செட்... சென்டிமென்ட்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம், அவர் பேசும் மேடைக்கு எதிரே அவரது பார்வையில் படும்படி நாடாளுமன்ற வடிவ செட் ஒன்றை வைத்துள்ளனர். பிறகு, அத்துடன் செங்கோட்டை வடிவ செட் ஒன்றும் வைக்கப்பட்டது. மூன்றாவதாக இப்போது இந்தியா கேட் செட்டும் வைக்கப்படுகிறது. # என்ன சென்டிமென்டோ?

- சு.குமரேசன்

அதிருப்தி அம்மா... அச்சத்தில் அமைச்சர்!

தேர்தல் பிரசார கூட்டத்துக்காக திண்டுக்கல்லுக்கு வந்தார் ஜெயலலிதா. காலை 11 மணி முதலே பெண்களை அழைத்து வந்து கொளுத்தும் வெயிலில் அமரவைத்துவிட்டனர். வெயிலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலையத் தொடங்கியது. மதியம் 2.20 மணிக்கு ஹெலிகாப்டரில் ஜெயலலிதா வந்து இறங்கியபோது, கூட்டம் குறைவாக இருப்பதைப் பார்த்து கடுப்பானவர், மேடையேறி பிரசாரத்தை முடித்து ஹெலிகாப்டரில் ஏறினார். அப்போது, 'அம்மா திரும்பிப் பார்ப்பார்கள்... கும்பிடு போட்டு வழியனுப்பலாம்’ என ஹெலிகாப்டர் அருகே காத்திருந்தார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். ஆனால், 10 நிமிடங்கள் ஹெலிகாப்டர் நின்றிருந்தும், அமைச்சர் இருந்த பக்கம் ஜெயலலிதா திரும்பவே இல்லை. இதனால் 'என்ன ஆகுமோ?’ என்ற அச்சத்தில் இருக்கிறார் விஸ்வநாதன்.

- ஆர்.குமரேசன்

வெற்றி தோல்வி கலைஞருக்குதான்!

மாவட்டச் செயலாளர் என்ற முறையில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளரான கடலூர் நந்தகோபாலகிருஷ்ணனை ஜெயிக்கவைக்க முன்னுரிமை கொடுப்பாரா... அல்லது, கூட்டணி தர்மத்துக்காக சிதம்பரம் தொகுதி திருமாவளவனை ஜெயிக்கவைக்க முன்னுரிமை கொடுப்பாரா என்ற சலசலப்பு விடுதலைச் சிறுத்தைகள் மத்தியில் பலமாகவே இருந்தது. இந்த நிலையில், காட்டுமன்னார்கோவிலில் சிதம்பரம் தொகுதி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பேசிய திருமாவளவன், ''நான் வெற்றிபெற்றால் நாடாளுமன்றத்தில் பேசுவேன். இல்லையென்றால், மக்கள் மன்றத்தில் பேசுவேன். வெற்றியோ, தோல்வியோ எங்களுக்கு இல்லை. அது கலைஞருக்குத்தான்'' என்று 'பொடி’ வைத்துப் பேச, விடுதலைச் சிறுத்தைகள் விசிலடித்து, கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதன் பிறகு மைக் பிடித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ''விசிலடித்து, கைதட்டுறதை விட்டுட்டு, எல்லோரும் கரெக்டா அவங்க அவங்க ஓட்டைப் போடுங்க'' என்று அவரும் பதிலுக்குக் கொட்டு வைக்க... கூட்டம் களைகட்டியது.

- க.பூபாலன்

அந்த பயம் இருக்கட்டும்!

திருவண்ணாமலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பா.ம.க. வேட்பாளர் எதிரொலி மணியனை ஆதரித்து அண்ணா சிலையருகே வாக்கு சேகரிக்க வந்தார். அப்போது தே.மு.தி.க. தொண்டர்கள், ''பக்கத்தில் உள்ள ஹைமாஸ் லைட்கிட்ட பிரசாரத்தை வெச்சுக்கலாம்'' என்று அங்கு அழைத்துச் சென்றனர். அந்த நேரம் பார்த்து ஹைமாஸ் லைட் எரியாமல் போகவே, ''தலைவர் வருவதைத் தெரிந்துகொண்டு வேண்டும் என்றே நகராட்சி லைட்டை அணைத்து வைத்துள்ளது'' என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர் தொண்டர்கள். அப்போது திடீரென்று ஹைமாஸ் லைட் எரிய, ''தலைவரைப் பார்த்து அ.தி.மு.க-வினர் பயந்துவிட்டனர். அதனால்தான் லைட்டை உடனே போட்டுவிட்டனர். அந்த பயம் இருக்கட்டும்'' என்று ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். பின்னர் ஒருவழியாக மைக்கைப் பிடித்த விஜயகாந்த், வேட்பாளரை அறிமுகப்படுத்துவதற்காக வண்டிக்குள் உட்கார்ந்திருந்த வேட்பாளரை பார்த்து ''உன் பெயரென்னப்பா?'' என்று கேட்க, ''எதிரொலி மணியன் அண்ணே'' என்று சொல்லிக்கொண்டே வேட்பாளர் வண்டிக்கு வெளியில் வர... கரவொலி காதை கிழித்துவிட்டது!

