தமிழ்நாட்டில் ஐந்து முனை போட்டியில் மக்களை வைத்து உப்புமா கிண்டினால், ஆந்திராவில் பல முனை போட்டியில் பெரிய கல்யாண விருந்தே சமைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆந்திரா, தெலங்கானா பிரிவினை பிரச்னையில் துளிர்விட்ட கட்சிகளால் ஆந்திர அரசியல் இன்னும் சூடுபிடித்திருக்கிறது.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மொத்தம் 42 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இங்கு முதல்வராக இருந்த கிரண்குமார் ரெட்டி, தெலங்கானாவை தனி மாநிலமாகப் பிரித்ததால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இப்போது ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடப்பதால், அரசியல் கனல் ஆந்திராவில் அதிகமாகவே இருக்கிறது.

காங்கிரஸ்:

தெலங்கானா பிரச்னையில் முன்னுக்குப் பின் முரணாக முடிவு எடுத்ததால், காங்கிரஸ் தேய்ந்துகொண்டு வருகிறது என ஆந்திர காங்கிரஸ் நிர்வாகிகளே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். ஆந்திராவில் காங்கிரஸின் நிலைமை இப்போது அதலபாதாளத்தில் உள்ளது. ஆந்திராவில் சில நாட்களுக்கு முன் மாநகராட்சி, ஊராட்சித் தேர்தலில் போட்டியிடக்கூட காங்கிரஸ் வேட்பாளர்கள் இல்லாத நிலை. முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் மாற்று கட்சிகளுக்குத் தாவி, காங்கிரஸை கடுமையாக வறுத்தெடுக்கின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் என்ன சொல்லி வாக்கு சேகரிப்பது என்றே தெரியாமல் திக்குமுக்காடி நிற்கிறார்கள். தலைமை தேர்தல் நிர்வாகியாக சிரஞ்சீவியை காங்கிரஸ் நியமித்து இருக்கிறது. திரைப்படங்களில் பறந்து பறந்து எதிரிகளை அடித்தவர், இப்போது எதிர்க்கட்சிகளை வீழ்த்த பரபர பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இப்போது ஐ.சி.யூ-வில் இருக்கும் காங்கிரஸ், நாடாளுமன்றத் தேர்தலின் முடிவைப் பொறுத்தே பிழைத்து தாக்குப்பிடிக்குமா என்பது தெரியும்.

தெலங்கானா ராஷ்டிர சமிதி:

'தனி தெலங்கானா மாநிலம் அமைக்க காங்கிரஸ் முன்வந்து சம்மதித்தால், காங்கிரஸுடன் தெலங்கானா ராஷ்டிர சமிதியை இணைப்போம்’ என்று சந்திரசேகர ராவ் கூறியிருந்தார். பலகட்ட பரிசீலனைக்குப் பிறகு தனி தெலங்கானா மாநில கோரிக்கை நிறைவேறிவிட்டதால், தனது தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை காங்கிரஸுடன் சந்திரசேகர ராவ் இணைத்துவிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், காங்கிரஸுடன் இணையவில்லை. தனித்துப் போட்டியிட்டு தெலங்கானாவில் கூடுதல் இடங்களைக் கைப்பற்றத் திட்டமிட்டு வருகிறார். 'காங்கிரஸுடன் ஏன் சேரவில்லை?’ என்பதற்கு சந்திரசேகர ராவ் சொல்லும் காரணம் இதுதான்... ''காங்கிரஸ் மீது பல புகார்கள் இருக்கிறது. மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கான வாய்ப்பும் இல்லை என்றே கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அன்று தெலங்கானா போராட்டத்தை முன்னெடுத்தோம்... கிடைத்துவிட்டது. இப்போது நல்ல நிர்வாகத்தை தெலங்கானாவில் கொடுக்க வேண்டும் என்பதுதான் இலக்கு!'' என்கிறார். 'நம்பி மோசம் போயிட்டோம்’ என்ற ரீதியில் காங்கிரஸ் இந்தக் கட்சி மீது கடுப்புடன் இருக்கிறது. தனி தெலங்கானா அமைந்தவுடன் தெலுங்கு தேச கட்சியில் இருந்த பல தலைவர்கள், இதில் இணைந்தனர் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தெலங்கானாவில் ஆட்சி அமைக்கவும் திட்டமிட்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். சந்திரசேகர ராவ் திட்டம் நிறைவேறுமா என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகே தெரியவரும்.

