பின்வரிசைக்குப் போன எம்.ஜி.ஆர்!

நாகை அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கோபாலுக்கு வாக்கு சேகரிக்க குடவாசலில் நாஞ்சில் சம்பத் சிறப்புரை ஆற்றும் பொதுக்கூட்டத்தில்தான் இந்தக் காட்சி. நாஞ்சில் சம்பத் வரும்வரை கூட்டத்தினரைக் கலைந்துபோகாமல் கட்டிப்போட்ட, எம்.ஜி.ஆர். வேடமிட்ட நபருக்கு, மேடையில் முன்வரிசையில் இடம் ஒதுக்கி ஏக மரியாதை செலுத்தினர். கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் வந்த பிறகு, அந்த எம்.ஜி.ஆரை பின்வரிசைக்குத் தள்ளிவிட... அவரும் மூக்கில் விரலை வைத்தபடியே பரிதாபமாக அமர்ந்துவிட்டார். # நாஞ்சில்கூட எம்.ஜி.ஆரைக் கண்டுக்கலையே!

ஷூ ஆராய்ச்சி!

பி.ஜே.பி. அலுவலகத்தில் பிரஸ் மீட் நடத்திய வெங்கய்ய நாயுடு அணிந்திருந்த புது ஷூ அவரை பாடாய் படுத்திவிட்டது போலும். அதனைக் கழற்றி கையில் எடுத்து ஆராய்ந்துவிட்டு மீண்டும் அணிகிறார்.

# 'புதுச் செருப்பு கடிக்கும்!’

இது ஜெ. ஹெலி!

ஜெயலலிதா பிரசாரத்துக்குப் பயன்படுத்தும் ஹெலிகாப்டர் அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்பு. பெல் 412 என்பது அதன் மாடல் பெயர். இதில் 15 பேர் வரை பயணம் செய்யலாம். இது மணிக்கு 259 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடியது.

தெரியும்ல! தெரியுமா... தெரியாதா?

ஜெயலலிதாவின் 'செய்வீர்களா? செய்வீர்களா?’ பாணிக்குப் போட்டியாக, 'தெரியும்ல! தெரியுமா... தெரியாதா?’ பாணியைக் கையில் எடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின். விழுப்புரம் தி.மு.க. வேட்பாளர் முத்தையனை ஆதரித்து ஸ்டாலின் பேசும்போது, ''தேர்தலின்போது மட்டும் உங்களைத் தேடி வருபவர்கள் நாங்கள் அல்ல. தெரியும்ல! தெரியுமா... தெரியாதா? தேர்தலுக்காக மட்டுமே உங்களைத் தேடி வருபவர் ஜெயலலிதா. தெரியும்ல! தெரியுமா... தெரியாதா?'' என்று கேள்வி எழுப்ப... தெரியும்... தெரியும் என்று ஆர்ப்பரித்தது கூட்டம்.

- நந்தகுமார்

எல்லாரும் வாயில விரலை வையுங்க!

கேப்டனின் பிரசாரம் என்றாலே காமெடிதான்! தூத்துக்குடி ம.தி.மு.க. வேட்பாளர் ஜோயலை ஆதரித்துப் பிரசாரம் செய்த விஜயகாந்த், ''கொடிகளை எல்லாம் கீழே இறக்கிடுங்க... அப்புறம் இந்த கேப்டன் கோபப்படுறான்னு சொல்லாதீங்க மக்களே...'' என்று ஆரம்பித்தார். அப்போது சிலர் கொடியை ஆட்டியடியே சத்தம் போட்டதால் டென்ஷனாகி, ''நீங்க அமைதியானாதான் நான் ஆரம்பிப்பேன்'' என்று வேனுக்குள் உடகார்ந்துவிட்டார். ஜோயல் கூட்டத்தில் சைகை காட்டியதும், ஓரளவுக்கு அமைதி திரும்பியது. வெளியே வந்தார் கேப்டன். ''எல்லாரும் வாயில் விரலை வையுங்க மக்களே... அப்பதான் பேசுவேன்'' என்று சொன்னவர், ''நான் சுத்தி எல்லாரையும் கவர் பண்ணி பேசுறேன் பாருங்க...'' என்று சொல்ல கமுக்கமாக சிரித்தபடியே பேச்சை ரசித்தனர் தொண்டர்கள்.

- இ.கார்த்திகேயன்

பீக் ஹவர் பிரசாரம்!

