தமிழகத்தில் தனித்துக் களத்தில் இறங்கி இருக்கிறது காங்கிரஸ். 'தனித்துப் போட்டியிட்டால் டெபாசிட்கூட வாங்க முடியாது’ என்று பெரிய தலைகள் எல்லாம் ஒதுங்க, தேனி தொகுதியில் கடந்த இரண்டு முறையாகத் தொடர்ந்து எம்.பி-யாக இருந்துவரும் ஜே.எம்.ஆரூண், மீண்டும் அங்கே போட்டியிடுகிறார். படு ரணகளமாக இருக்கிறது ஆரூணின் பிரசாரம்.

தேர்தல் அறிவித்த முதல் நாள் பிரசாரத்திலேயே பல நூறு கார்களில் நகரை வலம் வந்து மற்ற கட்சிகளுக்குக் கிலியை உண்டாக்கியது ஆரூண் தரப்பு.

'காங்கிரஸுக்கு மவுசு இருக்கா என்று எனக்குத் தெரியாது; ஆனால், எனக்கு எப்போதும் ஏரியாவில் பவுசு இருக்கு’ என்று காட்டிய அந்த கார் ஊர்வலத்தைக் கண்டு மிரண்டுபோன மற்ற கட்சிகள், சம்பவத்தைத் தேர்தல் ஆணையத்தில் பற்றவைக்க... அவர்களும் வண்டிகளை சீஸ் பண்ணும் வேலையில் இறங்கினர்.

அடுத்த நாள், தேனியில் அ.தி.மு.க. பிரசாரத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வந்தபோது அ.தி.மு.க. சார்பில் போன அனைத்து வண்டிகளையும் வீடியோ எடுத்திருக்கிறது ஆரூணின் தரப்பு. 'பஸ், லாரி என்று அதிகமாக ஆட்களை ஏற்றிவந்த வீடியோவைக் காட்டி அ.தி.மு.க. மீதும் வழக்குப் போட வேண்டும். இந்த வண்டிகளையும் சீஸ் பண்ண வேண்டும்’ என்று மாவட்டத் தேர்தல் அதிகாரியான கலெக்டர் பழனிச்சாமிக்குக் குடைச்சலைக் கொடுத்தனர். அதனால், ஆரூண் வந்த கார் அணிவகுப்பைக் கண்டுகொள்ளவில்லை.

இந்தச் சம்பவத்தில் இருந்து ஆரூண் செல்லும் இடமெல்லாம் பிரச்னைதான். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே வைட்டமின் இறக்கப்பட்ட தொகுதி இது என்கிறார்கள் விவரம் அறிந்த தேனி வாக்காளர்கள்.

கடமலைக்குண்டு பகுதியில் ஆரூண் வாக்கு கேட்டு சென்றபோது, 'முல்லை பெரியாறு பிரச்னைக்கு நீங்கள் எதுவும் செய்தது இல்லை. இந்தத் தொகுதிக்கும் கடந்த 10 ஆண்டுகளாக ஏன் எதுவும் செய்யவில்லை?’ என்று தொகுதி மக்கள் கேட்டதும், ஆரூண் உடன் சென்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடைசியில் கைகலப்பில் முடிந்திருக்கிறது. கம்பத்திலும் அதேபோல பிரச்னை.

இருந்தாலும் ஆரூணின் 'கை’ ஓங்குவதாக நினைத்த மற்ற போட்டி கட்சிகள், ஆரூணை கார்னர் செய்ய வேண்டும் என்பதற்காக, ஆரூண் ரஷீத் என்ற நபரை சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்யவைத்தனர். கடுப்பாகிப்போன ஆரூண் அவரை அடுத்த நாளே அழைத்து மீடியாக்கள் முன்னிலையில், 'என் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எனது பெயர் கொண்ட ஒரு நபரை நிறுத்தி, எனது வாக்குகளைப் பிரிக்கப் பார்க்கின்றனர். அதற்கு இவரே சாட்சி’ என்று அந்த நபரை பேசவைத்தார். அவரும், ''என்னை ஆரூணுக்கு எதிராக ஓட்டுக்களைப் பிரிக்க சுயேச்சையாகத் தூண்டிவிட்டு நிறுத்தினார்கள். நான் இப்போது வாபஸ் வாங்குகிறேன்'' என பல்டி அடித்தார்.

இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி ஆரூண் தேனி நகரப் பகுதிகளில் பிரசாரம் செய்தார். நடமாடும் வண்டியில் நடன ஏற்பாடு செய்து இருந்தனர். குத்துப் பாட்டு, டான்ஸ் என்று களைகட்டியது பிரசாரம். மக்கள் கூடும் ஒவ்வொரு சந்திப்பிலும் மைக் பிடித்த ஆரூண், ''திண்டுக்கல் டு குமுளி வரை நான்கு வழிச் சாலை அமைத்தேன். அதற்கு 900 கோடி ரூபாய் ஒதுக்கினேன். பாதாள சாக்கடைக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கினேன். படிப்பதற்குக் கல்விக்கடன் நிறைய பேருக்கு வாங்கிக் கொடுத்தேன். ஆயிரக்கணக்கில் காற்றாலைகளை நிறுவினேன். முல்லை பெரியாறுக்காகக் குரல் கொடுத்தேன். முல்லை பெரியாறை அ.தி.மு.க. காலத்தில் எம்.ஜி.ஆர்-தான் கேரளத்துக்குத் தாரைவார்த்தார்'' என்று பிரசாரத்தைத் தொடர்ந்தார். 13-வது வார்டுக்குப் போனபோது இரவு ஒன்பது மணி. தி.மு.க. பிரதிநிதி சிற்றரசு என்பவர் ஆரூணிடம், ''கடந்த 10 ஆண்டுகளாக எதுவும் பண்ணவில்லையே... இப்போது எதற்காக வருகிறீர்கள்'' என்று கேட்க, ஆரூணின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் இறங்க, அந்த நேரம் பார்த்து கரன்ட் கட். இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி அடிதடி, கைகலப்பு என விவகாரம் முற்றியது.

அடுத்த ஐந்து நிமிடங்களில் சிற்றரசுவின் முகத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. அலற ஆரம்பித்தார் அவர்.

சிற்றரசுவிடம் பேசினோம். ''வாக்கு கேட்டு வந்த வேட்பாளரிடம், ' கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?’ என்று கேட்டதற்கு, அவருடன் இருக்கும் குண்டர்கள் கம்புகளைக்கொண்டு தாக்கினர். அவருடன் சஃபாரி அணிந்துவரும் ஆட்கள் எல்லாமே பயங்கரமான குற்றப் பின்னணி உள்ளவர்கள். பெண்களையும் தாக்கியுள்ளனர். போலீஸிடம் புகார் கொடுத்து, தேனி பெரியகுளம் சாலையில் சாலைமறியல் செய்தோம். தி.மு.க. சார்பில் அவர்மீது வழக்கு போட்டு உள்ளோம்'' என்றார்.

இதுபற்றி ஆரூணிடம் பேசினோம். ''என்னுடன் வந்த ஆட்கள் யாரும் அவரை அடிக்கவில்லை. அவர் குடித்துவிட்டு கலாட்டா செய்தார். அதனால் எங்களுடன் பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர், அவரைப் பிடித்து தள்ளிவிட்டார். தேனியில் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. அது பிடிக்காமல் இப்படிச் செய்கிறார்கள்'' என்றார்.

தேனியில் ரத்தம் கொட்ட ஆரம்பித்துள்ளது!

- சண்.சரவணக்குமார்

படங்கள்: வீ.சக்தி அருணகிரி