'குத்து’ ரம்யா... கெத்து ரக்ஷிதா!

தமிழ், கன்னட திரை ரசிகர்களுக்கு 'குத்து’ ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா நல்ல பரிச்சயம். கடந்த ஆண்டு நடைபெற்ற மாண்டியா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்.பி. ஆனார். இப்போதைக்கு இந்தியாவின் இளம் பெண் எம்.பி. 'குத்து’ ரம்யாதான்!

கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் நெருங்கிய உறவினர். இப்போதைய முதலமைச்சர் சித்தராமய்யா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா என மேலிட பிரபலங்கள் பலரின் சிபாரிசும் ரம்யாவுக்குக் குவிந்து கிடக்கிறது. இதே மாண்டியா தொகுதியில் மீண்டும் களம் இறங்க அனைத்து ஏற்பாடுகளும் நடக்கிறது. இவரை எதிர்த்துப் போட்டியிட இருப்பவரும் கன்னட நடிகைதான். அவர், தமிழ் திரையில் விஜய்க்கு ஜோடியாக 'மதுர’ படத்தில் நடித்த ரக்ஷிதா.

தேவ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட முடிவுசெய்து, விருப்ப மனுவும் கொடுத்து இருந்தார் நடிகை ரக்சிதா. ஆனால், தேவ கவுடா சீட் கொடுக்காமல் ரக்ஷிதாவுக்கு கல்தா கொடுக்கவே, கடந்த வாரம் பி.ஜே.பி-யில் இணைந்தார். கடந்த முறை எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி சார்பில் மாண்டியா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். ரம்யாவுக்கும் ரக்ஷிதவுக்கும் ஏற்கெனவே சினிமாவில் போட்டி. அரசியலில் இருவரும் ஒரே தொகுதியில் போட்டியிடப்போவதால்... என்ஜாய் மக்களே!

விஜயவாடாவில் அமலா!

நாகார்ஜுனாவின் மனைவி அமலா, ஒரு காலத்தில் தமிழ் திரையுலக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் கணவரின் ஆதரவோடு போட்டியிட உள்ளாராம். இன்னும் தொகுதிகள் உறுதி செய்யப்படாத நிலையில், தன் மனைவிக்கு சீட் பெறுவதற்காக பி.ஜே.பி-யின் முக்கியத் தலைவர்களைச் சந்திக்க உள்ளார் நாகார்ஜுனா. எப்படியும் ஆந்திராவில் அமலாவுக்கு சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் நாகார்ஜுனா. மல்கஜ்கிரி அல்லது விஜயவாடா ஏதேனும் ஒன்றில் அமலா போட்டியிடலாம். பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடுவைச் சந்தித்த நாகார்ஜுனா இதுகுறித்துப் பேசியதாகவும் கூறுகின்றனர். ஏற்கெனவே ஆந்திராவைப் பிரித்ததில் ஆந்திரவாசிகள் காங்கிரஸ் கட்சி மீது கடும் கோபத்தில் உள்ளனர். போதாக்குறைக்கு மோடி அலை வேறு உள்ளதால், இந்த அலையில் அமலா எப்படியும் கரை சேர்ந்துவிடுவார் என்பது கணவரின் நம்பிக்கை.

நக்மா நஜ்மா...!

மீரட்டில் நிற்கிறார் நக்மா. இந்து தந்தைக்கும் இஸ்லாமிய தாய்க்கும் பிறந்தவர் நக்மா. இப்போது கிறிஸ்தவ மதத்தில் இருக்கிறார். குஜராத்தில் நக்மாவை, நஜ்மா என்கிறார்கள் செல்லமாக. மகாராஷ்டிராவில் பலமுறை சீட் கேட்டார். 'மக்களவைக்கு மட்டுமல்ல... மாநிலங்களவைக்காவது அனுப்புங்க... நான் நாடாளுமன்றத்துக்குப் போயே ஆகணும்’ என்று ஒற்றைக்காலில் நின்று

ஒருவழியாக இறுதியில் உ.பி-யில் செட்டில் ஆகியிருக்கிறார்.

நவ்னீத் கவுரை மிரட்டும் சிவசேனா

'அம்பாசமுத்திரம் அம்பானி’ பட நடிகை நவ்னீத் கவுர் தன் கணவர் ரவி ராணாவோடு களமிறங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். சரத் பவாரின் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் அமராவதி தொகுதியில் நவ்னீத் கவுருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. 2009-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சரத் பவாரின் தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளரை எதிர்த்து பத்நேரா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ரவி ராணா. இப்போது, மனைவியை சரத் பவாரின் கட்சி சார்பாகக் களம் இறக்கியிருக்கிறார். எம்.பி-யாகிவிட்டால் 28 வயது இளம் எம்.பி. என்ற புகழைப் பெறுவார். கடந்த வாரம் கட்ஜ் நகர் காவல் நிலையத்தில் சிவசேனா எம்.பி-யான ஆனந்த்ராவ் அட்சுல் தன்னைக் கேவலப்படுத்தி, மிரட்டியதாகப் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார் நவ்னீத் கவுர். போலீஸ் அதிகாரிகளும் ஆனந்த்ராவ் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர். இதில் கடுப்பான அவருடைய ஆதரவாளர்கள் நவனீத் கவுர் சினிமா துறையில் இருந்தபோது 'தாராளமாக’ எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு நவ்னீத்தை ஏராளமாக அசிங்கப்படுத்தி வருகிறார்கள்.

