அம்மாவைப் பிரதமர் ஆக்கியே தீர வேண்டும் என்று தீயாகப் பிரசாரம் செய்துவருகிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன். கடந்த 30-ம் தேதி தர்மபுரியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பி.எஸ்.மோகனை ஆதரித்துப் பேசிய வேல்முருகன், காங்கிரஸ், தி.மு.க-வில் ஆரம்பித்து பா.ம.க, தே.மு.தி.க. வரை கழற்றி எடுத்துவிட்டார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் காவேரி: ''இங்கு கூடியிருக்கும்

கூட்டத்தைப் பார்த்தாலே தி.மு.க., பா.ம.க-வினர் நாளை முதல் வேலை செய்ய மாட்டாங்க. ஏன் பணத்தை வீணாக செலவழிக்க வேண்டும் என்று சும்மா இருந்துடுவாங்க. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க வேட்பாளர் மாற்றப்பட்டிருக்கார். காங்கிரஸில் இருந்து வந்தவரிடம் வாங்க வேண்டியதை வாங்கிக்கிட்டு சீட் கொடுத்துட்டாங்க. மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தீர்களே... எத்தனை வன்னிய மாணவர்களுக்கு டாக்டர் சீட் வாங்கி கொடுத்தீங்க? இந்த சாதியை அடிமையாகத்தான் வெச்சிருக்கணும்னு நினைக்கிறீங்க. விஜயகாந்த் குடுகுடுப்பைக்காரனாக நடித்தவர். தொப்புளில் பம்பரம் விட்டவர். வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லைனு சொன்னீங்களே... இப்ப அந்த விஜயகாந்த் பம்பரம்விடுவதை வேடிக்கை பார்க்கப்போறீங்களா? இனிமேல் உங்கள் சாதிப்பாசம் செல்லாது!''

உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன்: ''இப்போது நடக்க இருக்கிற தேர்தல், டெல்லிக்கான தேர்தல். மத்தியில் யார் ஆட்சி என்பதற்கான தேர்தல். இதுவரை எங்க அம்மாவைத் தமிழக முதல்வராக்குங்கன்னு ஓட்டு கேட்டுவந்தோம். இப்போ அம்மாவைப் பாரத பிரதமர் ஆக்குங்கன்னு ஓட்டு கேட்டு வந்திருக்கோம். எம்.ஜி.ஆர். இருந்தப்ப காங்கிரஸுக்கு 30 சீட் கொடுத்துட்டு, வெறும் 10 சீட்தான் அவர் நிப்பார். சுதந்திரத்துக்காகப் போராடின கட்சி என்ற இமேஜ் காங்கிரஸுக்கு இருந்தது. இப்போ அந்தக் கட்சி நாட்டை ஊழலுக்குப் பலி கொடுத்துடுச்சு. அதுக்காகத்தான் அம்மா முதன்முறையா 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுறார். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத பல திட்டங்களை நிறைவேத்தி இருக்கும் அம்மா, ஏன் பிரதமராகக் கூடாது? அம்மா பிரதமரானால்தான் கச்சத்தீவை மீட்க முடியும். இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்க்க முடியும். கங்கையை காவிரியோடு இணைக்க முடியும்.''

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்: ''பல லட்சம் தமிழர்களைக் கொன்றுகுவித்த ராஜபக்ஷேவை, ஐ.நா. மன்றத்திலே குற்றவாளியாக நிறுத்த, தமிழ் ஈழம் மலர, காவிரிப் பிரச்னையைத் தீர்க்க, கங்கை - காவிரியை இணைக்க, நாட்டை அடகுவைத்த தி.மு.க-வையும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸையும் தூக்கி எறிய அம்மாவால் மட்டுமே முடியும். இதையெல்லாம் செய்யும் துணிச்சலும் துடிப்பும் அம்மாவுக்குத்தான் இருக்குது. அதனால்தான் நான் அம்மாவை ஆதரிக்கிறேன். ஐ.கே.குஜ்ரால், வி.பி.சிங் எல்லாம் எத்தனை எம்.பி-க்களை வெச்சுக்கிட்டு பிரதமரானாங்க? அப்ப அம்மா ஏன் 40 எம்.பி-யை வெச்சிக்கிட்டு பிரதமராகக் கூடாது? ஸ்டாலின ஏத்துப்பீங்க. அழகிரிய ஏத்துப்பீங்க. கனிமொழிய ஏத்துப்பீங்க. தயாநிதிய ஏத்துப்பீங்க... ஏன் அம்மாவை மட்டும் ஏத்துக்க மாட்டீங்களா?

குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அம்மாவைப் பிரதமராக்கியே தீர வேண்டும். இங்க புதுசா ஒரு கூட்டணி உருவாகியிருக்கிறது. கொள்கையில்லாத கூட்டணி. லட்சியம் இல்லாத கூட்டணி... வைகோவுடைய தேர்தல் அறிக்கைக்கும் பி.ஜே.பி-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பதவிக்காக ஒட்டுமொத்த கொள்கையையும் அடகு வெச்சிடுவீங்களா?

நம்ம மருத்துவர் ஐயா கேப்டனோடு சேர்ந்திருக்கார். குடிகாரர் எல்லாம் கட்சி ஆரம்பித்துவிட்டார்கள் என்று அப்போது விமர்சித்தீர்களே... இப்போது அவர் உங்களுக்கு கேப்டனா? 'நீங்க ஒவ்வொருவரும் உண்மையான வன்னியர்களுக்குப் பிறந்திருந்தால் உங்கள் ஓட்டு மாம்பழத்துக்குத்தான்... அப்படியில்லை என்றால் நீங்கள் வன்னியரே இல்லை’ என்றீர்களே... இப்போது உங்கள் ஓட்டை யாருக்கு ஐயா போடப்போறீங்க? வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை என்றாரே மாவீரன் குரு... இப்போது சேலத்திலும் விழுப்புரத்திலும் யாருக்கு ஓட்டு கேட்பார்? இனிமேல் உங்கள் சாதிப்பாச நடிப்பு எடுபடாது. வன்னியர்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை.

கேப்டன்னு சொல்லிக்கிற விஜயகாந்த், 'மக்களே... நான் என் கட்சிக்காரனை அடிப்பேன். அப்புறம் வீட்டுக்கு அழைச்சுப்போய் ஊத்திக் கொடுப்பேன். அதெல்லாம் என் கட்சி விவகாரம். நீங்கள் கண்டுக்கக் கூடாது. ஆனா ஓட்டு போட்டுடணும் மக்களே’னு சொல்லிக்கிட்டு வர்றார். பல இடங்களில் என்ன பேசினோம்... அங்கு யார் வேட்பாளர்னு தெரியாம தடுமாறுகிறார். நீங்க மோடிய ஆதரிப்பீங்க... விஜயகாந்த்தைக் கட்டிப்பிடிப்பீங்க. அதற்கு இந்த வன்னிய மக்களைத்தான் பயன்படுத்துவீர்களா?'' என்றார் உணர்ச்சித் தெறிக்க.

அன்புமணிக்கு எதிராகக் கிளம்பியிருக்கிறது, புதிய பூகம்பம்!

- எம்.புண்ணியமூர்த்தி

படங்கள்: வி.ராஜேஷ்