ஆரவாரம் இல்லாமல் துடைப்பத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தமிழகத்தில் பிரசாரத்தில் குதித்துவிட்டது ஆம் ஆத்மி. பீக் ஹவர் நேரங்களில் எலெக்ட்ரிக் ரயில்கள், சிக்னல்கள், பஸ் ஸ்டாண்ட்கள் ஆகியவற்றில் கூடி ஆத் ஆத்மிக்கு ஓட்டுப்போட வேண்டியதன் அவசியம் குறித்து பிரசாரம் செய்கிறார்கள். பாண்டி பஜாரில் இந்தக் காட்சி...

கோஷ்டி கலக்கத்தில் சத்தியபாமா!

திருப்பூருக்கு அ.தி.மு.க. சார்பில் ஏற்கெனவே சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், திருப்பூர் மேயர் விசாலாட்சி ஆகியோர் தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனும் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பழையவர்களைக் கண்டுகொள்வது இல்லை என்பதால், இவர்களிடையே கோஷ்டிப்பூசல் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் அ.தி.மு.க. வேட்பாளர் சத்தியபாமா, தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியபோது அது வெளிப்படையாகவே வெடித்தது. பிரசார ஸ்பாட்டுக்கு வந்த மேயர் விசாலாட்சி, 'எனக்குத் தெரியாம எப்படி பிரசாரத்தைத் தொடங்கலாம்?’ என்று பிரசார வேனில் ஏறி பொதுமக்கள் முன்னிலையிலேயே எம்.எஸ்.எம்.ஆனந்தனிடம் வாக்குவாதம் செய்தார். அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், திருப்பூர் எம்.பி-யான சிவசாமி ஆகியோரையும் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் புறக்கணிப்பதாக நால்வர் குழுவுக்குப் புகார் அனுப்பப்பட்டுள்ளதாம். இவர்களுக்கிடையே நடக்கும் மோதலால் என்ன நடக்குமோ எனக் கலக்கத்தில் இருக்கிறார் வேட்பாளர் சத்தியபாமா.

- ச.ஜெ.ரவி

'காப்புக்கட்டு அன்னிக்கே எல்லாம் வந்துடாது!’

ராமநாதபுரம் தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் அறிவிக்கப்பட... வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி தலைமையில் நடந்தது. ''திருவிழான்னு இருந்தா கரகாட்டம், ஒயிலாட்டம், கறி விருந்து எல்லாம் இருக்கும். அதற்காக திருவிழா காப்பு கட்டுன அன்னிக்கே எல்லாம் நடந்துடாது. அதுபோலதான் தேர்தலும். ஏப்ரல் 24-ம் தேதி நடக்கிற தேர்தல்தான், திருவிழாவின் சிறப்பு நாள். இடைப்பட்ட நாள்களில் நீங்கள் எதிர்பார்க்கும் கரகாட்டம், சிலம்பாட்டம், கிடாவெட்டு போன்று எல்லா நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும். எனவே எதைப் பத்தியும் கவலைப்படாமல் தேர்தல் பணியைப் பாருங்க'' என்று திருநாவுக்கரசர் சொல்ல... கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் உற்சாகத்துடன் கலைந்து சென்றனர்.

- இரா.மோகன்

அப்படியே 'ஷாக்’ ஆயிட்டார்!

திருப்பூர் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துப் பேச திருப்பூர் வந்தார். கூட்டத்துக்கு மைக் ஏற்பாடு செய்யப்படவில்லை. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் 200 பேர் திரள, அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். ''நிர்வாகிகள் கூட்டம்னா 10, 15 பேர் இருப்பாங்கனு நினைச்சுட்டு வந்தேன். இவ்வளவு பேர் இருக்கீங்களே? எப்படியாவது மரியாதையான ஓட்டு வாங்கணும்னுதான் நினைச்சுட்டு இருந்தேன். தேர்தல்ல தனித்து போட்டியிடுறோம்னு சொன்ன பிறகும், நீங்க எல்லாம் இவ்வளவு உற்சாகத்தோடு வந்திருக்கிறதால, எனக்கு ஜெயிச்சிடலாம்னு நம்பிக்கை வருது'' என்றார் உற்சாகத்தோடு. 'பேச மைக் ஏற்பாடு செஞ்சிருக்கலாமே?’ என மாவட்ட நிர்வாகிகளிடம் இளங்கோவன் கேட்க... 'நாங்களும் இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கலை. அதான் ஏற்பாடு செய்யலை’ என்று அடக்கமாக பதில் சொன்னார்கள்.

