர்பார்த்த தொகுதி என்பதால், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு இவருக்கு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்!

திருச்சி: ஏ.எம்.ஜி.விஜயகுமார்

ரசிகர் மன்ற காலத்தில் இருந்தே விஜயகாந்த்துடன் தொடர்பில் இருப்பவர் விஜயகுமார். அத்துடன் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ§டன் நெருக்கம் அதிகம். இருவரும் ஆரம்ப காலத்தில் பிசினஸ் பார்ட்னர்களாக இருந்தவர்களாம். கூட்டணி பலம் மட்டுமே இவருக்கான ப்ளஸ். தொகுதி முழுவதும் அறியப்படாதவர் என்பது பலவீனம்.

கடலூர்: ஜெய்சங்கர்

கடலூர் வேட்பாளராக அறிவித்திருந்த ராமானுஜத்தை மாற்றிவிட்டு ஜெய்சங்கர் என்பவரை களமிறக்கியிருக்கிறார் விஜயகாந்த். இவர், நெய்வேலியில் ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர். கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத விஜயகாந்த் விசுவாசி. கட்சிக்காரர்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பது இவரது கூடுதல் தகுதி.

விழுப்புரம்: உமாசங்கர்

வழக்கறிஞரான இவர், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். 2005 முதல் தே.மு.தி.க. உறுப்பினர். இப்போது கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராக இருக்கிறார். இவரைவிட சீனியரான ராஜா சந்திரசேகருக்கு தான் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், மாவட்டச் செயலாளர் எல்.வெங்கடேசனின் பரிந்துரையில் இவருக்கு சீட் கிடைத்துள்ளது. உமாசங்கருக்கு கட்சிப் பதவி அளித்தது போதாது என்று, இப்போது எம்.பி. சீட்டையும் வாங்கிக் கொடுத்துள்ளார் என்று புலம்புகின்றனர் சீனியர்கள். கட்சிக்குள் நிலவும் அதிருப்தி, தொகுதிவாசிகளிடம் அறிமுகம் இல்லாத நிலைமை ஆகியவை இவருக்கு மைனஸ்.

திருப்பூர்: என்.தினேஷ்குமார்

தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்ட கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் திருப்பூர் மாநகராட்சி மேயருக்கான தேர்தலிலும் தினேஷ்குமாரைத்தான் வேட்பாளராக அறிவித்தார், விஜயகாந்த். கட்சியில் செல்வாக்கு பெற்ற நபர். வெளிநாட்டில் படித்த இளைஞர். பெரும்பான்மையாக உள்ள கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியைச் சேர்ந்தவர் என்பது ப்ளஸ். திருப்பூருக்கு மட்டுமே அறிமுகமானவர், கூட்டணி கட்சிகளுக்குள் நிலவும் குழப்பம் போன்றவை இவருக்கு மைனஸ்.

வட சென்னை: சௌந்தரபாண்டியன்

தொழிற்சங்கப் பிரதிநிதியாக இருந்து கடுமையான உழைப்பினால் இப்போது தொழிற்சங்க மாநிலச் செயலாளர் பொறுப்புக்கு வந்திருக்கிறார். விஜயகாந்த்துடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர். வட சென்னை மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். ஏற்கெனவே ஸ்ரீவைகுண்டம் இடைத்தேர்தலில் போட்டியிட்டவர். கூட்டணி கட்சிகளுக்குப் பெரிய அளவு செல்வாக்கு இந்தத் தொகுதியில் இல்லாதது, சௌந்தரபாண்டியனுக்கு மைனஸ்.

சேலம்: சுதீஷ்

கடைசி வரை இழுபறியாக இருந்த தொகுதி. ஒருவழியாக தே.மு.தி.க-வுக்கு சேலம் ஒதுக்கப்பட்டதும் தனது மைத்துனரான சுதீஷை களம் இறக்கி இருக்கிறார் விஜயகாந்த். தே.மு.தி.க-வின்ஸ்டார் வேட்பாளர். விஜயகாந்த், பிரேமலதா ஆகிய இருவரும் இந்தத் தொகுதியில் தீவிரமாக வாக்கு வேட்டையில் ஈடுபடுவது கூடுதல் பலமாக இருக்கும். இங்கே சிக்கலாக இருக்கும் பா.ம.க-வினரை சமாதானப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர் தே.மு.தி.க-வினர்.

திருவள்ளூர்: யுவராஜ்

வட சென்னை மாவட்டச் செயலாளராக இருப்பவர் யுவராஜ். எம்.கே.பி. நகரில் பெட்ரோல் பங்க் நடத்திவரும் இவர் படித்தது 10-ம் வகுப்பு வரை மட்டும்தான்! தே.மு.தி.க. தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருப்பவர். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர் என்பதால், தொகுதிக்குள் நல்ல அறிமுகம் உண்டு என்பது இவரது ப்ளஸ். தலித் மக்கள் வாக்குகள் இந்தத் தொகுதியில் அதிகம் இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளரும் இங்கே களமிறங்குவது யுவராஜுக்கு மைனஸ்.

நாமக்கல்: வேல்

இந்தத் தொகுதிக்கு நன்கு அறிமுகமானவரான வழக்கறிஞர் வேல், வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருப்பதால் கட்சியினர் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். நகரம் முழுவதும் நல்ல அறிமுகம் இருக்கிறது. கூட்டணிக் கட்சியான கொ.மு.க. மூலமாக கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்பது கூடுதல் பலம். தி.மு.க-வில் இருந்து தே.மு.தி.க. முகாமுக்கு வந்தவர் என்பதால், கட்சியின் ஒரு பிரிவினர் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி: ஈஸ்வரன்

எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய சமயத்தில், அ.தி.மு.க-வில் மருத்துவ அணியைத் தொடங்கியவர் டாக்டர் ஈஸ்வரன். நீண்டகாலமாக அ.தி.மு.க-வில் இருந்தவர் சில வருடங்களுக்கு முன்பு தே.மு.தி.க-வில் இணைந்தார். அவருக்கு மாநில மருத்துவர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இப்போது சீட் வழங்கப்பட்டுள்ளது. கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் பழகக்கூடியவர். கட்சிக்காரர்கள் யார் வந்தாலும் காசு வாங்காமல் வைத்தியம் பார்க்கும் டாக்டர் என்பதெல்லாம் ஈஸ்வரனுக்கு ப்ளஸ். ஈஸ்வரனுக்கும் ஒரே பிரச்னை, பா.ம.க-வினர் எதிர்ப்பை சமாளிப்பதுதான்!

மத்திய சென்னை: ரவீந்திரன்

காங்கிரஸ் கட்சியில் இருந்து தே.மு.தி.க-வுக்கு வந்தவர் இவர். பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அணியின் மாநிலச் செயலாளராக இருக்கிறார். கட்சியில் எந்த நிகழ்ச்சி என்றாலும் முதல் வரிசையில் ரவீந்திரன் இருப்பார். சுதீஷ§க்கு நெருக்கமான நண்பர்களில் இவரும் ஒருவர். 'கட்சிக்காரர்களிடம் நிறையவே கோபப்படுறாரு. பணத்தை செலவு செய்யுறதுல ரொம்பவே கறார் காட்டுறாரு’ என்று கட்சிக்காரர்களே புலம்புகிறார்கள். அதே நேரத்தில் மத்திய சென்னை மக்களுக்கு இவர் அறிமுகம் இல்லாத புதுமுகம்.

- ஜூ.வி. டீம்