ஸ்பெக்ட்ரம், ஈழம், மீனவர் என்று பெரிய பிரச்னைகளாக தலைவர்கள் பேசிப் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால், தமிழகத்தின் 16 தொகுதிகளை, ஆறு பிரச்னைகள் அவஸ்தைப்படுத்தி வருகின்றன. இந்தப் பிரச்னைகளின் சிலவற்றை அரசியல் கட்சிகள் கண்டுகொள்வதே இல்லை!

தமிழகத்தின் தலை முதல் கால் வரை சுமார் 16 நாடாளுமன்ற தொகுதிகளை மையமாகக்கொண்டு கிளம்பியிருக்கும் இந்தப் பிரச்னைகள் அந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிப்பவையாக இருப்பதால்தான் அந்தப் பகுதி மக்கள் பதறிப் போகிறார்கள். அந்தப் பிரச்னைகளை சமூக அமைப்புகளும் இயக்கங்களும் மனித உரிமைப் போராளிகளும் ஆவேசத்துடன் கையில் எடுத்துள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு விவகாரம் பற்றி பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் கூறுகிறார். ''கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் மீனவர்கள் இருக்கிறார்கள். நெல்லை தொகுதியில் சுமார் 40 ஆயிரம் மீனவர்கள், தூத்துக்குடி தொகுதியில் இரண்டு லட்சம் மீனவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்துக்கு எதிராக இருக்கிறார்கள். இந்த அணு உலை அந்தப் பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இவர்களைத் தவிர, அந்தப் பகுதியில் வாழும் உள்ளூர்வாசிகளுக்கும் அந்த அச்சம் அதிகமாக இருக்கிறது. அணு உலையை ஆதரிக்கும் கட்சிகளுக்கு மீனவர்கள் வாக்களிக்க மாட்டார்கள். இதுவரை தெருவில் போராடியவர்கள் இனி நாடாளுமன்றத்தில் வாதாடும் எண்ணத்தோடு இருக்கிறார்கள்.

போராட்டத்தை முன்னின்று வழிநடத்தி யவர்களில் சுப.உதயகுமாரன் கன்னியாகுமரி தொகுதியிலும், புஷ்பராயன் தூத்துக்குடி தொகுதியிலும், மை.பா.ஜேசுராஜ் நெல்லை தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். இந்த மூன்று தொகுதிவாசிகளும் தமிழகத்தின் பிரதான நான்கு கட்சிகள் மீதும் கோபமாக இருக்கிறார்கள். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிதான் அணு உலையைக் கொண்டுவர வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயல்பட்டது. இந்த மக்கள் பிரச்னையை தி.மு.க. காதுகொடுத்தே கேட்கவில்லை. அணுமின் நிலையம் வேண்டும் என்ற கொள்கையைத் தூக்கிப் பிடிக்கிற பி.ஜே.பி. மீது மக்கள் வெறுப்பு தெரிகிறது. அ.தி.மு.க. அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டதில் நான்கு பேர் உயிரிழந்ததை மக்கள் இன்னும் மறக்கவில்லை. இதே அரசு, இரண்டரை லட்சம் அப்பாவிகள் மீது வழக்குப் போட்டிருக்கிறது. 10,000 பேர் மீது தேசத்துரோக வழக்குகள் உள்ளன. இதையெல்லாம் வாபஸ் வாங்கும்படி உச்ச நீதிமன்றம் சொல்லியும் அ.தி.மு.க. அரசு இதுவரை கண்டுகொள்ளவே இல்லை. இப்படிப்பட்ட கட்சிகளுக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பை வரவிருக்கும் தேர்தலில் நிச்சயம் காட்டுவார்கள்'' என்கிறார்.

