மு.க.அழகிரி தமிழகத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த காலங்களில் அவருடைய உண்மையான அதிகார பூமியாக இருந்தது மதுரை. அங்கு அழகிரியின் பேரும் புகழும்(!) சரசரவென பரவியதற்கு முக்கியக் காரணம் அவருடைய கரசேவகர்களாக இருந்த பொட்டு சுரேஷ், பி.எம்.மன்னன், எஸ்ஸார் கோபி, அட்டாக் பாண்டி ஆகியோரும் இவர்களின் அடிப்பொடி வகையறாக்களும்தான்.

தமிழகத்தில் நடந்த ஆட்சி மாற்றம், பொட்டு சுரேஷ் படுகொலை, இடையில் பறிபோன மத்திய மந்திரி பதவி, கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டது... என அழகிரியின் அரசியல் தொடர்ந்து பரபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில், அழகிரிக்குத் தோளோடு தோள் நின்றவர்களும் ஒவ்வொருவராகத் தங்களின் ஜாகையை மு.க.ஸ்டாலின் பக்கம் திருப்புகின்றனர். முக்கியமாக, எஸ்ஸார் கோபி, இந்த வாரத்தில் மு.க.ஸ்டாலினைச் சந்தித்திருப்பது மதுரை வட்டாரத்தின் முக்கியத் திருப்பம். அவரை நாம் சந்தித்தோம்.

''மு.க.அழகிரியின் ஆதரவாளராகச் செயல்பட்ட நீங்கள், இப்போது மு.க.ஸ்டாலின் ஆதரவாளராக மாறி உள்ளீர்களே?''

''நாங்கள் எப்போதும் தி.மு.க-வின் ஆதரவாளர்கள். கட்சியை யார் வழிநடத்துகிறார்களோ, அவர்கள் சொல்கிறபடி பணியாற்றுவோம். இன்று நேற்றல்ல... எங்கள் தாத்தா காலத்தில் இருந்து நாங்கள் தி.மு.க-காரர்கள். மதுரையில் இருந்து கட்சி வேலைகள் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது மு.க.அழகிரி கட்சி வேலைகளில் ஆர்வமாக ஈடுபட்டதாலும் தலைவர் கலைஞர் அவரை தென் மண்டல அமைப்புச் செயலாளராக நியமித்திருந்ததாலும், அவர் சொல்படி கட்சி வேலைகள் செய்துவந்தோம். இப்போது அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அதனால், நாங்கள் அவர் சொல்கிறபடி இனி நடக்கவும் முடியாது. அவருக்கு ஆதரவாகச் செயல்படவும் முடியாது. அதனால் தளபதியைச் சந்தித்தோம்.''

''மு.க.அழகிரியின் தயவில் பல சலுகைகளை அனுபவித்த குடும்பம் உங்களுடையது. அவருக்குப் பதவி போனதும் ஆதரவை விலக்கிக்கொண்டது சுயநலம் அல்லவா?''

''அவர் சொல்கிற வேலைகளைச் செய்து, வெறும் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்த குடும்பம் எங்களுடையது. ஆட்சி மாற்றம் வந்தவுடன், வீட்டுத் தோட்டத்தில் பயங்கர ஆயுதங்களை நான் மறைத்து வைத்திருந்ததாகச் சொல்லி வழக்குப் போட்டார்கள். தோட்ட வேலைகளுக்காக வைத்திருந்த மண்வெட்டி, கடப்பாறை... பன்றிகளை விரட்டுவதற்காக வைத்திருந்த ஏர் கன் துப்பாக்கியை எடுத்துவிட்டு, மிகப் பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் என்று போலீஸ்காரர்கள் செய்தி பரப்பினர். இதற்காகப் போடப்பட்ட வழக்குகள், பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட நில அபகரிப்பு வழக்கு, கொலை முயற்சி வழக்குகள் என 22 வழக்குகள் எங்கள் மீது போடப்பட்டன. மு.க.அழகிரியின் ஆதரவாளர் என்ற முத்திரை எங்கள் மீது இருந்ததால்தான் நாங்கள் அந்த கஷ்டத்துக்கு ஆளானோம். அந்த வழக்குகளில் கைதாகி, எங்கள் குடும்பத்தினர் ஆளுக்கொரு சிறையில் இருந்தோம். ஆனால்,

எங்களை ஒருமுறைகூட அழகிரி வந்து பார்க்கவில்லை. விசாரிக்கவும் இல்லை.