ஜெய் சமய்காந்திரா

(ஜெய் ஒருங்கிணைந்த ஆந்திரா):

ஆந்திராவில் முதல்வராக இருந்த கிரண்குமார் ரெட்டியை, காங்கிரஸின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்த்தனர். 'ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது. அப்படி பிரித்தால் நான் காங்கிரஸைவிட்டு வெளியேறுவேன்’ என அறிவித்திருந்தார். அதேபோல, காங்கிரஸ் ஆதரவுடன் தெலங்கானா தனி மாநிலம் ஆனபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸில் இருந்து விலகி 'ஜெய் சமய்காந்திரா’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அப்போது அவர், ''தெலுங்கு மக்களின் மனநிலை அறியாமல் மத்திய அரசு மாநிலத்தைப் பிரித்து இருக்கிறது. மாநிலப் பிரிவினை மூலம் ஆந்திராவில் காங்கிரஸ் தற்கொலை செய்துகொண்டுள்ளது. இனி, ஆந்திராவில் காங்கிரஸுக்கு அழிவுப் பாதை’ எனச் சொன்னாலும் சொன்னார்... பல காங்கிரஸ் தலைவர்கள் இந்தக் கட்சிக்குத் தாவிவிட்டனர்.

ஜன சேனா:

சிரஞ்சீவி, தான் ஆரம்பித்த 'பிரஜா ராஜ்ஜியம்' கட்சியைக் கலைக்க... அவரது தம்பியான பவன் கல்யாண் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அதன் பிறகு, தீவிர அரசியலில் குதித்தார். 'ஜன சேனா’ என்ற கட்சியைத் தொடங்கினார். இப்போது மோடியுடன் சந்திப்பு, பி.ஜே.பி. மூத்த தலைவர்களுடன் கலந் துரையாடல் என தீயாக அரசியல் வேலை செய்துவருகிறார். இந்தத் தேர்தலில் ஜன சேனா கட்சி போட்டியிடாது என்று அறிவித்தவர், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் சொன்னார். சிரஞ்சீவி ரசிகர்கள் காங்கிரஸுக்கு ஆதரவாகவும், பவன் கல்யாண் ரசிகர்கள் மோடிக்கு ஆதரவாகவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பி.ஜே.பி. ஏக குஷியில் இருக்கிறது. 'வெற்றி பெறப்போவது சிரஞ்சீவியா, பவன் கல்யாணா? யாருக்கு செல்வாக்கு அதிகம்?’ என்ற எதிர்பார்ப்பில் ஆந்திர அரசியல் ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தெலுங்கு தேசம் - பி.ஜே.பி. கூட்டணி:

தெலுங்கு தேசமும் பி.ஜே.பி-யும் கூட்டணி சேருமா சேராதா என இழுபறி நீடித்த நிலையில், பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி இணைந்து இருக்கிறது. 2004-ம் ஆண்டில் இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தனர். பின்னர், சில பிரச்னைகளால் பிரிந்தவர்கள், மீண்டும் இணைந்திருக்கிறார்கள். மீண்டும் சேர்ந்த இந்த ஜோடி, வெற்றி ஜோடியாக இருக்குமா என்று அரசியல் அரங்கில் பலத்த எதிர்பார்ப்பு.

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்:

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். கட்சி தொடங்கியபோது தெலுங்கு தேசம், காங்கிரஸ் கட்சிகளில் இருந்து பலர் இந்தக் கட்சியில் சேர்ந்தனர். ஆந்திர மக்கள் ஜெகனின் மீது தாறுமாறாக நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். தெலங்கானா, ஆந்திரா என இரண்டையும் கைப்பற்றும் நோக்குடன் தீவிர வாக்கு சேகரிப்பில் இருக்கிறார் ஜெகன். மற்ற கட்சிகள் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸை அழிக்க நினைத்தாலும், மக்கள் செல்வாக்கு இருப்பதால் வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது இந்தக் கட்சி.

- நா.சிபிச்சக்கரவர்த்தி