- க.பூபாலன்

தி.மு.க. கூட்டத்தில் அம்மா குடிநீர்!

கோவை மாவட்டம் துடியலூரில் ஸ்டாலின் பிரசாரம். அவர் வருவதற்கு தாமதமாகவே முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ-வான சி.ஆர்.ராமச்சந்திரன் மைக்கைப் பிடித்து முதல்வர் ஜெயலலிதாவை தாறுமாறாகப் பேசினார். அப்போது அவருக்குத் தொண்டை அடைத்துக்கொள்ளவே, குடிக்கத் தண்ணீர் கேட்டார். தொண்டர்கள் தந்ததோ... அம்மா குடிநீர் பாட்டில். பல்பு வாங்கியதை உணர்ந்த தி.மு.க. நிர்வாகி ஒருவர், அந்தத் தண்ணீர் பாட்டிலில் உள்ள ஜெயலலிதா படத்தைக் கிழித்து எறிந்துவிட்டு பாட்டிலைக் கொடுத்தார்.

- ர.சதானந்த்

அமாவாசைக்கு அப்புறம்தான்!

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் லெட்டர் பேட் கட்சிகளின் கூட்டம் அலையடிக்கிறது. 'நாங்களும் அம்மாவுக்காக பிரசாரத்துக்கு போறோம். ஜீப், பெட்ரோல், ஹோட்டல்னு செலவு இருக்கு. எங்களை கவனியுங்க’ என்று நிர்வாகிகளிடம் கேட்கிறார்களாம். ஆனால், 'அமாவாசை முடிந்த பிறகுதான் எல்லாம் கிடைக்கும்’ என்று கிடைக்கும் பதிலால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள்.

- சு.குமரேசன்

பிரதமர்னா அது மோடிதான்!

விஜயகாந்த் மீட்டிங் என்றாலே, கலகலப்புக்குப் பஞ்சம் இருக்காது. இது, வட மாவட்ட கிராமப்பகுதி ஒன்றில் விஜயகாந்த் பிரசாரம் செய்தபோது நடந்த சம்பவம். அவர் பிரசாரம் செய்ய வந்தபோது, ''வருங்கால பிரதமர் விஜயகாந்த் வாழ்க...'' என்று கூட்டத்தினர் கோஷம் போட... ''அப்படியெல்லாம் கோஷம் போடக் கூடாது. வருங்கால முதல்வர்னு சொல்லுங்க. பிரதமர்னா அது மோடிதான்!'' என்று அவர்களை சமாதானப்படுத்தி இருக்கிறார்.

- பூம்பாவை

கண்டுக்காம போறீங்களே அண்ணா!

சேலத்தில் உள்ள மசூதி ஒன்றில் தி.மு.க. வேட்பாளர் உமாராணி வாக்கு சேகரித்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷ§ம் அங்கே தனது ஆதரவாளர்களுடன் வந்தார். உமாராணியை நேருக்கு நேர் பார்த்ததும் சுதீஷ் என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்க... உமாராணியோ கையெடுத்து கும்பிட்டபடி சுதீஷை நோக்கிச் சென்றார். சுதீஷ§ம் வேறு வழியில்லாமல் வணக்கம் சொன்னார். சுதீஷ§க்குப் பக்கத்தில் இருந்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ-வான அழகாபுரம் மோகன்ராஜுக்கு உமாராணி வணக்கம் சொல்ல... அவர் பதிலுக்கு வணக்கம் சொல்லாமல் சுதீஷ் பின்னால் பம்மினார். உமாராணியோ விடாமல், ''என்னண்ணா... நான் உங்க வீட்டுப் பொண்ணு. கண்டுக்காம போறீங்க...’ என்று விடாமல் விரட்டி வணக்கம் சொல்ல... நெளிந்தபடியே வணக்கம் சொல்லிவிட்டு நகர்ந்தார் மோகன்ராஜ்.

- வீ.கே.ரமேஷ்

ரிப்பீட்டு!

சமீப கூட்டங்களில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் திரும்பத் திரும்ப பயன்படுத்தும் வார்த்தைகள் இவைதான்...