எங்கிருந்தோ பிழைக்க வந்த பொட்டு சுரேஷ், மாவட்டச் செயலாளர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு சம்பாதித்தார். பி.எம்.மன்னன் துணை மேயர் பதவி, பணம் என வாழ்ந்தார். ஆனால், அழகிரிக்குத் தோளோடு தோள் நின்ற எங்களின் குடும்பம் இப்படி எதையாவது அனுபவித்தோமா? பட்ட கஷ்டம் எல்லாம் போதும்.''

''லீலாவதி கொலை வழக்கில் ஏழு ஆண்டுகளில் விடுதலையானது, தா.கிருட்டிணன் கொலை வழக்கில் விடுதலையானது போன்ற சலுகைகள் எல்லாம் அழகிரியுடன் இருந்ததால்தானே வாய்த்தது?''

''தா.கிருட்டிணன் கொலை வழக்கில் நீதிமன்றமே நாங்கள் குற்றவாளிகள் இல்லை என்று விடுதலை செய்தது. லீலாவதி கொலை வழக்குக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதைச் செய்தவர்கள் வேறு சிலர். அவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், நாங்கள் செய்யாத குற்றத்துக்காக லீலாவதி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்தோம். அப்போது அண்ணா பிறந்தநாளில் கொடுக்கப்படும் சலுகை விடுதலையில் நாங்கள் வெளியில் வந்தது உண்மை. அதற்கு நாங்கள் திண்டுக்கல் ஐ.பெரியசாமிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் அப்போது சட்ட அமைச்சராக இருந்தவர். அது அழகிரியால் பெற்ற விடுதலை அல்ல... ஐ.பி-யால் பெற்ற விடுதலை!''

''அழகிரி பிரச்னை தொடங்கி பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் நீங்கள் இப்போதுதானே ஸ்டாலினைச் சந்தித்துள்ளீர்கள்?''

''தலைவர் கலைஞருடன் தகராறு செய்தது, தளபதியை அவதூறாகப் பேசியது போன்ற காரியங்களில் அழகிரி ஈடுபட்டபோது, அதை நாங்கள் குடும்பப் பிரச்னையாகப் பார்த்தோம். அண்ணன் தம்பிகளுக்குள் சண்டைபோடுவார்கள்... பிறகு சமாதானமாகிவிடுவார்கள் என்று அமைதியாக இருந்தோம். ஆனால், அதன் பிறகு 'தி.மு.க. வேட்பாளர்களைத் தோற்கடிப்பேன்’ என்று சொன்னது, மாற்றுக் கட்சி வேட்பாளர்களை - குறிப்பாக துரோகி வைகோவை - சந்தித்துப் பேசியதை தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்த எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதன் பிறகுதான், தளபதியை வந்து சந்தித்தோம்''

''மதுரையில் இன்னும் அழகிரிக்குச் செல்வாக்கு இருக்கிறது. நீங்கள் அங்கு அவரை எதிர்த்து அரசியல் செய்ய முடியுமா?''

''நாங்கள் அவருடன் இருந்தவரைதான் அவருக்குச் செல்வாக்கு. இப்போது நாங்கள் தலைமையின் முடிவுக்குத்தான் கட்டுப்படுவோம்!''

- ஜோ.ஸ்டாலின்

படம்: வீ.நாகமணி