''இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை. தமிழகம் முழுக்க காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்வேன்'' என்று தேர்தலுக்கு முன்னரே சொன்ன மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், கடந்த 29-ம் தேதி கும்பகோணத்தில் நாகை, தஞ்சை, மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, பிரசாரப் பயணத்தைத் தொடங்கினார்.

மயிலாடுதுறை வேட்பாளர் மணிசங்கர் அய்யர், ''இதுநாள் வரை நான் 10 பேர், 20 பேரோடுதான் கிராமம்தோறும், வார்டுதோறும் பிரசாரம் செய்துகொண்டிருந்தேன். இங்கு இருக்கும் கூட்டத்தைப் பார்த்தால் எனக்கு வெற்றி எளிதில் கிடைக்கும் என நம்புகிறேன். அதோடு யாரும் நம்மை தோற்கடிக்க முடியாது. கூட்டணி இல்லை என்று சொல்கிறார்கள். யார் சொன்னது கூட்டணி இல்லையென்று. மக்களோடுதான் கூட்டணி வைத்திருக்கிறோமே! 23 ஆண்டு காலம் என் அரசியல் வாழ்க்கையில் நிறைய காங்கிரஸ்காரர்களை சந்தித்து இருக்கிறேன். இன்று இவ்வளவு காங்கிரஸ்காரர்கள் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நிச்சயம் வெற்றிபெறுவேன். அது என்னுடைய வெற்றியாக இருக்காது; அது வாசனுடைய வெற¢றியாகத்தான் இருக்கும்'' என்றார்.

நிறைவாக பேசிய ஜி.கே.வாசன், ''47 வருடம் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இல்லை என்றாலும்¢, உயிரோட்டமான தொண்டர்கள் இவ்வளவு பேரைப் பார்க்கும்போது காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் பிடிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. இதுதான் முதல் ஆரம்பம். நம் பாதை தனிப் பாதை. இந்த வெற்றிப் பாதையை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.

தெய்வ பக்தி, தேச பக்தி நிறைந்த காங்கிரஸ்காரன் ஆட்சிதான் இனி மத்தியிலும் மாநிலத்திலும் நடக்க வேண்டும். அதனால்தான் மூப்பனாரை ஈன்றெடுத்த இந்த மண்ணில் இருந்து பிரசாரத்தை ஆரம்பிக்கிறேன். இந்தத் தேர்தல் வித்தியாசமான, முக்கியமான தேர்தல். கூட்டத்தைப் பார்க்கும்போது காங்கிரஸ்காரனும் மற்றவர்களைப்போல கூட்டத்தைக் கூட்டுவதிலும் சளைத்தவன் அல்ல என்பதைக் காட்டுகிறது. இதற்காகவும் (குவார்ட்டர்) அதற்காகவும் (பணம்) கூடிய கூட்டம் அல்ல. மக்களைக் காப்பாற்றுவதற்காகக் கூடிய கூட்டம். தலித் சமுதாயத்துக்கு 65 ஆயிரம் கோடி, சிறுபான்மையினருக்கு 3 ஆயிரம் கோடி ஒதுக்கி பாதுகாப்பது காங்கிரஸ் கட்சி. ஆனால், அந்தத் தலைவர்கள் கூட்டணி வைப்பது திராவிடக் கட்சிகளோடா? நெஞ்சில் கை வைத¢து மனசாட்சியோடு நினைத்துப் பாருங்கள். தலித், இஸ்லாமிய தலைவர்களே... நீங்கள் போனால் பரவாயில்லை; உங்கள் தொண்டர்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

சந்தர்ப்பவாத கூட்டணி, முரண்பாடான கூட்டணி, மரத்துக்கு மரம் தாவும் கூட்டணிகள்தான் தமிழகத்தில் உலவுகிறது. நான் நிலையான காங்கிரஸ் கட்சிக்காரன். நிலையான ஆட்சி வேண்டுமானால், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் எந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும், மீண்டும் தேர்தல் வரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மொரார்ஜி தேசாய் நான்கு மாதம், சரண் சிங் ஐந்து மாதம், வி.பி.சிங் ஒன்பது மாதம், சந்திரசேகர் ஏழு மாதம் ஆட்சி செய்தி ருக்கிறார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், காங்கிரஸைத் தவிர வேறு யார் வந்தாலும் நாள்கணக்கில், மாதக்கணக்கில்தான் ஆட்சி செய்வார்கள். மோடி தேர்தல் வரைதான். சோனியா காந்தி, ராகுல் காந்திதான் நிரந்தரம். மோடியை அவர்கள் கட்சியினரே ஏற்கவில்லை. ராகுல் காந்தியை காங்கிரஸில் 100 சதவிகிதம் ஆதரிக்கின்றனர்.

ஆறு மாத காலம்தான் மோடி இந்தியாவைச் சுற்றிவருகிறார். 10 வருடமாக இந்தியா முழுவதும் ராகுல் காந்தி சுற்றிவருகிறார். ஈழப் பிரச்னையில் ராஜீவ் காந்தியின் கனவை நிறைவேற்றும்விதமாக, அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதிலும், புனரமைப்பு செய்துகொடுப்பதிலும் எல்லா உதவிகளையும் காங்கிரஸ் அரசு செய்திருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளர்வதற்கு தடையாக இருக்கிறது அதை உடைத்து எறிய வேண்டும். ஆகவே, ஏப்ரல் 24-ம் தேதி நீங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கும்போது உங்கள் கைகள் தானாக கை சின்னத்துக்கு வர வேண்டும். அப்படி வரும்போது அதில் ஓங்கி ஒரு குத்து குத்துங்கள். அது மற்ற அணியினருக்கு வைக்கும் வேட்டாக இருக்க வேண்டும்'' என்ற வாசன் மேஜையில் குத்தியும் காண்பித்தார்.

வாங்கஜி வாசன்ஜி!

- ஏ.ராம், படம்: ர.அருண்பாண்டியன்