நியூட்ரினோ மற்றும் ஈனுலைகள் ஆபத்து பற்றியும் சுந்தர்ராஜன் தொடர்ந்தார். ''கூடங்குளம் அணு உலைக் கழிவுகளை கர்நாடக மாநிலம் கோலாரில் கொண்டுபோய் கொட்டப்போவதாக முதலில் அறிவித்தார்கள். அப்போது அங்கே ஆட்சி செய்துவந்த பி.ஜே.பி. அரசு உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் ஒரே ஒருநாள் மட்டுமே போராட்டம் செய்தார்கள். அவ்வளவுதான்! மத்திய அரசு உடனே அந்த எண்ணத்தைக் கைவிட்டதாக அறிவித்துவிட்டது. கர்நாடகத்தில் வேண்டாம் என்று சொல்கிற பி.ஜே.பி-யும் சரி, மற்ற கட்சியினரும் சரி... தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் அணுக்கழிவுகளைப் புதைக்கும் திட்டத்தை இதுவரை எதிர்க்காமல் மௌனம் சாதிக்கிறார்கள். சூரியனில் இருந்து வரும் நியூட்ரான் துகள்களை ஆய்வு செய்வதற்கு நியூட்டிரினோ என்று பெயர். இந்தப் பெயரை முகமூடியாக வைத்துக்கொண்டு, பின்னணியில் அணுக்கழிவுகளைப் பூமிக்குக் கீழே இரண்டு கி.மீ. ஆழத்தில் புதைப்பதுதான் மத்திய அரசின் திட்டம். அப்படி அணுக்கழிவுகளை புதைத்தால், அந்த ஏரியாவில் பல லட்சம் ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழல் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.

அணுமின் நிலைய ஆபத்தைவிட பல மடங்கு ஆபத்துகொண்ட ஈனுலைகளை கல்பாக்கத்தில் அமைக்கும் வேலையிலும் மத்திய அரசு இறங்கி இருக்கிறது. மொத்தம் மூன்று ஈனுலைகள் அமைப்பது அவர்களது திட்டம். அதில் ஒன்றைக் கட்டி முடித்துவிட்டனர். இரண்டுக்கு அனுமதியையும் பெற்றுவிட்டார்கள். இதேமாதிரி, ஈனுலைகளை ஏற்கெனவே ஆரம்பித்த ஃப்ரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் ஆபத்தை உணர்ந்து மூடிவிட்டனர். 1996-ம் ஆண்டு ஜப்பானில் ஈனுலை ஒன்று தீப்பிடித்தது. அத்தோடு அந்த உலையை மூடிவிட்டனர். அவ்வளவு ஆபத்து மிக்க ஈனுலைக¬ள் கல்பாக்கத்தில் வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். காஞ்சிபுரம் தொகுதியில் எனக்கு தெரிந்தவரையில், ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மல்லை சத்யா, மனிதநேய மக்கள் கட்சியினர் போன்ற சிலர் மட்டுமே அணு உலைக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகிறார்கள். வேறு எந்த அரசியல் கட்சியும் பெரிய அளவில் கண்டுகொள்ளவேயில்லை'' என்றார்..

கொங்கு மண்டலத்தில் கொந்தளிப்பைக் கிளப்பி வருகிறது கெய்ல் குழாய் பதிப்பு விவகாரம். இதுபற்றி ஈரோடு மாவட்டம் தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பொன்னையன், ''கேரள மாநிலம் கொச்சியில் இருந்து தமிழகத்தின் (ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி) ஏழு மாவட்டங்கள் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு குழாய் வழியே எரிவாயு கொண்டுசெல்லும் திட்டம் இது. இதை மத்திய அரசின் 'கெய்ல் இந்தியா’ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக இந்தப் பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 138 வருவாய் கிராமங்களில் விளைநிலங்களின் வழியே குழாய் பதித்து எரிவாயு கொண்டுசெல்வதற்கு விவசாயிகளிடையே பலத்த எதிர்ப்பு. இந்த விவகாரத்தை எதிர்த்து விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழு நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. தமிழக அரசு தன் பங்குக்கு எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளது. அதைத் தொடர்ந்து விளைநிலங்களில் குழாய்கள் பதிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த விவகாரத்தில், மக்கள் எதிர்ப்பதே... 'பி.எம்.பி. சட்டம் 1962'- என்ற சட்டத்தைத்தான். நிலத்துக்கு உரிய விவசாயிக்கும் முறையான நிவாரணம் இல்லை. ஆனால், நிலத்தின் அரசு மதிப்பில் 10 சதவிகிதம்தான் வழங்கப்படும். குழாய்க்கு ஏதாவது சேதாரம் ஏற்பட்டால், முதல் குற்றவாளியாக அந்த நிலத்துக்கு உரியவர் நிறுத்தப்படுவார் என்பதைக் கேள்விப்பட்டு அதிர்ந்துபோனார்கள் விவசாயிகள். இந்த மக்களுக்கு ஆதரவாக ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி, கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யான நடராஜன் ஆகியோர் களத்தில் நின்று போராடியதை இந்தப் பகுதி மக்கள் நினைத்துப் பார்க்கிறார்கள். பி.ஜே.பி., தி.மு.க. உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் மேடையில் திட்டத்துக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பியதோடு சர், வேறு எதுவும் செய்யவில்லை. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு ஏன் குழாய் பதிப்பில் அதீத அக்கறை காட்டியது? அ.தி.மு.க. அரசுதான் ஆரம்பத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் போட்டது. விஷன் 2013 என்ற பெயரில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முனைப்பு காட்டியது. ஆனால், மக்களிடம் காணப்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து, தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கெய்ல் குழாய் பதிப்பு திட்டத்தை எதிர்க்க ஆரம்பித்தது. ஆக, இந்த விவகாரத்தின் பின்விளைவுகளை மனதில் வைத்து மக்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்'' என்றார்.

டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் பற்றி திகில் கிளப்புகிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் பி.ஆர்.பாண்டியன். ''ஆழ்குழாய் கிணறு அமைத்து மீத்தேன் வாயுவை எடுத்தால், நிலத்தடி நீர் கெட்டுவிடும். கடல் நீர் உள்ளே புகுந்துவிடும். பாலைவனம் ஆகிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் மு.க. ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோதுதான் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார். அடுத்து வந்த ஜெயலலிதா அரசு, 'நாங்கள் நிபுணர் குழுவை அமைப்போம். அது மூன்று மாதத்தில் அறிக்கை தரும். அதன்படி, திட்டத்துக்கு எதிரான நடவடிக்கை எடுப்போம்’ என்றனர். பல மாதங்கள் ஓடிவிட்டன. எந்தக் குழுவையும் அமைத்தபாடில்லை. ஆனால், தேர்தல் பிரசார மேடையில் திட்டத்தை வர விடமாட்டோம் என்கிறார் முதல்வர். தஞ்சை தொகுதி தி.மு.க. டி.ஆர். பாலு தன் பங்குக்கு, திட்டத்தை எதிர்ப்பதாக இப்போது முழங்குகிறார். யாரைத்தான் நம்புவது? ஆனால், மக்கள் தெளிவான முடிவை எடுக்க இருக்கிறார்கள்'' என்கிறார்.

அனல் மின் நிலைய எதிர்ப்பு விவகாரத்தை விவரிக்கிறார் கம்யூனிஸ்ட் கட்சி மார்சிஸ்ட் லெனினிஸ்ட் - மக்கள் விடுதலை மையக்குழு உறுப்பினரும் மயிலாடுதுறை தொகுதியின் வேட்பாளருமான குணசேகரன்.

''காவிரி டெல்டா பகுதியில் பெரும்பாலும் தனியார்கள் முதலீட்டில் புதிய அனல் மின் நிலையங்கள் வரப்போகின்றன. நாகப்பட்டினம் தொகுதியில் 4, மயிலாடுதுறை தொகுதியில் 8 என 12 அனல் மின்நிலையங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பரிந்துரை செய்துள்ளன. அனல்மின் நிலையங்களில் பயன்படும் நிலக்கரியால் புவி வெப்பம் அடைதல் என்ற மிகப் பயங்கரச் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இதைக் கேள்விப்பட்டு, மக்கள் போராட்டம், வழக்கு வாய்தா என்று போய்... அவை வருவதை தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறோம். 18 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை விவசாயிகளிடமிருந்து வாங்கிவிட்டனர். அனல்மின் நிலையம் வந்தால் 61 மீனவ கிராமங்களில் முழுவதும் பாதிப்பு ஏற்படும். இங்குள்ள விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள், மீனவர்கள் எதிர்கால ஆபத்தை உணர்ந்து எங்கள் பக்கம் நிற்கிறார்கள். அதே நேரம், முக்கிய அரசியல் கட்சிகள் தனியார் முதலாளிகள் பக்கம் இருக்கிறார்கள். பெரும்பாலான திட்டங்கள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போடப்பட்டவை. அடுத்து வந்த அ.தி.மு.க. அரசும் மக்களின் போராட்டத்தை ஒடுக்குகிறது. நாங்கள் இந்தத் தேர்தலில் மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வை உண்டாக்கி கணிசமான ஓட்டை வாங்குவோம்'' என்கிறார்.

மேலே சொன்ன ஆறு பிரச்னைகள் ஜெயிக்கிற கட்சிக்கும் அடுத்து வருகிற கட்சிக்கும் இடையேயான ஒட்டு விகிதத்தை மாற்றி அமைக்கும் என்பது மட்டும் உறுதி!

- பாலகிஷன்

படங்கள்: எல்.ராஜேந்திரன், ரமேஷ் கந்தசாமி