இரண்டு ஹெலிகாப்டர், அம்மா வாட்டர், போலீஸ் பாவம்.

செய்வீங்களா... செய்வீங்களா? அவங்க கேக்குறாங்க! செஞ்சீங்களா...

செஞ்சீங்களா? நாம கேட்போம்!

ஐந்து அறிவு படைத்த யானைக்கே அந்த அம்மாவைப் பிடிக்காமல் முட்டிருச்சு! ஆறு அறிவு உள்ள நாம் சிந்திக்கணும்!

இனி அவர் புரட்சித் தலைவி இல்லை... அவர் வறட்சித் தலைவி!

- தி.விஜய்

திண்டுக்கல்லுக்கு மிக அருகே... விருதுநகர்!

திண்டுக்கல் தே.மு.தி.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மைக்கைப் பார்த்ததும் என்ன பேசுவது என தெரியாமல் பதற்றமானார். ''மோடி நரேந்திரன் பிரதமராக வரவேண்டும். தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை... ம்... தேசிய முற்போக்குக் கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும்...'' என்று திணறியவர்... உச்சபட்சமாக, சென்னைக்கு மிக அருகே செங்கல்பட்டில் இந்த மனை அமைந்திருக்கிறது என ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விளம்பரம் செய்வதுபோல, '’நானும் திண்டுக்கல்தான்... பக்கத்துல இருக்கும் விருதுநகர்தான் எனக்கு சொந்த ஊரு...'' என்றதும் பத்திரிகையாளர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை!

- ஆர்.குமரேசன்

அம்மா அசைன்மென்ட்!

ஓய்வெடுப்பதற்காக தே.மு.தி.க-வில் இருந்து விலகிவந்து, பின்னர் அ.தி.மு.க-வில் இணைந்த பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தலைமை ஒரு முக்கிய அசைன்மென்ட் கொடுத்திருக்கிறதாம். பா.ம.க. மற்றும் தே.மு.தி.க-வில் இருக்கும் அதிருப்தியாளர்களை அடையாளம் கண்டு அவர்களை இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக தேர்தல் வேலை செய்ய வைப்பதுதான் அந்த அசைன்மென்டாம்.

- சு.குமரேசன்

அசத்தல் அன்பழகன்!

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் மயிலாடுதுறை வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது. 10 மணிக்கு நடைபெற இருந்த கூட்டத்துக்கு தொண்டர்கள் கூடிவிட்டனர். ஆனால் வேட்பாளரான ஹைதர் அலி வருவதற்கு நேரமானதால், கூட்டம் கலையத் தொடங்கியது. இதைக் கவனித்த தி.மு.க. எம்.எல்.ஏ-வான சாக்கோட்டை அன்பழகன், 'ஊதா கலரு ரிப்பன்... உனக்கு யாரு அப்பன்’ என்ற பாடலில் தொடங்கி, பல்வேறு சினிமா பாடல்களைப் பாடத் தொடங்கினார். ரெகுலரான மேடைப் பேச்சைக் கேட்க வந்த தொண்டர்கள், அவருடைய பாட்டைக் கேட்டதும் சிலாகித்து அப்படியே அமர்ந்துவிட்டார்கள்.

- கே.குணசீலன்

ஒரு செடி... மூணு ஃப்ளவர்!

கரூர் தொகுதி தி.மு.க. வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சின்னசாமியும், தே.மு.தி.க. வேட்பாளரான மாவட்டச் செயலாளர் என்.எஸ்.கிருஷ்ணனும் ஆரம்பத்தில் அ.தி.மு.க-வில் இருந்தவர்களே. இவர்களுடன் சிட்டிங் எம்.பி-யான அ.தி.மு.க-வின் தம்பிதுரை மோதுகிறார். இதைப் பார்த்து மூவருமே ஒரு கொடியில் பூத்த மலர்கள்தான் என்று கரூர்வாசிகள் கமென்ட் அடிக்கிறார்கள்.

- சி.ஆனந்தகுமார்

கடையே காங்கிரஸ் காரியாலயம்!

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார். நாகர்கோவிலில் தலைமை தேர்தல் காரியாலயம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட... காங்கிரஸ் அலுவலகத்தில் குவிந்தனர் தொண்டர்கள். ஆனால், அங்கு அலுவலகம் திறக்கப்படுவதற்கான அறிகுறியே இல்லை. அருகில் இருக்கும் வசந்த் அண்ட் கோ-வின் புதிய கடையில்தான் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் போட்டோக்களை மாட்டிவிட்டு, காரியாலயமாக மாற்றிவிட்டார் வசந்தகுமார்.

- ச.காளிராஜ்