- ச.ஜெ.ரவி

ஹலோ...

வேன் எப்போ வரும்?

விஜயகாந்த்தின் பிரசார வேன் எப்போது வரும் என்று மைக்குகளை கையில் வைத்துக்கொண்டு போன் மேல் போன் போட்டபடி பரிதாபமாக காத்திருக்கிறார் கட்சித் தொண்டர் ஒருவர். தஞ்சையில்தான் இந்தக் காட்சி!

ஹெச்.ராஜாசொன்ன கதை!

அழகிரியிடம் ஆதரவு கேட்டு வந்த பி.ஜே.பி-யின் ஹெச்.ராஜா, வீட்டுக்குள் சென்றதும் வெளியில் நின்றிருந்த அழகிரி ஆதரவாளர்கள், இதுவரை அண்ணனைப்பற்றி ஹெச்.ராஜா என்னவெல்லாம் பேசியிருக்கிறார் என்று பட்டியலிட்டனர். ''கடந்த மாதம் மதுரையில் நமோ பேரவையைத் திறந்துவைக்க வந்த ஹெச்.ராஜா, ஒரு கதை சொன்னார். 'அண்ணன், தம்பி ரெண்டு பேரு, ஒரு ஊரையே ரெண்டுபடுத்திக்கிட்டு இருந்தாங்களாம். மக்களெல்லாம் நிம்மதியா வாழ முடியலையாம். அவங்க எல்லாரும் கடவுள்கிட்ட கண்ணீர் விட்டு வேண்டவும், கடவுள் ஒரு பெண் வடிவமெடுத்து, அண்ணன், தம்பி முன்னாடி நடந்துபோயிருக்கிறார். இதைப் பார்த்து அண்ணன்காரன், 'தம்பி, அந்தப் பெண்தான் உன் அண்ணி’ என்றானாம். பதிலுக்கு தம்பிக்காரன், 'தப்பு. போறது உன் தம்பி மனைவி’ என்றானாம். இதனால் இருவருக்குள் தகராறு வந்து, இருவரும் வெட்டிக்கொண்டு செத்தார்களாம். அதோடு ஊர் நிம்மதியாக இருந்ததாம். அதுபோல, இப்போது அழகிரியும் ஸ்டாலினும் அடித்துக்கொள்கிறார்கள்’ என்று சொன்ன ராஜாதான் இன்று ஆதரவு கேட்டு வந்திருக்கிறார்'' என்று சொல்லிச் சிரித்தார்கள்.

# அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

- சல்மான்

ராஜீவ் ஆத்மா பழிவாங்கும்!

கடந்த 25-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் அருள் அன்பரசுவும், முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. யசோதாவும் ராஜீவ் நினைவிடத்துக்குத் தொண்டர்களுடன் வந்தனர். பாதுகாப்புப் படையினரின் தடையை மீறி ராஜீவ் நினைவு மேடை மீதே ஏறி நடந்த அருள் அன்பரசு, நினைவுக் கல்லின் மீது மாலையிட்டார். ''தலைவர் ரத்தம் சிந்திய இடத்தில் நாம்தான் ஜெயிக்கணும். நீ ரத்தம் சிந்திய பின்புதான், இந்த இடம் வளர்ச்சி அடைந்தது தலைவா! நீ எங்கே சென்றாலும், உன் ஆத்மா இங்கதான் இருக்கும். எல்லோரையும் நீ பழிவாங்க வேண்டும்'' என தொண்டர்கள் சிலர் உறுதிமொழி எடுத்ததுக்கொண்டனர்.

- பா.ஜெயவேல்

அண்ணன் காட்டியவழியம்மா!

முல்லை பெரியாறு அணை விவகாரம் பூதாகாரமாக வெடித்தபோது, தேனி மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ. தேனி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளராக அழகுசுந்தரம் அறிவிக்கப்பட்டதும் அவர் செய்தது என்ன தெரியுமா? முல்லை பெரியாறு பிரச்னைக்காக உயிர்நீத்த தேனி ஜெயப்பிரகாசம், சீலையம்பட்டி சேகர், சின்னமனூர் ராமமூர்த்தி ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று, அவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்ததுதான். பின்னர் அவர்களின் பெற்றோர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி தனது பிரசாரத்தைத் தொடங்கினார். # அசத்துங்க!

- உ.சிவராமன்