''அணு உலைக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் தொடங்கும்போது, எந்தக் காரணம் கொண்டும் அரசியலுக்கு வர மாட்டோம் என்று உறுதியளித்து இருந்தோம். தேசிய அணுசக்திக் கொள்கை நாடு முழுவதும் விவாதிக்கப்பட வேண்டும்; வெளிப்படைத் தன்மை வேண்டும்; அதற்கான முயற்சிகளுக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்... என்று இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் கடிதம் எழுதியிருந்தோம். எந்தக் கட்சியிடம் இருந்தும் எங்களுக்குப் பதில் இல்லை. எங்களை ஆதரித்த பா.ம.க., ம.தி.மு.க., போன்ற கட்சிகளும் தேர்தல் நெருங்கியதும் எங்களை விட்டுவிட்டு, எங்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகளோடு உடன்பாடு செய்துகொண்டார்கள். நாங்கள் தனித்து விடப்பட்டோம். எனவேதான், இந்தப் போராட்டத்தை அரசியல் தளத்துக்கு கொண்டுசெல்ல முடிவெடுத்தோம்!'' - என்று படபடத்தார் அணு உலை போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியவரும், ஆம் ஆத்மி கட்சியின் கன்னியாகுமரி வேட்பாளருமான சுப.உதயகுமாரன். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பணம் கைமாறியதாகவும் ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படுகிறதே?''

''அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வரான மறுநாளே பிரசாந்த் பூஷண் எங்களை சந்தித்தார். ஆம் ஆத்மிக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்தார். எங்கள் மக்களுடன் விவாதித்தோம். நாங்கள் ஐந்து நிபந்தனைகளைச் சொன்னோம். அவர்கள் அதை ஒப்புக்கொண்டார்கள். மக்கள் முடிவின்படி கட்சியில் இணைந்தோம். அணு உலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, எங்களுக்கு எத்தனை கோடிகள் விலை வைக்கப்பட்டன என்பது உங்களுக்குத் தெரியாது. நான் விரும்பும் நாட்டில் சகல வசதிகளுடன் குடும்பத்தோடு குடியேற எனக்கு தூது அனுப்பப்பட்டது. அதற்கெல்லாம் மசியாத நானா இப்போது இணங்கிவிடப்போகிறேன்?''

''அணு உலைப் போராட்டத்தில் ஆம் ஆத்மியின் நிலைப்பாடு என்ன?''

'உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பும் சம்மதமும் இல்லாமல் அணுசக்தி திட்டம் உட்பட எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது என்பதுதான் ஆம் ஆத்மியின் நிலைப்பாடும். எங்களின் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவும் அங்கீகாரமும் கொடுப்பதாகவும் ஆம் ஆத்மி உறுதியளித்துள்ளது. இந்தியாவின் அணு சக்தி கொள்கை பற்றி நாடு முழுவதும் பரந்துபட்ட விவாதம் நடத்தி அதன் பிறகுதான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எங்களின் கொள்கைதான் அவர்களுடையதும்!''

''உங்களுக்கு வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது?''

''வெற்றி தோல்வியைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இந்த நாட்டை மீண்டும் பழைய அரசியல் வியாபாரிகளிடமே கொடுத்து உங்களின் எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வையும் நசுக்கப்போகிறீர்களா... அல்லது, மாற்று அரசியலுக்காக விளைந்து நிற்கும் எங்களை ஆதரிக்கப்போகிறீர்களா என்பதுதான் என் கேள்வி. அதற்கு தேர்தல் முடிவுகள் பதில் சொல்லும்!''

- ஜோ.ஸ்டாலின்

படம்: ஜெ.வேங்கடராஜ்