முன்பு தென் மாவட்டங்களில் மட்டும் சுற்றிவந்த 'அழகிரி எக்ஸ்பிரஸ்’ இப்போது தமிழகம் முழுவதும் வலம்வருகிறது. முன்பு அழகிரியைப் பார்க்க வேண்டும் என்றால், எத்தனையோ செக்போஸ்ட்டுகள் இருக்கும். இப்போது யார் போனாலும் அவரை தரிசிக்கலாம் என்ற நிலைமை. தி.மு.க. வேட்பாளர்கள் தவிர மற்ற அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் அவரைச் சந்தித்து ஆதரவு கேட்கிறார்கள். திடீரென சென்னை சென்று தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் ஆகியோரைச் சந்தித்துவிட்டு வந்த அழகிரியை கடந்த 30-ம் தேதி காலை மதுரையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.

''உங்களைத் தேடி பல்வேறு கட்சி வேட்பாளர்கள் வருகிறார்கள். தேர்தல் தேதி நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்னமும் உங்கள் ஆதரவு யாருக்கு என்று சொல்லவே இல்லையே?''

''நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. என்னுடைய ஆதரவாளர்களும் யாரும் நிற்கவில்லை. ஒருவேளை என்னுடைய ஆதரவாளர்கள் யாராவது இந்தத் தேர்தலில் நின்றால், பிரசாரத்துக்கு நான் போவேன். யாருக்கு என்னுடைய ஆதரவு என்பதை இப்போது சொல்ல முடியாது. தேர்தல் நெருங்கும்போது என்னுடைய ஆதரவாளர்களிடம் கேட்டு முடிவுகளை அறிவிப்பேன்.''

''தமிழகத் தலைவர்கள் மட்டும் இல்லாமல், பல தேசியக் கட்சித் தலைவர்களே உங்களிடம் பேசி வருகிறார்களே. இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைத்தீர்களா?''

''என்னை அவ்வளவு பெரிய தலைவராக ஆக்கிவிட்டது தலைவர்தான். அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.''

''அ.தி.மு.க-வில் இருந்து உங்களுக்கு தூது வந்ததாகச் சொல்கிறார்களே?''

''அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நீங்களே கற்பனை பண்ணி எதுவும் கேட்காதீர்கள்.'

''சென்னைக்கு சென்றபோது கனிமொழியைச் சந்தித்தீர்கள். அப்போது உங்கள் நீக்கம் பற்றி பேசினீர்களா?''

''கனிமொழி சில வாரங்களுக்கு முன் உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் இருந்தார். அப்போது அவரைப் போய்ப் பார்க்க முடியவில்லை. போனில் மட்டும் பேசினேன். 'நேரம் கிடைக்கும்போது வருகிறேன்’ என்றேன். இப்போது நேரம் கிடைத்தது, பார்த்தேன். ஒரு எம்.பி-யாக அவரைப் பார்க்கவில்லை. என் தங்கையாகத்தான் பார்த்தேன். தங்கையை சென்று சந்தித்ததே இங்கு பெரிய செய்தியாக ஆகிறது. இப்படித்தான் என் அம்மாவை நான் சென்று சந்தித்ததும் பெரிய விஷயமாக ஆக்கப்படுகிறது.''

''உங்களை நம்பி வந்த தொண்டர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?''

''என்னுடைய நீக்கத்தை ஏற்றுக்கொள்ளாத தொண்டர்கள் எனக்கு ஆதரவாகத் திரள் கிறார்கள். அவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். அவர்களை நான் வணங்குகிறேன். அவர்களது ஆதரவை என்றைக்கும் நான் மறக்க மாட்டேன். எந்தக் காலத்திலும் நான் நன்றி மறந்தவன் அல்ல என்பதால்தான் எனக்கு ஆதரவாகத் திரள்கிறார்கள்.

நான் நீதியின் பக்கம் நின்று கேள்விகள் கேட்கிறேன் என்பது தி.மு.க. தொண்டர்களுக்குத் தெரியும். பல மாவட்டச் செயலாளர்கள் உள்கட்சித் தேர்தலில் முறைகேடுகளைச் செய்துள்ளார்கள். அதனால் வெம்பிப்போய் உள்ளான் தி.மு.க. தொண்டன். மாவட்டச் செயலாளர்களில் பல்வேறு முறைகேடுகளை எதிர்த்து நியாயம் கேட்டேன். அதற்குக் கிடைத்த பரிசுதான், என்னுடைய நீக்கம் என்ற உண்மை தொண்டர்களுக்குத் தெரியும்.''

''இவர்களது ஆதரவை அரசியல்ரீதியாக எப்படி, எப்போது மாற்றப்போகிறீர்கள்?''

''பல்வேறு மாவட்டங்களில் கூட்டம் போட்டு வருகிறேன். நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறேன். அவர்களது ஆலோசனைப்படி முடிவை விரைவில் அறிவிப்பேன்.''

''தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைமுகமாக உங்களை ஆதரிப்பதாகச் சொல்கிறார்களே?''

''என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தலைவரே பேட்டி கொடுத்தாரே... அதுதான் மறைமுக ஆதரவா? பக்கத்தில் உட்காரவைத்து சொல்லச் சொன்னார்களே... அதுதான் மறைமுக ஆதரவா? அவர் எனக்கு ஆதரவாக இல்லை.''

''தி.மு.க-வில் ஸ்டாலின் கை ஓங்கி இருப்பதால்.....?''

''நான் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சூழ்நிலையில் அதைப்பற்றி இப்போது பேச விரும்பவில்லை.'

''முன்பு ஒருமுறை உங்களைக் கட்சியில் இருந்து நீக்கியதும் மதுரை பற்றி எரிந்தது. ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று இருந்தது. அப்படி எதுவும் இப்போது இல்லையே?''

''என் தொண்டர்கள் தீவிரவாதிகள் இல்லை. என் ஆதரவாளர்கள் மிகவும் பக்குவப்பட்டு இருக் கிறார்கள். நானும் இதைத்தான் விரும்புகிறேன்.'

''இந்தப் பிரச்னையே தி.மு.க-வை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில்தான் வந்தது என்கிறார்களே?''

''அப்படி ஒன்றும் இல்லை. நான் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவன். எனக்குக் கட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை எந்தக் காலத்திலும் இருந்தது இல்லை. இனியும் இருக்காது.''

''ஒரு மிகப்பெரிய அரசியல் கட்சித் தலைவரை தீய சக்திகள் சூழ்ந்துள்ளன என்று சொல்கிறீர்கள். அவரை சிலர் மிரட்டிவைத்துள்ளதாகவும் சொல்கிறீர்கள். அப்படிச் செய்வது யார் என்று சொல்ல முடியுமா?''

''ஸ்டாலின்! போதுமா?''

ஆக்ரோஷமான குரலில் பேட்டியை முடிக்கிறார் அழகிரி.

- சண்.சரவணக்குமார்

படம்: பா.காளிமுத்து