நரியா.. எறும்பா..?

நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரான பி.ஏ.சங்மா காங்கிரஸின் முக்கிய எதிரி. சோனியாவின் தலைமையை வெளிப்படையாக விமர்சனம் செய்து கட்சியைவிட்டு வெளியேறியவர். அதனைத் தொடர்ந்து சரத் பவார், மம்தா என பலரும் வெளியேறியதில் நாடு முழுவதும் பலவீனம் அடைந்து கிடக்கிறது காங்கிரஸ். இப்படி கட்சியைக் கரைக்கும் முயற்சியில் ஈடுபட்டவரை மன்னிக் குமா, காங்கிரஸ்? அதனால், இப்போது சங்மா போட்டியிடும் மேகாலயாவின் தூரா தொகுதியில் அவரைத் தோற்கடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், சங்மாவின் பேரன் வயது கொண்டவரான வில்லியம் சேரன் மோமின் என்ற இளைஞரை காங்கிரஸ் சார்பில் இந்தத் தொகுதியில் மோதவிட்டு இருக்கிறது. 'சிங்கத்தை எதிர்க்க சிறு நரியா?’ என தூரா தொகுதியில் எட்டு முறை வெற்றிபெற்ற சங்மா கொக்கரிக்கிறார். இதைச் சுலபமாக எடுத்துக்கொள்ளும் வில்லியம் சேரன் மோமின், 'யானையின் காதில் புகுந்த எறும் பாக சங்மாவை ஆட்டிப் படைப்பேன்’ என்கிறார்.

அதிரும் மதுரா!

பாலிவுட்டையே கலக்கிய ஹேமமாலினி அரசியலையும் பல ஆண்டுகளாகக் கலக்கி வருகிறார். இவரின் கணவர் தர்மேந்திரா பி.ஜே.பி-யில் பல ஆண்டுகளாகத் தீவிர அரசியலில் இருப்பவர். ஹேமமாலினி ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தார். 2004-ம் ஆண்டு பி.ஜே.பி-யில் உறுப்பினராக இணைந்து 2010-ம் ஆண்டு முதல் பி.ஜே.பி-யின் உத்தரப்பிரதேசப் பொதுச்செயலாளராக இருக்கிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா தொகுதியில் போட்டியிடப் போகிறார். இவருக்கு ஆதரவாக பல பாலிவுட் பிரபலங்களும் பிரசாரம் செய்ய இருக்கிறார்கள். இப்போதே மதுரா தொகுதி களைகட்டத் தொடங்கிவிட்டது.

வேட்பாளருக்கு வெடி!

மேற்கு வங்காள மாநிலத்தின் டார்ஜிலிங் தொகுதியில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பி.ஜே.பி. கூட்டணிக் கட்சியான கூர்க்கா முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. திரிணாமுல் வேட்பாளராக பிரபல கால்பந்து வீரர் பெய்ஜிங் பூட்டியாவும் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் எஸ்.எஸ்.அலுவாலியாவும் களம் இறங்குகிறார்கள்.

இருவருமே தங்கள் ஆதரவாளர்களுடன் ஒரே நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தார்கள். மனுத் தாக்கல் முடிந்ததும் அலுவாலியா வெளியே வந்தார். தங்கள் வேட்பாளரான பூட்டியா வந்ததாக நினைத்து திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் விண்ணதிர கோஷமிட்டதுடன் கைதட்டி வரவேற்றனர். எதிரணியினருக்கு அதிர்ச்சி. தவற்றை உணர்ந்த திரிணாமுல் தொண்டர்கள்அசடு வழிந்தது மீடியாவிலும் அம்பலமானது.

சண்டிகரிலும் நட்சத்திர யுத்தம்!

சண்டிகர் மாநிலத்தில் கால் நூற்றாண்டுக்கு முன் குணச்சித்திர நடிகையாக இருந்தவர் கிரான் கெர். பெங்காலி படமான 'பன்னலாடா’-வில் நடித்ததற்காகவும் 'சர்தார்ஜி பேக’த்தில் நடித்ததற்காகவும் இரண்டு முறை தேசிய விருது வாங்கியவர். 'லாடி’ என்ற என்.ஜி.ஓ. அமைப்பிலும் ரோக்கோ கேன்சர் என்ற கேன்சர் விழிப்பு உணர்வு இயக்கத்திலும் தொடர்ச்சியாகப் பணியாற்றி சண்டிகர் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். 2009-ம் ஆண்டு பி.ஜே.பி-யில் இணைந்தார். 2011-ம் ஆண்டு சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் பெரும் வெற்றியைக் குவித்தார். அப்போதே பி.ஜே.பி-யில் ஒரு பெரிய பதவி தரப்படலாம் எனப் பேசப்பட்டது. அண்ணா ஹசாரே இயக்கத்தில் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டார். நரேந்திர மோடிக்கு ஆதரவாகத் தொடர் குரல் கொடுத்த அவருக்கு, இப்போது சண்டிகர் தொகுதியில் நிற்க சீட் கொடுத்து இருக்கிறார்கள். இவரை எதிர்த்து இதே சண்டிகர் தொகுதியில் நிற்பவர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மிஸ் இந்தியா பட்டம் பெற்ற புதுமுக நடிகை குல் பனாக். மிஸ் இந்தியாவா... குணச்சித்திரமா?

தொகுப்பு: கண்பத், ஆண்டனிராஜ், அறவாழி, சிபி